நகைச்சுவை புயலின் நவரச தொடர்

என்னையப் பெத்த ஆத்தா அம்மாக்களா... எந்தாய புள்ளைகளா... ஒண்ணுவிட்டுப் பொறந்த ஒறவுகளா... ஒரு வவுத்துல பொறக்காட்டியும்... ஒண்ணுமண்ணா உசுரோட கலந்துருக்கற அக்கா தங்கச்சிகளா... ஒங்க அத்தன பேரோடயும் இத்தன மாசமா பேசிச் சிரிச்சதுல எனக்கு அம்புட்டு சந்தோசம். ஒங்கள சிரிக்க வைக்கிற வெதமாத்தேன் என்னைய பேசச் சொன்னாக. ஆனா, உண்மையில சொல்லணும்னா... ஒங்ககிட்ட எல்லாம் மனசு விட்டுப் பேசினதுல எனக்குத்தேன் அம்புட்டு சந்தோசம்.

வாழ்க்கைங்கற கயிறு, நம்மள எங்கெங்கேயோ கட்டி இழுத்துக்கிட்டுப் போயிடுது. ஒக்காந்து ஒரு வாயி சோறு திங்க நேரமில்லாம பரபரப்பா திரிஞ்சப்ப, ஏன் இந்தளவுக்கு வேகமா ஓடுறோம்கிற நெனப்பே எனக்கு வரல. தடைபட்டு நின்னப்ப... 'ஏன் நம்ம ஓட்டம் தடைபட்டுச்சு? நாம என்ன தப்பு பண்ணினோம்?’ங்கிற வேதனை மனச கொடைய ஆரம்பிச்சுது. ஆனா, அந்தக் கொடைச்சல் அஞ்சு நாளுகூட எம்மனசுல தங்கி இருக்காது. 'மனைவி, மக்களுக்காகத்தானே இந்த சம்பாத்தியம்? ஆனா, அவுககூட மனசுவிட்டுப் பேசவோ சிரிக்கவோ நேரம் இல்லைனா... எதுக்கு இந்த பொழப்பு?'னு மனசுக்குள்ள நியாயமான கேள்வி பொறந்துச்சு.

ஆறு, எல்லா காலமும் ஓடுறது இல்ல. அருவி, எல்லா நேரமும் கொட்டுறது இல்ல. அததுக்கு ஒரு சீசன் இருக்கு. ஒரு சீசன்ல பூக்களா சிரிக்கிற மரம்... அடுத்த சீசன்ல இலைகளகூட உதிர்த்துட்டு... மொட்ட மரமா நிக்குது. வாழ்க்கையும் இந்த மாதிரிதேன். எல்லா நேரத்துலயும் செயிச்சுக்கிட்டே இருந்தோம்னா... போரடிச்சுப் போயிரும். அந்த வெற்றிக்கும் அர்த்தம் இல்லாமப் போயிடும். 12 வருசத்துக்கு ஒரு தடவை பூக்கறதாலதேன் குறிஞ்சிப்பூவுக்குப் பெருமை. டெய்லி பூத்துச்சுனா... சீண்டுறதுக்கு ஆளு இருக்காது!

ஒரு நேரத்துல நம்மள வாயார வாழ்த்துற ஒலகம், வேற நேரத்துல வசமாறி தூத்தவுஞ் செய்யுது. நாங்கூட ஒரு படத்துல சொல்லுவேனே... 'அது நாற வாயி... இது வேற வாயி’னு. அந்த டயலாக் மாதிரிதேன் இங்க இருக்குற எல்லா மனுசங்களும். எதுக்குத் திட்டுறாங்க... எதுக்கு வாழ்த்துறாங்கனு நமக்குத் தெரியாது. வாழ்த்துறப்ப கேட்டுக்கணும்... தூத்துறப்ப காதப் பொத்திக்கிட்டுப் போயிக்கிட்டே இருக்கணும்.

