Published:Updated:

சித்திரக்கதி...சிந்தனைக்கத்தி !

ம.மோகன் ,படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

சித்திரக்கதி...சிந்தனைக்கத்தி !

ம.மோகன் ,படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
##~##

 துயரத்தில் அழுபவளின்
தேம்பலில்
உலகத்துக்கு சாம்பல் நிறம்
வந்துவிடுகிறது
கைவிடப்பட்ட
அவளின் ஒரு கேவலில்
என் காலுக்குக் கீழே
தரை நழுவத் தொடங்குகிறது
கருணை கருணை
என்று
முகம் தெரியாதவள்
இறைஞ்சும்போது
இயலாமையில்
தோள்வலிக்கிறது
பெண் அழும் ஒவ்வொரு
இடமும்
கௌரவர் சபைதானோ?

- இப்படி ஒவ்வொரு ஓவியத்தையும் கவிஞர் சங்கர ராம சுப்பிரமணிய னின் கவிதைகள் வர்ணிக்க... சென்னை, லலித் கலா அகாடமியில் செப்டம்பர் 10 முதல் 16 வரை 'இன்னர் ஃப்ளோ' (Inner Flow) என்கிற பெயரில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சி... கொஞ்சம் ஸ்பெஷலாகவே இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'சித்திரக்கதி’ எனும் மராட்டிய ஓவிய மரபின் சாராம்சம் கொண்டு, மகாபாரதக் கூத்தினை மையமாக வைத்து, ஏழு ஓவியர்களின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவர்களில் சுரேஷ் தவிர, மற்ற ஆறுபேரும் பெண்கள்! மீனாட்சி மதன், வைஷ்ணவி ஸ்ரீகாந்த், சண்முகப்ரியா, இந்திரா சேஷாத்ரி, ஷோபா ராஜகோபாலன் மற்றும் ராஜஸ்ரீ மணிகண்டன் என்று தூரிகைப் பெண்களின் ஓவியக் கூடாரமாகவே அது இருந்தது!

சித்திரக்கதி...சிந்தனைக்கத்தி !

''இதிகாசங்களில் வாசித்து உணர முடியாத பல கதாபாத்திரங்களின் சம்பவங்களை, எளிதாக மனதில் ஆணி அடித்து மாட்டிவிடும்... பாரத கூத்துக்கலை! அபிமன்யு, அரவான், திரௌபதி என்று பண்டைய இதிகாச கதாபாத்திரங்களை, புதியமுயற்சியில் பழமை மாறாமல் மீட்டுவர முயன்றார் ஓவியர் பாலாஜி சீனிவாசன். அதன் வெளிப்பாடுதான், இந்த ஓவியங்கள். அவர்தான் எங்களின் குரு!

சித்திரக்கதி...சிந்தனைக்கத்தி !

தற்போதுள்ள காட்சி ஊடகங்களைப்போல, ஒன்றிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு எல்லாம் தெருக்கூத்து, கோயில் சடங்குகள்தான் சமுதாய பிரச்னைகளை எளிதாக எடுத்துச் சொல்வதற்கான வழி. தீர்க்க முடியாத மன உணர்ச்சிகளுக்கும், திருப்பங்களுக்கும் அந்த கூத்து நிகழ்வின் வழியே தீர்வு கண்டிருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அந்த வழக்கங்கள் இங்கே மறைந்து கொண்டிருக்கின்றன.

சித்திரக்கதி...சிந்தனைக்கத்தி !

அதனை எல்லாம் மீண்டும் புதுப்பிக்கும் இந்த அனுபவம்... ரொம்பவே சந்தோஷத்தை கொடுக்கிறது. குறிப்பாக 200, 300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புகழ் பெற்று வரும் மராட்டிய 'சித்திரக்கதி' பாணியில் ஓவியங்களை காட்சிப்படுத்தியதை சிறப்பாக நினைக்கிறோம். மகாபாரதத்தின் பல்வேறு கதாபாத்திரங்களை ஒரு சேர, ஒரே இடத்தில் பார்த்து பலரும் வியந்து பாராட்டுகிறார்கள். அதுதான் எங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி!''

- கரங்களில் தூரிகைகளும், கண்களில் வண்ணங்களும் ஒளிரச் சிரிக்கிறார்கள், அந்த தூரிகைப் பெண்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism