வணக்கத்துக்குரிய பெண்ணை நினைவுகூரும் பக்கங்கள்

''என்ன..! பேசலாம்னு சொல்லி கூட்டிட்டு வந்துட்டு, வேடிக்கை பாத்துட்டே வர்றீங்க...?''

பறவைக் கூட்டங்களைப் பார்த்த என்னிடம், தன் டிரேட் மார்க் சிரிப்புடன் கேட்டார் பாஸ்கர் சக்தி. எழுத்தாளர், கதாசிரியர், வசனகர்த்தா... அதையெல்லாம்விட நல்ல மனிதர். எளியவர்களை, தனது கதாபாத்திரங்களாக பிரசவிப்பவர்.

மரங்கள் அடர்ந்த சாலையில் நாங்கள் நடந்தபோது மழை தூறத் தொடங்கியிருந்தது. வெண்படலமாய் திரண்ட மேகங்கள் பசுமையை முத்தமிட்டுக்கொண்டே நகர்கின்றன. அவருடைய 'அழகர்சாமியின் குதிரை’ திரைப்படத்தைப் பற்றிக் கொஞ்ச நேரம் பேசிவிட்டு... ''சார்...வாழ்க்கையில் உணர்வுப்பூர்வமா உங்களை பாதிச்ச பெண் யாரு...?'' என்று கேட்டேன்.

''பிரதிபலன் எதிர்பார்க்காம அன்பை மட்டுமே அள்ளி அள்ளிக் கொடுத்த ஒரு பெண். வாழ்க்கையில தன் தேவைகளை மட்டுமே பார்க்காம, தன்னைச் சுத்தியிருந்தவங்களுக்காக மட்டுமே வாழ்ந்தவர். தனக்குக் குழந்தையில்லைனாலும்... எல்லாருடைய பிள்ளைகளையும் ரொம்ப நேசிச்சவர். 15 வயசுல கல்யாணம் முடிச்சு, 17 வயசுல விதவையான அந்தப் பெண்ணோட பெயர்... பாப்பம்மாள். எனக்கு ஒண்ணுவிட்ட பெரியம்மா.''

- பாஸ்கர் சக்தி பேச ஆரம்பித்தபோது... தூறல் நின்றிருந்தது.

''சின்ன வயசுல ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் எங்கம்மா பொறந்த அழகர்நாயக்கன்பட்டிக்கு போவோம். அங்க பாப்பம்மா இருப்பாங்க. நாற்பது வயசு இருக்கும். ரொம்ப அழகானவங்க. சொந்தக்கார பிள்ளைங்க பத்து பதினைஞ்சு பேருக்காக பலகாரம் செஞ்சு அடுக்குப் பானைல வெச்சுருந்து ஒரு மாசம் வரைக்கும் கொடுப்பாங்க. எல்லார்கிட்டேயும் ஒரே மாதிரி பிரியம். எல்லாருமே தன்னோட பிள்ளைங்கதாங்கற அன்பாலதான் என்னை அவங்க இன்ஃபுளு யன்ஸ் பண்ணாங்க... எங்ககிட்ட அவங்க பேசுனது. கிராமத்து மக்கள்கிட்ட அவங்க பேசிய ஊர்க்கதைகள் எல்லாம் இப்பவும் எனக்கு ஞாபகமிருக்கு. அவங்க கொடுத்த சின்ன பொறியியிலேர்ந்து பல கதைகளை நான் எழுதி இருக்கேன். எனக்கான எழுத்து மொழியை என் கதைகளுக்குள்ளே விதைச்சது பாப்பம்மா..!''

காற்று வீசியெறிந்த செம்பூக்களின் விதைகளை மிதித்துக் கொண்டே நடந்தோம்.

'' பேரழகியா இருந்த அவங்களுக்கு, சின்ன வயசுலேயே கல்யாணம் ஆயிடுச்சு. அவங்களோட தாய் மாமன் தூக்கிட்டுப்போய் ரெண்டாம் தாரமா கல்யாணம் பண்ணியிருக்காரு. பெரிய பணக்காரர். ஆனா, சிவியரான டி.பி. (காசநோய்) பேஷன்ட். பாதி சொத்தை பாப்பம்மாவுக்கு எழுதி வெச்சுட்டு கொஞ்ச நாள்லேயே இறந்துட்டாரு. இவங்க எல்லாத்தையும் தன்னோட அக்கா மகனுக்கு எழுதிக் கொடுத்துட்டு... எங்க அம்மா வீட்டுக்கு வந்துட்டாங்க.

கெடைச்சத வெச்சுக்கிட்டு சந்தோஷமான வாழ்க்கை வாழற மனப்பான்மை அவங்ககிட்ட இருந்துச்சு. சின்ன வயசுலயே பெரிய இல்லற சுகமெல்லாம் இல்லாம விதவையான ஒரு பெண். அடுத்தவங்ககிட்ட பிரியமா இருந்தே தன்னோட வாழ்க்கையை கடத்திட்டாங்க... அவங்களோட நல்ல குணம் என்னை ரொம்ப ஈர்த்துச்சு..!''

''உங்களோட கதைகள்ல எந்த அளவுக்கு அவங்க இருக்காங்க...?''

நான் எழுத்தாளனானதுக்கு நெறைய தூண்டுகோல்கள் இருக்கு. அதுல பாப்பம்மா முதன்மையானவங்க; முக்கியமானவங்க. இது ஆரம்பத்துல எனக்கே தெரியல. ஒருமுறை அவங்க வீட்டுக்குப் போயிருந்தேன். ஒரே வெள்ளையா நுரையீரல் அரிச்சுப்போன ஒரு 'எக்ஸ்ரே’ படத்தை அவங்க பெட்டியில பாத்தேன். 'என்னம்மா இது..?’னு கேட்டப்போ.. 'இதுவாடா... என் வீட்டுக்காரரோட படம்டா... அவர் சாகறதுக்கு முன்ன எடுத்தது. இத மட்டும்தான் அவரோட ஞாபகமா வெச்சிருக்கேன்!’னு ரொம்பப் பெருமையாச் சொன்னாங்க. 'என்னோட 'தீர்த்த யாத்திரை’ங்கற கதையில இது இருக்கும். அது 'ஆனந்த விகடன்'ல வந்த என்னோட ரெண்டாவது கதை!''

அவரே தொடர்ந்தார்...

''அவங்கள சுத்தி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். யாராவது வந்து பேசிட்டுப் போனா... அவங்கள மாதிரியே உடல்மொழியோட இமிட்டேட் பண்ணுவாங்க. கிண்டல் செய்யறதைக்கூட, ரசிக்கற மாதிரி இயல்பா செய்வாங்க. அதை நானும் பாத்துருக்கேன். இது எங்கிட்டேயும், என்னோட படைப்புகள்லேயும் நெறைய இருக்கும்.

அவள் விகடன்ல... 'நினைவில் ஒளிரும் நிலவுகள்’னு பெண்களைப்பற்றி பத்து கதைகள் எழுதினேன். அதுல சில கதைகளுக்கான இன்ஸ்பிரேஷன் பாப்பம்மாதான்... 'மெட்டி ஒலி, கோலங்கள்’னு சீரியல்கள்ல... 'அழகர்சாமியின் குதிரை’ போன்ற திரைப்படங்கள்ல... என்னோட எழுத்துக்களில் இயல்பான கிராமிய மொழி இருக்குதுல்ல.. அதில் பாப்பம்மாவோட மொழித் தாக்கம்தான் அதிகம்!''

சிரித்துக்கொண்டே சொன்ன பாஸ்கர் சக்தியின் கண்கள், அன்பின் ஏக்கத்தைச் சொல்லின.

''அவங்க சொந்தக்காரரோட குழந்தையில ஒருத்தரு ஸ்பாஸ்டிக் குழந்தை. உடம்பு வளரும். அதுக்கேத்த மூளை வளராது. கை, கால் குச்சியா... தலை மட்டும் பெரிசா இருக்கும். தரையில தவழ்ந்து போறப்ப நடுக்கூடத்துலேயே யூரின், டாய்லட் போயிடுவாரு. பாப்பம்மாதான் சுத்தம் செய்வாங்க. அவரை இடுப்புல தூக்கிட்டு அலைவாங்க. அப்படிப்பட்ட ஒருத்தரை 25 வருசமா கேர் பண்ணி அன்பு செலுத்துனாங்க.

அந்தக் காலத்துல அவங்க செஞ்சதை நெனைச்சா... இப்பவும் பிரமிப்பாயிருக்கு. என்னைப் பார்த்து, 'எப்படி எல்லார்கிட்டயும் ரொம்பப் பிரியமா இருக்கீங்க...?’னு யாராவது, எப்பவாவது கேட்க நேர்ந்தா... அந்தக் கேள்வி என்னை நோக்கியது அல்ல... பாப்பம்மாவை நோக்கியது. அவங்ககிட்டதான் சுயநலமில்லாத அன்பை உணர்ந்தேன்..!''

எனக்கு அந்த பாப்பம்மாவை அப்போதே பார்க்க வேண்டும் போல இருந்தது. பாஸ்கர் சக்தியைப் பார்த்தேன்... அவர் மரக்கிளையில் தாவிக்கொண்டிருந்த அணிலைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

''சுனாமி வந்த டிசம்பர் மாசக் கடைசி, அப்போ எனக்கு மூக்குல சைனஸ் ஆபரேஷன் பண்ணி, உள்ளே நெறைய பஞ்சு வெச்சு அடைச்சிருந்தாங்க. வாய் வழியாதான் மூச்சு விடணும். மறுநாள் காலைல பஞ்சை வெளியே எடுத்தே ஆகணும். அன்னிக்கு ஜனவரி 4. நடுராத்திரி ஊர்லேர்ந்து பாப்பம்மா இறந்துட்டாங்கனு தகவல். காலையில போய் பஞ்சை எடுக்காம ராத்திரியே ஊருக்கு கௌம்பிட்டேன். ஏற்கெனவே வீசிங் பிரச்னை. வாய் வழியா ரொம்ப நாள் சுவாசிச்சா கெடுதல்... அதெல்லாம் மனசுல படவேயில்லை. பாப்பம்மாவுக்கு தீ மூட்டிட்டு... வெறுமையோட நாலாவது நாள் சென்னைக்கு வந்தேன். பஞ்சை எடுக்க டாக்டர்கிட்ட போனா... 'என்ன லேட்டா வர்றீங்க?’னு திட்டினார். உள்ளே பஞ்சு ஒட்டிக்கிட்டு பயங்கர வலி. ரொம்ப சிரமப்பட்டு எடுத்தாங்க. பாப்பம்மா செத்துபோன வலியைவிட அது பெரிசா தெரியல.!'’

பாஸ்கர் சக்தியின் கண்களில் நீர் திரண்டிருந்தது.

''கடைசி காலத்துல அவங்க காட்டுன அன்புல ஒரு சதவிகிதம்கூட அவங்களுக்குத் திரும்ப கெடைக்கல. பாப்பம்மா மூணு விஷயத்த அடிக்கடி சொல்லும்... 'வாழ்க்கைல கண்ணாடி போடக் கூடாது... கம்பு ஊனக்கூடாது. அடுத்தவங்களுக்கு கஷ்டம் தராம செத்துடணும்.’ சொன்னபடியே அது நடந்துச்சு. உடம்பு ஆரோக்கியமாத்தான் இருந்துச்சு. கொஞ்ச நாள் சரியா சாப்பிடாம சாகணும்னு முடிவு செஞ்ச மாதிரி திடீர்னு ஒரு நாள் இறந்துடுச்சு!’'

கொஞ்சமாக குளிர், காற்றில் நிறைந் திருந்தாலும் லேசாக வியர்த்தது.

''ஒவ்வொருத்தரும், தான் சார்ந்த தேவைகளை நிறைவேத்திக்கிறதுதான் வாழ்க்கைனு நெனைக்கிறாங்க. விதிவிலக்கா சில பேரு.. தன்னை மட்டும் பார்க் காம சுத்தியிருக்கறவங்களோட தேவை களையும் பாக்குறாங்க... அவங்கதான் நெறைய பேரை இன்ஃபுளுயன்ஸ் பண்ணுவாங்க.. சுயநலவாதிகள் நம்மை பாதிக்கவே முடியாது.

அவங்களுக்கு குழந்தைகள் இல்லை... வாரிசு இல்லை... ஆனா, என் எழுத்துகள்ல வாழ்றாங்க. ஒரு எழுத்தாளனுக்கு மொழி ரொம்ப முக்கியம். என்னோட படைப்பின் மொழியில அவங்க பேச்சு இருக்கு. என்னோட படைப்பின் தன்மையில மத்தவங்க மேலான அவங்களோட அக்கறை இருக்கு. இப்பவும் அவங்கள நெனைச்சாலே உணர்ச்சிவசப்படுறேன். என் சிந்தனையில எப்பவும் பாப்பம்மா இருக்காங்க..!''

வாரிசுகள் இல்லாத விதவை அத்தைகள்... சோறூட்டிய ஒன்று விட்ட பெரியம்மா... ஓட்டு வீட்டு ஆத்தா... திருமணம் ஆகாத எதிர்வீட்டு அக்காக்கள்... இவர்கள், நம்மில் பலருக்கு இருந்திருக்கலாம். ஆதரவில்லாத நிலையிலும் எதையும் எதிர்பார்க்காமல் நம்மிடம் அன்பாயிருந்திருப்பார்கள். ஆனால், அவர் களுக்கு காய்ச்சல் என்றால் யாரிடம் சொல்லி இருப்பார்கள்..? கசந்த வாய்க்கு இதமாக யாரிடம் கஞ்சி வைத்துக் கேட்டிருப்பார்கள்..? கேள்விகள் மட்டும்தான் என்னிடம் இருக்கின்றன!

பாஸ்கர் சக்தியோடு கைகோத்து நடந்தேன். எங்களுக்கு முன்... ஓர் ஒற்றையடிப்பாதை நீண்டுகொண்டே இருந்தது.

- வருவார்கள்...