நம்மளோட வாழ்க்கை ரொம்ப சுவாரசியமானது. சந்தோசம், துக்கம்னு கலந்துகட்டி வாழப்போற இந்த வாழ்க்கையில கடைசி மிச்சமா நாம விட்டுட்டுப் போகப்போறது என்னனு யோசிச்சுப் பாருங்க... கோடி கோடியா சம்பாதிச்சாலும் எதையும் கொண்டு போகப்போறது கெடயாது. அதெல்லாம் இன்னிக்கு இருக்கும்... நாளைக்கு இருந்த எடம் தெரியாமப் போயிடும். நம்மளோட வாரிசுக மட்டுந்தேன் நம்மளோட மிச்சமா இந்த மண்ணுல நீடிக்கப் போறாக. ஏழு தலமொற தாண்டியும் நம்மளோட ஜீன் நம்ம சந்ததிங்ககிட்ட தொடரும்னு டாக்டருக சொல்றாக. காலம் முழுக்கத் தொடரப்போற நம்ம சந்ததிகளை சரியா வழிநடத்துறதுதேன் நாம செய்ய வேண்டிய முக்கியமான வேலை.

பரபரப்பா ஓடி... பல ஒசரங்களத் தொட்டுத் திரும்பிய பெறகுதேன், இந்தப் பக்குவம் எனக்குப் புடிபட்டுச்சு. பொண்ணுக்கு வரன் பாக்கணும், பையனோட படிப்பக் கவனிக்கணும்னு ஒரு பொறுப்புள்ள தகப்பனா நா இப்பத்தேன் நடக்கத் தொடங்கி இருக்கேன். என்னோட ஒடம்பொறப்புகளான ஒங்ககிட்டயும் நா வலியுறுத்திச் சொல்ல விரும்புறது இதத்தேன்... மொதல்ல ஒங்களோட கொழந்தைங்கள கவனிங்க. இன்னைய தலமொற கட்டுப்படுத்த ஆளு இல்லாம தறிகெட்டுத் திரியுது. சின்ன வயசுலேயே போத, பொகைனு அடிமையாகி... சாதிக்க வேண்டிய நேரத்துல சின்னாபின்னமாகிப் போயிடுதுக. என்னதேன் சொதந்திரமான காலமா இருந்தாலும், கண்ணுங்கருத்துமா இருந்து கடிவாளம் போட்டாத்தேன் நம்ம புள்ளைகள நாம கட்டுக்கோப்பா வளர்க்க முடியும்.

ஒரு வருசத்துக்கு முன்ன, மதுரைக்கு வந்திருந்தப்ப... வீட்டுப் பக்கமா நடந்துகிட்டு இருந்தேன். அப்ப ஒரு ஆளு, தன் மகன போட்டு அடிச்சுக்கிட்டு இருந்தாரு. கம்பும் கையுமா சாமியாடிக்கிட்டு நின்னவர புடிச்சு மடக்கி, ''ஒரு சின்னப் பையன போட்டு இந்த அடி அடிக்கிறியே... நியாயமாய்யா?''னு கேட்டேன். ''பள்ளிக்கொடத்துக்குப் போகாம அடம் புடிக்கிறாண்ணே... என்னய மாதிரியே இவனும் நாலெழுத்து தெரியாத பயலா போயிடக் கூடாதேனுதான் அடிக்கிறேன்''னு சொன்னாரு.

அவர ஒக்கார வெச்சு, ''புள்ளைங்கள நாணல் மாதிரி வளக்கணும்யா... அவங்க இஷ்டத்துக்கு விட்டு, அவங்க போக்குலேயே போயி சரி பண்ணணும். மொதல்ல அவனுக்கு என்ன விருப்பம்னு கேளு... ரெண்டு நாளு பள்ளிக்கொடம் போகலனா ஒண்ணும் தலமுழுகி போயிடாது''னு அறிவுரை சொன்னேன்.

பையனக் கூப்பிட்டு ''நீ இன்னிக்கு பள்ளிக்கொடம் போக வேணாம். ஒனக்கு என்ன விருப்பம்னு சொல்லு''னு சொன் னேன். ''படத்துக்குப் போகணும்''னான். ''சரி, இன்னிக்கு படத்துக்குப் போ. ஆனா, நாளைக்கு சமத்தா பள்ளிக்கொடம் போகணும். சரியா..?''னு கேட்டேன். சந்தோசமா தலயாட்டினான். நானே காசு கொடுத்து அனுப்பிட்டு, அவனோட அப்பாவுக்கும் தெகிரியம் சொல்லிட்டுக் கௌம்பினேன்.

ரெண்டு நாளு கழிச்சு அந்தப் பையனோட அப்பா அலறியடிச்சுக்கிட்டு போன் பண்ணாரு. ''ஓம்பேச்சக் கேட்டு நாசமா போயிட்டேன்யா... படத்துக்குப் போறேன்னு சொல்லிட்டுப் போனவன் ரெண்டு நாளா வீடு திரும்பல. எங்க தேடியும் கெடைக்கலய்யா''னு அழ ஆரம்பிச்சிட் டாரு. இன்னைய காலத்துப் புள்ளைங்களோட கொணம் எனக்கு அப்பத்தேன் புரிஞ்சுது.

அப்பனும் ஆத்தாவும் நம்மள அடிச்சு வளர்த்ததோட அர்த்தம் இப்போதேன் வெளங்குது. 'ஒடிச்சு வளக்காத முருங்கையும்... அடிச்சு வளக்காத புள்ளையும் சரிப்படாது’னு சொலவட சொல்லி வெச்சாக மூத்தவுக. கண்டிக்க வேண்டிய நேரத்துல கண்டிச்சு, கவனிக்க வேண்டிய நேரத்துல கவனிச்சு வளர்த்தாத்தேன் நம்ம புள்ளைங்க நம்ம பேரு சொல்ற புள்ளைகளா வளரும்.

அதேபோல... பொண்ணப் பெத்தவங்க வயித்துல நெருப்பக் கட்டிக்கிட்டு வாழுற காலம் இது. ஒரு நிமிசங் கண்ணசந்தாலும் பொண்ணக் காப்பாத்துறது கஷ்டங்கிற நெலையாகிடுச்சு. சடங்காகுகிற பொண்ணுக்கு கிராமத்துல தண்ணி ஊத்திப் பாட்டுப் பாடுவாக...

'ஆலமரக் கொழுந்தா
வாழவந்த மகளே...
சூழ வந்த கூட்டமெல்லாம்
சொந்தமடி ஒனக்கு...
ஊரு மெச்ச வாழணும்
பேரு சொல்ல வாழணும்
லட்சத்துல மெதந்தாலும் - மனசுல
அச்சத்தோட வாழணும்.’

வயசுக்கு வந்த பொண்ணு எந்தளவுக்கு பக்குவமா நடக்கணும்கிறத அருமையா சொல்லுற பாட்டு இது. ஆனா, இன்னிக்கு எத்தன வூட்டுல சடங்கு சுத்துறப்ப இப்படியெல்லாம் அறிவுர சொல்லிப் பாடுறாக? ஆபீஸு, அலுவல்னு ஓடிக்கிட்டு புள்ளைங்கள கவனிக்க மறந்துடற பெத்தவங்க கொஞ்சமா நஞ்சமா?

சரி, தாயா புள்ளைகளா... நீங்க வேற நா வேற இல்ல... நாம எல்லாரும் ஒரு வவுத்துப் புள்ளைகதேன். ஒங்ககூட இத்தன மாசமா பேசுனதுல எனக்கு எம்புட்டு சந்தோசம் தெரியுமா? பிளைட்டுல போறப்பகூட ஒரு அம்மா எந்திரிச்சு வந்து, ''ஒங்க தம்பியப் பத்தி எழுதியிருந்தத படிச்சுட்டு அழுதுட்டேன் சார்''னு சொன்னாக. எப்படியோ போன் நம்பரு புடிச்சுப்பேசுன ஒரு தங்கச்சி, ''மருமக - மாமியா பத்தி நீங்க எழுதியத படிச்சேன். எம்மாமியாவும் அவ்வளவு தங்கமானவுக''னு குடும்ப விசயத்த சொந்தக்காரன் மாதிரி எங்கிட்ட சொன்னுச்சு. 'அவள் விகடன்’ மூலமா எனக்கு இப்போ ஊருக்கு ஊரு ஆயிரக்கணக்கான சொந்தக்காரங்க இருக்காக. ஒங்க எல்லாருக்கும் நன்றி சொல்ற இந்த நேரத்துல மறுபடியும் நா வலியுறுத்த விரும்புறது... ஒங்க புள்ளைங்களை ஒழுங்கா பாத்துக்கங்க தாயிகளா!

இன்னொரு
சந்தர்ப்பத்துல சந்திப்போம்!
தொகுப்பு: இரா.சரவணன்