Published:Updated:

உங்கள் பிள்ளையும் A1 தான் !

க.ராஜீவ் காந்திபடங்கள்: எம்.உசேன், ஆ.வின்சென்ட்பால், ஜெ.வேங்கடராஜ்

உங்கள் பிள்ளையும் A1 தான் !

க.ராஜீவ் காந்திபடங்கள்: எம்.உசேன், ஆ.வின்சென்ட்பால், ஜெ.வேங்கடராஜ்

Published:Updated:
##~##

பள்ளி செல்லும் உங்கள் பிள்ளைகள் பாடம் அல்லாத புத்தகங்களைத் தேடிப் படிப்பது, ஆல்பம் தயாரிப்பது என ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்களா? அதற்குக் காரணம், கல்வியில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் அறிமுகப்படுத்தி இருக்கும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை (Continuous and Comprehensive Evaluation-CCE).

''இனி உங்கள் பிள்ளைகள் அவரவர் விருப்பப்பட்ட துறையில் காட்டும் ஆர்வத்துக்கும் உழைப்புக்கும் மதிப்பெண்கள் உண்டு. இதுவரை இருந்து வந்த தேர்வு முறையில் 60 மதிப்பெண்கள் மற்றும் இந்த சி.சி.இ.-யில் எஃப்.ஏ. (Formative Assessment-FA). எனப்படும் படைப்பாற்றாலுக்கு 40 மதிப்பெண்கள் எனப் பிரித்து உள்ளனர்'' என்கிறார் ஓய்வுபெற்ற பள்ளி முதல்வரும் கல்வியாளருமான உமா ராமன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் இந்த மதிப்பீட்டு முறையில் பெற்றோர்களின் பங்கும் மிக முக்கியத் தேவை. ''பிள்ளைகளுக்கு உதவுங்கள். ஆனால், அவர்கள் வேலைகளை நீங்களே செய்யாதீர்கள். அது உங்கள் குழந்தையின் படைப்பாற்றலை நீங்களே அழிக்கும் செயல். அதற்குப் பதில் ஒரு விஷயத்தை அவர்களுக்கு விருப்பமான வகையில் எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்பதைச் சொல்லிக்கொடுங்கள்'' என்கிறார் உமா ராமன்.

உங்கள் பிள்ளையும் A1 தான் !

''நிறைய மதிப்பெண்கள் வாங்கினால்தான் நன்றாகப் படிக்கிறார்கள் என்ற தவறான எண்ணம் பொதுவாக நம் பெற்றோர்களிடம் இருக்கிறது'' என்கிறார் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் இணை இயக்குநர் ந.லதா. இவர் சி.சி.இ. உருவாக்கக் குழுவில் இடம் பெற்றவர்.

உங்கள் பிள்ளையும் A1 தான் !

''பாடத்தை மெதுவாகக் கற்கக் கூடிய ஒரு குழந்தைக்கு நிச்சயம் வேறு விஷயங்களில் திறமைகள்   இருக்கும். அந்தத் திறமைகளை மேலும் மேலும் வளர்ப்பதற்குப் பக்க பலமாக இருக்க வேண்டும். குறிப்பாக, மதிப்பெண்களுக்குப் பதிலாக கிரேடு முறையைக் கடைப்பிடிப்பதால், மாணவர்கள் இடையிலான ஏற்றத்தாழ்வுகள் களையப்படும். மெதுவாகக் கற்கக்கூடியவர்களிடம் மறைந்துகிடக்கும் திறன்களை அறிந்து, கலைகள், படைப்பாற்றலில் அவர்களைச் சிறந்தவர்களாக உருவாக்க இந்த எஃப்.ஏ. மதிப்பீட்டு முறையால் முடியும். இதற்காக ஆசிரியர்களுக்குத் தொடர்ச்சியாகப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன'' என்கிறார் லதா.

தருமபுரி மாவட்டம் கெட்டூரைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி ரிதமஞ்சரியின் அம்மா ஜான்சிராணியிடம் பேசினோம். ''மஞ்சரியைக் குடும்பச் சூழல் காரணமாக ஆறாம் வகுப்பில் அரசுப் பள்ளியில் சேர்த்தபோது தனியார் பள்ளிக்கு நிகராகத் தரம் இருக்குமா என்கிற பயம் இருந்தது. போன வருஷம் சமச்சீர் கல்வி, இப்ப இந்தப் புதிய மதிப்பீட்டு முறைனு பசங்களே கத்துக்கிற மாதிரி கொண்டுவந்து இருக்காங்க. படிப்புடன் இதை எல்லாம் தெரிஞ்சுக்கிறது மகிழ்ச்சியா இருக்கு. நாங்களும் எங்களால் முடிஞ்ச உதவியை அவளுக்கு செய்றோம்' என்கிறார் பூரிப்புடன்.

உங்கள் பிள்ளையும் A1 தான் !

மாற்றங்கள் பல உருவாகட்டும் கல்வியில், கல்வியால்!    

 மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும்  'ஜே’ போடும் இந்தப் புதிய கல்வி முறைக்கு விகடன் குழுமத்தில் இருந்து வெளிவரும் 'சுட்டி விகடன்’ துணை நிற்கிறது. பாடம் வாரியாக,

 மதிப்பீட்டுக்கு உரிய ஆக்ட்டிவிட்டிகளுக்குத் தேவையான அத்தனை விஷயங்களுக்கும் தனிப் பகுதிகளை ஒதுக்கி உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism