வாசகிகள் பக்கம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

150

கற்கண்டு மாமா!

எங்கள் வீட்டுக் குட்டிப் பையன் ஸ்ரீராம், தினமும் பூஜை அறையில் வந்து சாமி கும்பிடுவான். பிரசாதமாகக் கற்கண்டு கொடுப்போம். அதை குஷியாகச் சாப்பிடுவான். அன்று வீட்டுக்கு வந்த ஒருவர், காதில் கடுக்கண் அணிந்து இருந்தார். அதைப் பார்த்த சுட்டி, ''அம்மா, நாம எல்லாம் கற்கண்டை வாயில் போடுவோம்... மாமா மட்டும் காதுல போட்டுகிட்டு வந்திருக்காரு!'' என்றதும், அனைவருக்கும் சிரிப்பு!

கடுக்கண், கற்கண்டு இரண்டையும் அவனுக்கு சொல்லிக் கொடுத்து சொல்ல வைத்தது, சுகானுபவம்!

- காழி.ஆர்.கீதா, தென்பாதி

'தொப்பை' குத்துவிளக்கு!

ஆன்மிக விழா ஒன்றுக்குச் சென்றிருந்தோம். ஆள் உயரத்துக்கு குத்துவிளக்கு வைத்து, விருந்தினர்களை ஏற்றச் சொன்னார்கள். அதைப் பார்த்துக் கொண்டிருந்த எங்கள் வீட்டு பரத் குட்டி, ''விளக்கு ஏன் இவ்வளவு பெரிசா வெக்கிறாங்க தெரியுமா?'' என்றான். ''அப்பதான் பார்க்க நல்லா இருக்கும்'' என்றேன் என் சிறுமூளைக்கு எட்டிய பதிலை. ''ம்ஹும்... சின்னதா வெச்சா வி.ஐ.பி-க்களால குனிஞ்சி ஏத்த முடியாது. ஏன்னா, தொப்பை இடிக்கும்!'' என்றான். அதன்பின்தான் கவனித்தேன் விருந்தினர்கள் ஐந்து பேரில் நான்கு பேர் தொப்பை பார்ட்டிகள் என்பதை!

குறும்பன்!

- த.சாந்தி, திருவாரூர்

மூளையில்லாத மைதாஸ்!

பேரன் கிருஷ்ணாவுக்கு அவ்வப்போது கதைகள் சொல்வேன். 'தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும்' என மைதாஸ் வரம் கேட்ட கதையை ஒரு தடவை சொன்னேன். ''சாப்பாடு எல்லாம் அவன் தொட்டதும் தங்கமா மாறிடுச்சு... அவனால சாப்பிடக்கூட முடியல...'' என்றேன். உடனே வாண்டு, ''பாட்டி, இந்த மைதாஸுக்கு மூளையே இல்லை. ஸ்பூனால சாப்பிட்டிருக்கலாம்ல..?'' என்று சீரியஸாகக் கேட்டதும், அனைவரும் ரசித்துச் சிரித்தோம்.

''எங்க பாட்டி இந்தக் கதையைச் சொன்னப்போ... இப்படி எல்லாம் கேட்கத் தோணலையேடா!'' என்று பெருமையோடு சொல்லிக் கொண்டாள் என் மகள்!

- ராதாநாயகம், சென்னை-87