Published:Updated:

கேபிள் கலாட்டா

சீரியல் குடும்பம்ஸ்ஸ்ஸ்ஸ் !ரிமோட் ரீட்டா படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

கேபிள் கலாட்டா

சீரியல் குடும்பம்ஸ்ஸ்ஸ்ஸ் !ரிமோட் ரீட்டா படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

Published:Updated:
##~##

மெகா சீரியல்கள்ல கலக்குற நடிகர், நடிகைகள் பலரையும் ஒட்டுமொத்தமா ஒரே குடும்பமா பார்த்தா... எவ்ளோ பரவசம் பத்திக்கும்..! சன் டி.வி-யில ஒளிபரப்பாகிற 'சூப்பர் குடும்பம்’ நிகழ்ச்சி ஷூட்டிங் ஸ்பாட் விசிட் அடிச்ச இந்த ரீட்டாவையும் அந்த சந்தோஷம் தொத்திக்கிச்சு. 'தென்றல்’, 'திருமதி செல்வம்’, 'செல்லமே’, 'அழகி’னு சன் டி.வி-யில ஒளிபரப்பாகற 18 சீரியல்கள்ல நடிக்கிற 200-க்கும் மேற்பட்ட சின்னத்திரை ஆர்ட்டிஸ்ட்டுகள் போட்டியாளர்களா கலக்க, களைகட்டப் போயிட்டிருக்கு ஷோ!

கைகொடுத்து வரவேற்ற ஸ்ரீ, ''ஹாய் ரீட்டா!''னு ஓடி வந்த நீலிமா, ''எப்படி கண்ணு இருக்கே..!''னு நலம் விசாரிச்ச 'திருமதி செல்வம்’ ஜெயமணினு... ஸ்டூடியோக்குள்ள ஒரே கலகல... லகலக! அந்த சின்னத்திரை பட்டாளங்களோட உற்சாகத்துக்கு கூடுதல் சப்போர்ட்டா இருந்தாங்க... ஜட்ஜஸ் கங்கை அமரன், சுகன்யா, மீனா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இந்த ஷோவோட ஷூட்டிங்குக்காக வீட்ல இருந்து கிளம்பும்போது, ஏதோ குடும்ப விசேஷத்துக்கு போற திருப்தியோடதான் கிளம்புவேன் ரீட்டா!''

-  கங்கை அமரன் சார் அவ்ளோ ஹேப்பியானார்.

கேபிள் கலாட்டா

''ஒவ்வொரு சீரியல் குடும்பமும் சூப்பர்தான். வில்லன், வில்லி, ஹீரோ, ஹீரோயின், மாமியார்னு இப்படி கேரக்டர்களா பார்த்தவங்கள, இந்த மேடையில் அவங்களோட ஒரிஜினாலிட்டியோட பார்க்குறப்ப சூப்பரா இருக்கு. முக்கியமான விஷயம்... காம்படிஷனுக்கான ஸ்ட்ரெஸ் இல்லாம, போட்டியாளர்களும் இதை என்ஜாய் பண்றாங்க. அவங்களோட சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் பார்த்தா, நாங்களும் போட்டியாளர்களா இறங்கிடலாமானு தோணுது... ஆமாதானே?!''

- சுகன்யாவையும், மீனாவையும் பார்த்து கங்கை அமரன் கேட்க, சுகன்யாவுக்கு 'வணக்கம்!’ சொன்னேன். நிகழ்ச்சி பத்தி பேசினாங்க.

''ஒவ்வொரு வார ஷோலயும் 6 டீம் கலந்துக்கறாங்க. டான்ஸ், பாட்டு, ஸ்கிட்டுனு வெரைட்டியா கொடுக்கறாங்க. ஒவ்வொருத்தரும் ஒரு மாதம்கூட இதுக்காக பிராக்டீஸ் பண்றாங்க. 'நீங்க இவ்ளோ சூப்பரா டான்ஸ் ஆடுவீங்களா..?’, 'நீங்க பாடுவீங்களா..?’, 'மிமிக்ரி ஆர்ட்டிஸ்டா நீங்க..?’னு ஒவ்வொரு போட்டியாளர்களும் எங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறாங்க. சூப்பர் டீம் வொர்க். இந்த நிகழ்ச்சிக்கு ஜட்ஜா உட்கார்ந்திருக்கிறது, செம ஜாலியா இருக்கு!''னு குஷியானாங்க சுகன்யா மேம்!

கேபிள் கலாட்டா

கண்கள் படபடத்த மீனாகிட்ட, அவங்க குழந்தை நைனிகா பற்றிக் கேட்டேன்.

''பாப்பாவுக்கு ஒண்ணரை வயசுக்கு மேல ஆச்சே. இப்போ வீட்ல சமத்தா விளையாடிட்டுஇருப்பாங்க. அதனாலதான் இந்த நிகழ்ச்சியில என்னைப் பார்க்க முடியுது!''னு சொன்ன வங்க,

''சின்னத்திரை சங்கமம்னுதான் இந்த மேடை யைச் சொல்லணும். ஒவ்வொரு சீரியல் டீமில் இருந்தும் குறைஞ்சது... 5 பேர் கலந்துக்குறாங்க. மற்ற ஆர்டிஸ்ட்களும் பார்வையாளரா வந்து சப்போர்ட் காண்பிக்கிறாங்க. ரியலி கிரேட்! அடுத்தடுத்து ராதிகா மேடம், ரம்யா கிருஷ்ணன் மேடம்னு லீட் ரோல் ஆர்ட்டிஸ்ட்டும் கலந்துக்க இருக்காங்க. நீங்க மட்டும் இல்ல... நாங்களும் ஆர்வமா காத்துட்டு இருக்கோம்!''னு சிரிச்சாங்க மீனா மம்மி!

கேபிள் கலாட்டா

''சின்னத்திரை ஆர்ட்டிஸ்ட்ஸ் தங்களுக்குள்ள எவ்வளவு ஃப்ரெண்ட்லியா இருக்காங்கனு இந்த நிகழ்ச்சி மூலமா பார்க்க முடியுது. செம ரகளை பண்றாங்க ரீட்டா. ஒருநாள் வந்து பார்த்த உனக்கே புரிஞ்சுருக்கும். இப்படித்தான் எல்லா ஷூட்களையும் நாங்க கொண்டாடுறோம். உண்மையில், ஜட்ஜஸ், ஆங்கர்ஸ், ஆர்ட்டிஸ்ட்ஸ்னு இந்த டீம் முழுக்கவே சூப்பர் குடும்பம்தான்!''

- உற்சாகமா முடிச்சாங்க நிகழ்ச்சியை தொகுத்து வழங்குற மமதியும், காயத்ரியும்!

நல்லதொரு குடும்பம்!

'ஆர்ஜே’ ஆசை!

மக்கள் டி.வி 'சொல்லி அடி’ நிகழ்ச்சியில கலக்கிட்டு இருக்கிற சிந்து பொண்ணுகிட்ட, ''நல்லா தமிழ் பேசுறீங்க!’'னு பாராட்டினா,

''இங்கிலீஷ், இந்தி, ஃபிரெஞ்சு எல்லாம்கூட பேசுவேன்!''னு சிரிக்கிறாங்க.

கேபிள் கலாட்டா

''சொந்த ஊர் தூத்துக்குடி. இப்போ ஃபேமிலியோட சென்னையிலதான் ரீட்டா இருக்கோம். 'நீதான் லொட லொடனு பேசுவியே... தொகுப்பாளினியா போயேன்!’னு ஃப்ரெண்ட்ஸ் விரட்டிவிட, மக்கள் டி.வி ஆடிஷன்ல கலந்துகிட்டு செலக்ட் ஆனேன். சேனலுக்குள்ள வந்து 2 வருஷங்களாச்சு. இப்போ 'சொல்லி அடி’ நல்ல பிரேக் கொடுத்திருக்கு. ஆங்கிலம், இந்தி இது ரெண்டும் ஏற்கெனவே சரளமா பேசத் தெரியும். இப்போ ஃபிரெஞ்சு கத்துட்டு இருக்கேன். பரதமும் தெரியும். வானொலி 'ஆர்ஜே’-வா வொர்க் பண்ணணும்கிறதுதான் என் ஆசை!''னு கண் சிமிட்டினாங்க சிந்து!

அலைவரிசையில் சீக்கிரமே ரா ரா !

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism