என்ன தோழிகளே... பழைய உறவுகளைக் கழித்துவிட்டு... புதிய உறவுகளை உருவாக்கிக் கொண்டு... பழைய நினைவுகள் எதுவும் பாதிக்காமல்... புதிய வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளும் பக்குவம், உங்களுக்கு ஏற்பட்டுவிட்டதா?

சபாஷ்! இனி, அடுத்த ரகசியத்துக்குப் போவோம். வழக்கம்போல ஒரு குட்டிக் கதை!

கங்கா மிகவும் பொறுப்பான குடும்பப் பெண். அதோடு, தன் பெற்றோர், உடன்பிறப்புக்கள் மற்றும் தன்னுடைய சொந்தபந்தம் மட்டுமே முக்கியம் என்ற மனநிலையில் வாழ்பவள். பெற்றோர் தேர்ந்தெடுத்த ராகுலை திருமணம் செய்துகொண்டவள், ஆரம்பத்தில் புகுந்த வீட்டினருடன் ஒன்றி, அழகாக குடும்பம் நடத்தினாள். ஆனால், இரண்டு மாதங்களாக இருவருமே பிரிந்திருக்கிறார்கள். கங்கா தன் தாய் வீட்டிலும், ராகுல் தன் மனைவிக்கென வாங்கிய புது வீட்டிலும் வசிக்கிறார்கள்.

''என்னோடு வந்துவிடு, தனியாக இருக்க எனக்குப் பிடிக்கவில்லை'' என்கிறான் ராகுல். ''உன்னோடு மட்டும் தனியாக அந்த வீட்டில் இருக்க எனக்குப் பிடிக்கவில்லை. வேண்டுமானால் நீயும் என் அம்மா வீட்டுக்கு வந்துவிடேன். இங்கே அம்மா, அப்பா, தம்பி, தங்கை என்று ஜாலியாக இருக்கலாம்'' என்றாள் கங்கா. உடன்பாடு எதுவும் ஏற்படாததால் பிரிந்தே இருக்கிறார்கள்.

'கங்கா சொல்வது சரியா, அல்லது ராகுல் விரும்புவது சரியா?' என்று கங்கா வீட்டில் தினமும் விவாதம்தான். சிலர், 'ராகுல்... சரியான 'மேல் ஷாவனிஸ்ட்’ (Male chauvinist) என்றார்கள். சிலர் கங்காவைக் கண்டித்தார்கள். எந்த முடிவும் எடுக்காமல் இருந்த கங்கா, இதற்கிடையில் தன் சித்தி மகளின் தேர்வுக்கு உதவிக் கொண் டிருந்தாள். கங்காவுடைய பரீட்சைகளின்போது உதவியாக இருந்திருக்கிறார் இந்த சித்தி. அதற்கு நன்றிக் கடனாக, சித்தியின் மகளுக்கு உதவ விரும்பினாள். சித்தி மற்றும் அம்மா ஆகியோரின் வீடுகள் அருகருகில் இருந்ததால், அம்மா வீட்டிலேயே தங்கிக்கொள்ள, இதுவும் ஒரு கூடுதல் காரணமாகிப் போனது.

ஆனால், இந்த எல்லா பரோபகாரத்துக்கும் இடையே கங்கா மறந்து போனது எதை தெரியுமா? 'கணவன் - மனைவி என்கிற உறவை ஏற்படுத்திக்கொண்ட பிறகு, இந்த உலகில் மற்ற எல்லோருமே இரண்டாம் பட்சமாகத்தான் இருக்க வேண்டும். இந்த உறவுக்கு முக்கியத்துவம் தராமல், வேறு ஏதாவது ஓர் உறவுக்கு முதலிடம் கொடுப்பதென்பது, கணவன் - மனைவி உறவு இலக்கணத்துக்கு எதிரானது' என்பதைத்தான்!

சித்தி மகளுக்கு யார் வேண்டுமானாலும் டியூஷன் எடுக்கலாம். ஆனால், அவள் கணவனுக்கு வேறு ஒருத்தி துணைவி ஆகிவிட முடியுமா? அல்லது அதை கங்காதான் அனுமதிப்பாளா? அம்மா வீட்டிலேயே இருப்பது எல்லோருக்கும்தான் ஆனந்தம். ஆனால், சுயமாக பறக்கத் தெரிந்த பிறகும்... பறவை தன் தாய் கூட்டிலேயே வசிப்பது வளர்ச்சி அல்ல... குழந்தைத்தனம். முதிர்ச்சியடைந்த மனுஷி இன்னும் குழந்தைத்தனமாக இருப்பது சினிமாக்களில் வேண்டுமானால் சுவாரசியமாக இருக்கலாம். நிஜ வாழ்க்கையில் அது பிழை.

ஆண் - பெண் என்று இருவரும் ஜோடி சேர்ந்துவிட்டால்... அவர்களுக்கென்று இருக்கும் கூட்டில்தான் வசிக்க முடியுமே தவிர, பிறரது கூடுகளில் வாழ விரும்புவது உயிரியல் விதிகளுக்கு விநோதமானது. மனிதர்களின் பொது மனநிலையும் இதை ஆதரிப்பதில்லை. அதனால்தான் பலர் கங்காவை கண்டித்து, கணவனோடு இருக்கும்படி வற்புறுத்தினார்கள்.

'இந்தக் காலத்தில்கூட, கணவன் வீட்டில்தான் மனைவி வசிக்க வேண்டும் என்கிற புராதான விதியை பின்பற்றுவது அவசியமா?' என்றுகூட நீங்கள் யோசிக்கலாம். விஷயம் அது யாருடைய வீடு என்பது பற்றி அல்ல... அது யாருக்காக அமைந்த கூடு என்பது பற்றி மட்டுமே!

'தன் குழந்தைகளை வளர்க்க வசதியாக இருக்கிறதே' என்று பல பெண்கள் தாய் வீட்டின் ஒரு பகுதியில், அல்லது அருகில் கூடு அமைத்துக் கொள்கிறார்கள். இது அவர்களது இல்லறத்தை அபிவிருத்தி செய்ய உதவும் யுக்தி என்பதால்... இயற்கையின் விதிகளுக்கு இது உட்பட்டதே! ஆனால், துணையைப் பிரிந்து வேறு யாருக்கோ உதவி செய்வதற்காக அல்லது 'கம்ஃபோர்ட் ஸோன்’ (Comfort zone) என்று தான் மனதளவில் உருவாக்கிக் கொள்ளும் இடத்தை விட்டுத் தர மனமில்லாத காரணத்தால், யாராவது தனக்கான கூட்டை விட்டு விலகினால், அது அபத்தமானது மட்டுமல்ல... நாளடைவில் ஆபத்தானதாகவும் முடியலாம்.

ஆகையினால் தோழிகளே... எல்லா உறவுகளுக்கும் ஓர் உயிரியல் இலக்கணம் உண்டு. அந்த இலக்கண வரம்புக்குள் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் எக்ஸ்பரிமென்ட் பண்ணலாம். ஆனால், இந்த உறவின் இலக்கண விதியே தெரியாமல் அதை உடைத்தால், அது முட்டாள்தனம்.

- நெருக்கம் வளரும்...