Published:Updated:

பணம் கொட்டும் கேட்டரிங் படிப்பு!

சா.வடிவரசு படங்கள்: ச.இரா.ஸ்ரீதர், ரா.மூகாம்பிகை

பணம் கொட்டும் கேட்டரிங் படிப்பு!

சா.வடிவரசு படங்கள்: ச.இரா.ஸ்ரீதர், ரா.மூகாம்பிகை

Published:Updated:
##~##

''தங்கள் பிள்ளைகள் டாக்டராக வேண்டும், இன்ஜினீயராக வேண்டும். பி.எட் படிக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு பலப்பல கனவுகள். ஆனால்... கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பைத் தேர்வு செய்வதில் பெரும்பாலானவர்களுக்கு விருப்பமே இருப்பதில்லை. 'சமையல் செய்யும் வேலை' என்றே சுருக்கிப் பார்க்கின்றனர். எல்லா துறைகளிலும் பெண்கள் சாதிக்கக் கிளம்பிவிட்டார்கள். ஆனால், அவர்களுக்கு நெருக்கமான சமையல் துறை படிப்புகளை அவர்களும் விரும்பிப் படிப்பதில்லை. இத்தனைக்கும், உள்ளூர் ஹோட்டல்களில் இருந்து... சர்வதேச ஸ்டார் ஹோட்டல்கள் வரை இவர்களுக்கான தேவையும், சம்பளமும் மிக மதிப்பானது...''

- ஒரு தடவை, 'மால்குடி’ கவிதாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் ஆதங்கத்தோடு சொன்ன வார்த்தைகள் இவை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை, சவேரா ஹோட்டலில் இருக்கும் 'மால்குடி கிச்சன்' ரெஸ்டாரன்ட்டின் தலைமை அதிகாரி எனும் முக்கிய பொறுப்பில் உள்ள அவரை தொடர்ந்து பேசவிட்டபோது...

''சமையல் கலை, இன்றைய நவீன சூழலில் பெரும் தொழிலாக வளர்ந்திருக்கிறது. உணவு தயாரிப்பு, சுற்றுலா, ஹோட்டல் நிர்வாகம் ஆகிய எல்லாமே ஒன்றுடன் ஒன்று கைகோத்து இயங்கும் துறைகள். எனவே, சமையல் பற்றிய படிப்புகள் இந்த எல்லா துறைகளிலும் உலக அளவில் பணி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இவற்றில் வேலைவாய்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஆனால், நம்நாட்டில் அதைப் பூர்த்தி செய்வதில் பற்றாக்குறையே நிலவுகிறது. என் 20 வருட அனுபவத்தில், இத்துறைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவாக இருப்பதை வேதனையோடு கவனித்து வருகிறேன். காலம் காலமாக பெண்கள் வசம்தான் சமையலறை. ஆனால், ஹோட்டல்களின் சமையலறை தலைமையை ஏற்க பெண்கள் முன் வராதது முரண்'' என்று சொன்னார்.

பணம் கொட்டும் கேட்டரிங் படிப்பு!

இந்த விஷயத்தை அப்படியே மத்திய அரசின் சார்பில் சென்னையில் இயங்கிவரும் 'இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்' கல்லூரியின் முதல்வர் ராஜமோகன் முன்பாக வைத்தபோது... அவருக்கும் அதே ஆதங்கம்தான்.

பணம் கொட்டும் கேட்டரிங் படிப்பு!

''தமிழ்நாட்டில் சமையல் துறை படிப்புகளைத் தேர்ந்தெடுப்பவர்களின் சதவிகிதம் மிகக் குறைவாக உள்ளது. சென்ற வருடம் அரசு கல்லூரிகளுக்கான தேசிய அளவிலான கவுன்சலிங்குக்கு 9,000 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். அதில் வெறும் 10% பேர்தான் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். வடஇந்தியர்களுக்கு இப்படிப்பின் முக்கியத்துவம் புரிகிறது. ஆனால், நம் மக்களுக்கு இன்னும் தெரியவில்லை. மேலும், பெண்களுக்கான துறையாகத் திகழ வேண்டிய இதில், அவர்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பதும் அதிர்ச்சி. எங்கள் கல்லூரியில் படிக்கும் 700 மாணவர்களில் 7% மட்டுமே பெண்கள். மாநில அரசு சார்பாக திருச்சியில் இயங்கி வரும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் 60 இடங்கள் உள்ளன. ஆனால், அதில் வெறும் 18 பேர்தான் படிக்கிறார்கள்.

சமையல் மட்டுமல்ல... அது தொடர்பான பல விஷயங்களை உள்ளடக்கிய கேட்டரிங் டெக்னாலஜி பற்றியும், ஹோட்டல் சம்பந்தப்பட்ட ரிசப்ஷன், ரூம் சர்வீஸ், விருந்தினர்களை உபசரிப்பது, ஹோட்டல் பராமரிப்பு போன்ற இன்னும் பல்வேறு விஷயங்களையும் உள்ளடக்கியதுதான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு'' என்று விளக்கமாக சொன்ன ராஜமோகன், அதற்கான வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விவரங்களையும் தந்தார்.

பணம் கொட்டும் கேட்டரிங் படிப்பு!

''பி.ஏ, கலினரி ஆர்ட் படிப்பை முடித்தவர்கள், பலவித செஃப்கள் (Sous chef, Banquet chef, Restaurant chef, Personal chef), சமையலறை மேலாளர், உணவு சேவை இயக்குநர், உணவு அலங்கரிப்பாளர் என பலவிதமான பணிகளுக்குத் தகுதி பெறுவார்கள். விமானம், கப்பல், ரயில்வே, மருத்துவமனைகள், சுற்றுலா துறை என பல துறைகளிலும் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

படிப்பை முடித்து, ஹோட்டலில் செஃப் ஆக பணியில் சேர்பவர்களுக்கு ஆரம்பத்தில் மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் நிச்சயம். ஹோம் சயின்ஸ் முடித்தவர்கள் உணவு அறிவியல் துறை நிபுணராகவும், விளையாட்டுத் துறை ஆலோசக ராகவும், பன்னாட்டு நிறுவனங்களில் ஊழியர் நலப் பணியாளராகவும் வேலை வாய்ப்புகள் பெறலாம். இதில், இளநிலை முடித்தவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் மற்றும் முதுநிலை முடித்தவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் ஆரம்பகட்ட சம்பளம் கியாரன்டி. மூன்று வருடங்களுக்குள் 50 ஆயிரத்துக்கும் மேல் சம்பளத்தை எட்ட முடியும்!

மூன்றாண்டு டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு இலவச கல்வி, தங்குமிடம், ஸ்காலர்ஷிப் என பல சலுகைகள் உள்ளன. இதுபோல நிறைய சலுகைகள் உள்ளன. எனவே, பெற்றோர்களும் மாணவர்களும் நம்பிக்கையுடன் கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகளை 'டிக்’ செய்யுங்கள்...

பணம் கொட்டும் கேட்டரிங் படிப்பு!

வளமான வாழ்க்கை நிச்சயம்!'' என்றார் ராஜமோகன்.

'சரி, இந்தப் படிப்பு குறித்து, அதை படித்து வருபவர்கள் என்ன நினைக்கிறார்கள்..?'

சென்னை, கொரட்டூரில் இருக்கும் பக்தவச்சலம் நினைவு மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி, ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கும் சுஜாதாவிடம் கேட்டபோது...

''ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பவர்களுக்கு ஃப்ரென்ட் ஆபீஸில் ஆரம்பித்து லாபி மேனேஜர், கெஸ்ட் ரிலேஷன்ஸ், எக்ஸிகியூடிவ் அக்கவுன்டன்ட், ரிசப்ஷனிஸ்ட், பெல் கேப்டன் என பல பணிகளுக்கும் செல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால், இன்னும் இந்தப் படிப்பைப் பற்றிய சரியான விழிப்பு உணர்வுதான் இங்கே இல்லை. என்னிடம்கூட, 'கேட்டரிங்கா படிக்கப் போற..?’ என்று என் தோழிகளே கேட்டிருக்கிறார்கள். அவர்கள் படிக்கும் டிகிரிக்கு... வேலை உத்தரவாதம் குறைவு. ஆனால், எனக்கு படிப்பை முடித்தவுடன் நிச்சயம் காத் திருக்கின்றன பணியிடங்கள் பல. அப்போது புரியும் அவர்களுக்கு இந்தப் படிப்பின் வேல்யூ!'' என்றார் சுஜாதா புன்னகையுடன்!

படிப்புகள் பலவிதம்!

மத்திய அரசின் 'இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்' கல்வி நிறுவனங்கள் நாடு முழுவதும் 19 இடங்களில் உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையில் மட்டுமே இயங்கிவருகிறது. இவற்றில்... இரண்டு மாத சான்றிதழ் பயிற்சி; ஓராண்டு, இரண்டாண்டுகள், மூன்று ஆண்டுகள் கொண்ட டிப்ளமா படிப்புகள்; பி.எஸ்சி, கேட்டரிங் சயின்ஸ் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் (3 ஆண்டுகள்), பி.ஏ, கலினரி ஆர்ட் (B.A, Culinary Art), பி.ஹெச்.எம். ஹோட்டல் மேனேஜ்மென்ட் (4 ஆண்டுகள்) போன்ற இளநிலை படிப்புகள்; மற்றும் முதுநிலை படிப்புகள் என்று பலவிதமான படிப்புகள் உள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism