''எத்தனையோ சேவைகள் இருந்தாலும், பிச்சைக்காரர்களோட குழந்தைகளுக்கு கல்வி தர்ற இந்த சேவை... எங்களுக்குத் தர்ற மனநிறைவை, வார்த்தைகள்ல சொல்லத் தெரியல!''

- அகம்மகிழ்கிறார்கள் உமா - முத்துராம் தம்பதியர். ஆவடி, பாலமேடுப்பேட்டையில் இவர்களின் 'சிறகு மாண்டிசோரி பள்ளி’யில், மழலைகளின் குரல்களுக்கு நடுவே நிகழ்ந்தது அவர்களுடனான நம் சந்திப்பு!

''நானும் என் கணவரும் பத்து வயசிலிருந்தே நண்பர்கள். மத்தவங்களுக்கு உதவுற குணம் சின்ன வயசுல இருந்தே எங்க ரெண்டு பேருக்குமே உண்டு. ஸ்கூல் படிச்சப்போ என்.எஸ்.எஸ்-ல சேர்ந்து பல்வேறு சமூக சேவைகளில் எங்களை ஈடுபடுத்திக்கிட்டோம். பள்ளி, கல்லூரி படிப்பு முடிஞ்ச பிறகும் அது தொடர... 'தொண்டு அமைப்பை ஆரம்பிச்சு, அதன் மூலமா உதவிகளை செய்யலாமே..?!’னு நண்பர்கள் சொன்னாங்க. அப்படி 13 வருஷத்துக்கு முன்ன உருவானதுதான் 'சுயம்' தொண்டு அமைப்பு! ஒரு கட்டத்துல வாழ்க்கையிலும் இணைஞ்சுட்டோம்'' என்று நேசம் பேசிய உமாவுக்கு, மூன்று வயதில் அபனி என்ற பெண் குழந்தை!

அவரைத் தொடர்ந்த முத்துராம், ''கல்வி மற்றும் மருத்துவம் பற்றிய விழிப்பு உணர்வை ஏழை மக்களுக்கு ஏற்படுத்துறதத்தான் முதல் கடமையா எடுத்து செயல்பட்டோம். நூற்றுக்கணக்கான பேருக்கு கல்வி, மருத்துவ உதவிகள் பெற வழிவகை செஞ்சுருக்கோம். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆளுமைத் திறன் பயிற்சி கொடுத்துட்டு வர்றோம். சிந்தாதிரிப்பேட்டை அரசுப் பள்ளியில 57 சதவிகிதமா இருந்த தேர்ச்சி விகிதம், எங்க பயிற்சிக்கு பிறகு, 87 சதவிகிதமா உயர்ந்திருக்கு'' என்றவர், பிச்சைக்காரர்களின் குழந்தைகள் மீது கவனம் திரும்பியது பற்றி தொடர்ந்தார்.

''கீழ்ப்பாக்கம் பிளாட்ஃபார பகுதியில இருக்கற பிச்சைக்கார குடும்பங்களின் வாழ்க்கையை, 'நடைபாதை பூக்கள்’ங்கற பேர்ல குறும்படமா எடுத்தோம். 'கல்வி கிடைக்காததால குழந்தைகளும் பிச்சை எடுக்கற' அவலத்தை சுட்டிக் காட்டினோம். கூடவே, 'இவங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்யணுமே’ங்கற எண்ணம் மனசுல முளைவிட்டுச்சு. படத்தைப் பார்த்த நடிகர் பார்த்திபன், 20 ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்து, 'அந்தக் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க உதவுங்க’னு சொன்னார்...''

- முத்துராம் சொன்ன இந்தப் புள்ளியில் இருந்துதான் ஆரம்பித்திருக்கிறது 'சிறகு’ பள்ளிக்கான பாதை!

அதைப் பற்றி பேசிய உமா, ''இன்னும் பல நல் உள்ளங்களோட நிதி உதவியையும் திரட்டி, 20 குழந்தைகளை படிக்க வெச்சோம். ஆனா, தினமும் ஸ்கூல் முடிஞ்சதும் அவங்களும் பிச்சை எடுக்கத்தான் செய்தாங்க. 'உண்டு, உறைவிடப் பள்ளியைத் தொடங்கினாதான், முழுமையா மாற்ற முடியும்'னு தீர்மானிச்சு, பெரும் போராட்டத்துக்குப் பிறகு, 2003-ம் வருஷம் 30 குழந்தைகளோட 'சிறகு மாண்டிசோரி பள்ளி’ ஆரம்பமாச்சு!'' என்றபோது, மரியாதை கூடியது.

''எங்க பள்ளிக்கூடத்துல ஏற்பட்ட தீ விபத்து... எங்கள ரொம்ப மனசொடிய வெச்சுட்டுது. நண்பர் ஒருவர், தான் ஸ்கூல் நடத்தின இடத்தை எங்களுக்காகத் தந்தார். ரெண்டாவது நாளே மறுபடியும் அங்க பள்ளியை ஆரம்பிச்சோம். இப்போ 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், சுமார் 500 மாணவர்கள்னு படிக்கறாங்க. அதில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பிச்சைக்காரர்களோட குழந்தைகள். இந்த சேவைக்கு கை கொடுக்குற எல்லாருக்கும் நன்றிகள் கோடி!

ஒரு சேவையா இல்ல... எங்க கடமையா நினைச்சு இதை செய்துட்டு வர்றோம். இனி பிச்சைக்காரர்களோட குழந்தைகளும் டாக்டர், இன்ஜினீயர், கலெக்டர் ஆவாங்க. சொல்லும்போதே அவ்வளவு சந்தோஷமா இருக்கு!''

- நிறைவில் நெகிழ்ந்து முடித்தனர் உமா- முத்துராம் தம்பதியர்!