Published:Updated:

குட்டீஸ் குறும்பு

வாசகிகள் பக்கம், ஓவியங்கள்: ஹரன்

குட்டீஸ் குறும்பு

வாசகிகள் பக்கம், ஓவியங்கள்: ஹரன்

Published:Updated:

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

குட்டீஸ் குறும்பு

150

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'கவுண்டமணி கோத்ரம்’!

குட்டீஸ் குறும்பு

ஆறு வயதாகும் என்னுடைய அக்கா பேத்தி ராஜி, தமிழ் வாசிக்கும் தகராறு... சிரிப்போ சிரிப்பு. அன்றும் அப்படித்தான் ஒவ்வொரு பேப்பராக வாசித்துக் கொண்டிருந்தாள். ஒரு பேப்பரை கையில் வைத்துக் கொண்டு, 'கவுண்டமணி கோத்ரம்’ என்று அவள் வாசிக்க, அனைவரும் சட்டென திரும்பி அவள் கையிலிருந்த பேப்பரைப் பார்த்தோம். அது ஒரு ஜாதகம். 'கவுண்டின்ய கோத்திர’த்தைத்தான் வாண்டு 'கவுண்டமணி’ ஆக்கியது என்று புரிந்தபோது, சிரிப்போ சிரிப்புதான்!

- ஜெயந்தி நாராயண், மும்பை

'கொ(ல்)லை' பிள்ளையார்!

குட்டீஸ் குறும்பு

அன்று பூஜை செய்து கொண்டிருந்தபோது, என் இளைய பெண் ஓடி வந்து, ''அம்மா... கொலை பிள்ளையாருக்கு பூ கொடு...'' என்றாள் அவசரத்துடன். வீட்டுக்கு வந்திருந்த விருந்தினர் ஒருவர் புரியாமல் விழிக்க... ''அது ஒண்ணுமில்ல... கொல்லையில இருக்குற துளசி மாடத்துல அவ புதுசா ஒரு பிள்ளையார் பொம்மை வெச்சு கும்பிடறா. அவரைத்தான் 'கொலை’காரப் பிள்ளையார் ஆக்கிட்டா!'' என்று காலாய்த்து விளக்கம் அளித்தாள் என் மூத்த பெண்.

என்னவென்று புரியவில்லை என்றாலும், எங்களுடன் சேர்ந்து சிரித்தாள் சின்னச் சுட்டி!

- எம்.ராஜலஷ்மி, சிட்லபாக்கம்

மாட்டு நூடுல்ஸ்!

குட்டீஸ் குறும்பு

அன்று எங்கள் ஃப்ளாட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில் பிராகாரத்தைச் சுற்றி வந்துகொண்டிருந்தோம். அப்போது கோயில் மாடு, அவ்வழியில் வைக் கோல் பிரியை மென்று கொண்டிருந்தது. சுருள் சுருளாக இருந்த வைக்கோல் பிரியைப் பார்த்த என் ஐந்து வயதுப் பெண், ''அம்மா... இதுதான் மாடு சாப்பிடுற நூடுல்ஸா..?’' என்று கேட்க, பிராகாரமே கலகலப்பானது சிரிப்பொலிகளால்!

- எஸ்.பிரேமா, நெசப்பாக்கம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism