Published:Updated:

அது தாம்பத்யம் இல்லை... பாலியல் வன்கொடுமை !

ம.மோகன், படம்: சொ.பாலசுப்ரமணியன்

அது தாம்பத்யம் இல்லை... பாலியல் வன்கொடுமை !

ம.மோகன், படம்: சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
##~##

'திருச்சியை சேர்ந்த வெங்கடேசன், ஒரு பெண்ணை (பெயர் தவிர்க்கப்படுகிறது) கடந்த செப்டம்பர் 12 அன்று திருமணம் செய்திருக்கிறார். அன்றே மணப்பெண் வீட்டில் முதலிரவு. ஆனால், பதற்றத்துடன் இருந்த புதுப்பெண், கணவரை நெருங்கவிடவில்லை. வெங்கடேசன் பிடிவாதமாக நெருங்கவே, அந்த பெண் பயந்து அலறியுள் ளார். இதனால், கடந்த 17-ம் தேதியன்று மறுபடியும் மணமகன் வீட்டில், முதலிரவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அன்றும் கணவனை நெருங்கவிடாமல் சத்தமிட்டிருக்கிறார் பெண். இதையடுத்து, வெங்கடேசன் தன்னுடைய அக்காவின் ஆலோசனைப்படி, புதுப்பெண்ணின் கை, கால்களை கட்டிலோடு சேர்த்து கட்டிவிட்டு, உறவு கொண்டிருக்கிறார். முடிவில் அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் மூழ்க, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டிருக் கிறார். கணவன் மற்றும் அவருடைய அக்கா இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்'

- மனதை ரணமாக்கிய சமீபத்திய நாளிதழ் செய்தி இது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இதுபோன்ற மூர்க்கத்தனமெல்லாம் எதனால்...?'' என்றபடி சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் அபிலாஷாவை சந்தித்தபோது...

''மனைவியே ஆனாலும், அவள் விருப்பமின்றி தாம்பத்யத்துக்கு கட்டாயப்படுத்தும் இந்த 'மெரைட்டல் ரேப்' (Marital Rape) பெரும்பாலான இல்லங்களில் வாடிக்கையே. 'திருமணம் முடிந்த ஏழில் ஒரு பெண், தன் வாழ்க்கையில் ஒரு தடவையாவது கணவனால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்படுகிறாள்' என்கின்றன ஆராய்ச்சி கள்'' என தன் பங்குக்கு அதிர்ச்சி கொடுத்தவர், தொடர்ந்தார்...

''இதை ஒரு புகாராக முன் வைக்கும் சமூகச்சூழல் இங்கு இல்லை. இப்போதும்கூட, உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனை வரை கொண்டு செல்லப்பட்டதால்தான் இச்சம்பவம் வெளிப்பட் டிருக்கிறது. 'குடும்ப கௌரவம் என்னாவது?' என்று பெண்ணின் பெற்றோரே இதுபோன்ற சம்பவங்களை மூடி மறைப்பதுதான் காலம்காலமாக இங்கே நடந்தேறி வருகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த 'மெரைட்டல் ரேப்' நிகழ்வை குற்றமாக எடுத்துக் கொள்ளாத நிலையே, நீடிப்பது வேதனை!'' என்ற அபிலாஷா, தாம்பத்யத்துக்கு மிரளும் பெண்களின் மனநிலையைப் பேசினார்.

அது தாம்பத்யம் இல்லை... பாலியல் வன்கொடுமை !

''படிப்பறிவு இல்லாத பெண்கள், சின்ன வயதிலேயே திருமணம் முடித்து வைக்கப்படுகிற பெண்கள், சிறு வயதில் பாலியல் சார்ந்த ஏதாவது அதிர்ச்சி சம்பவங்களைச் சந்தித்த பெண்கள், தோழிகளாலோ... பிறராலோ உடலுறவு பற்றிய தவறான புரிதலும், தேவையில்லாத பயமும் ஏற்படுத்தப்பட்ட பெண்கள் என இவர்களுக்கு எல்லாம் தாம்பத்யம் குறித்த அச்சம் ஏற்படலாம். திருமணத்துக்குப் பின் கணவனோடு 'உடன்பட’ மறுக்கவோ, வெறுக்கவோ செய்வார்கள்.

குறிப்பிட்ட சம்பவத்தில் பாதிப்படைந்த பெண்ணுக்கும், மேலே சொன்னது போல ஏதாவது ஒரு பிரச்னை நேர்ந்திருக்கலாம். அந்தப் பெண்ணுக்கு வயது 27. தாம்பத்யத்துக்கான முதிர்ச்சி உள்ள வயதுதான். ஆனாலும், ஏதோ ஒரு காரணத்தினால் செக்ஸ் என்ற விஷயம் ஆரம்பத்திலிருந்த அப்பெண்ணுக்கு மனதுக்குள் பயத்தை ஏற்படுத்தியிருக்கலாம். விளைவு, திருமணத்துக்குப் பின் கணவரை நெருங்கவிடாமல் இருந்திருக்கிறார். 'கணவனை திருப்திப்படுத்துவதே பெண்களின் கடமை’ என்கிற கற்பிதத்தை வெளிப்படுத்தும்விதமாக, அந்த ஆணின் அக்கா, அவருக்கு குருட்டு யோசனை சொல்ல, அது இப்படி விபரீதத்தில் முடிந்திருக்கிறது'' என்று வேதனை பகிர்ந்த அபிலாஷா,

அது தாம்பத்யம் இல்லை... பாலியல் வன்கொடுமை !

''தாம்பத்யம் என்பது அச்சம் தருவது அல்ல... அதுவும் ஓர் அன்புப் பகிரல்தான் என்பதை அப்பெண்ணுக்கு பக்குவமாகப் புரிய வைத்திருக்க வேண்டும். அது பயனளிக்காதபோது, நெருக்கமான தோழிகளோ, குடும்ப உறுப்பினர்களோ, தேவைப்பட்டால் குடும்பநல ஆலோசகர்கள் மூலமாகவோ அப்பெண்ணிடம் பேசி எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், இப்போது நடந்திருக்கும் இந்தச் சம்பவம், அப்பெண் மனதில் தாம்பத்யம் பற்றிய பயத்தை இன்னும் அதிகரிக்கவே செய்திருக்கும்.

பொதுவாக, உறவு விஷயத்தில் விருப்பமில்லாமல் கட்டாயப்படுத்தப்படுகிற பெண்களின் மனநிலை மிகவும் பாதிப்புள்ளாகும். காட்டாய தாம்பத்யம்... பதற்றம் சம்பந்தமான நோய்கள், அதிர்ச்சி, அளவுக்கு அதிகமான பயம், ஒருவித இறுக்கம், மனஅழுத்தம் போன்ற தாக்கங்களுக்கு எல்லாம் பெண்களை ஆளாக்கும். கணவனைப் பற்றிய நெகட்டிவ் எண்ணங்களை அதிகப் படுத்தும். சுற்றத்தினரிடமும் இதைப் பகிர்ந்து கொள்ள முடியாத சூழலில், ஒருவித எமோஷ னல் பெயின் அவர்களை விழுங்கும். சுய கௌரவம், தன்மானம் குறையும். சுய பச்சாதாபம் அதிகமாகும். ஒரு கட்டத்தில் உள்ளுக்குள் தற்கொலை எண்ணம் வந்துவிடுதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கணவனை பிரிந்துவிடும் முடிவுக்கும் வருவார்கள்'' என்ற டாக்டர், நிறைவாக சொன்னது ஆண்களுக்கான அறிவுரை. அது -

''தாம்பத்யம் என்பது... ஆண்களின் உரிமையோ, அதிகாரமோ இல்லை. அது ஆணும் பெண்ணும் அன்பினால் அடைய வேண்டியது. பெண்ணின் மனநிலை, உடல்நிலை என்று அவளுக்கான சூழல்கள் குறித்து ஆண் புரிந்துகொள்ள வேண்டும். விருப்பமில்லாத சூழலில் ஆத்திரப்படாமல், அவள் முடிவுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். மாறாக, அடிமைப்படுத்தி அவளை அடைந்தால், அது தாம்பத்தியமில்லை... பாலியல் குடும்ப வன்கொடுமை!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism