சி.உஷாராணி, ஆராய்ச்சி மாணவி, உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை, அவினாசிலிங்கம் மகளிர் பல்க¬லைக்கழகம், கோயம்புத்தூர்

'இன்றைய அவசர உலகின் முதன்மை நோய்... மன அழுத்தம். மனிதனுக்கு வரும் நோய்களில் 75 - 90 சதவிகித நோய்கள், அழுத்தமான சூழல் காரணமாக வருபவையே' என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சி தகவல் சொல்லியிருக்கிறது.

சக மனிதன் மீதான கரிசனையும், ஆத்மார்த்தமான அக்கறையும் விலகி... சுயநலச் சிந்தனைகள், ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், வேலை அழுத்தம், நோய்கள், கடன், வறுமை, பரீட்சை, கோபம், நட்பு முறிவு, உறவு விரிசல், தூக்கமின்மை, புகை, குடிபோதை, சரியான உணவுப் பழக்கம் இல்லாமை, ஊட்டச்சத்துக் குறைவு என... நம்மைச் சுற்றி நிகழும் எல்லாவிதமான காரணிகளும், மன அழுத்தத்தை அதிகரிப்பதாக ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன. மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் உணவுப் பழக்கம், உணர்வுப் பழக்கம் இரண்டுக்கும் வல்லமை உண்டு!

சரிவிகித உணவு, உடல் ஆரோக்கியத்தை காப்பதோடு மட்டுமின்றி, மன அழுத்தத்திலிருந்தும் பாதுகாக்கும் என்ற உண்மை பலரும் அறியாதது. சில வகை துரித உணவுகள் மற்றும் பானங்கள் நேரடியாக உடலைத் தாக்கி மன அழுத்தத்தை உண்டாக்குகின்றன. உதாரணமாக... காபி, சாக்லேட், கோக், எண்ணெயில் பொறித்த பதார்த்தங்கள் போன்றவை 'அட்ரீனல்' சுரப்பியை சுரக்கச் செய்கின்றன. இது மன அழுத்தத்தை அதிகரிக்கும். மேலும் மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், உயிர்ச்சத்து சி மற்றும் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின்கள் குறைவினால் மன அழுத்தம் உருவாகிறது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

மன அழுத்தத்தை கட்டுப்படுத்த நம் உணவில் சில மாற்றங்கள் கொண்டு வரவேண்டும். இந்திய மருத்துவ ஆராய்ச்சியின்படி, குறிப்பாக ஆயுர்வேதம் சரிவிகித உணவு... உடலையும், மனதையும் மேம்படுத்தும் என்கிறது. ஆரோக்கியமான மனம்... உணவு வகைகளை ஜீரணிப்பதற்கும், செரிமானத்துக்கும் உதவுகிறது. குறிப்பாக, மன அழுத்தத்தை குறைப்பதில் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.

உணவுப் பழக்கங்கள் சரி... இனி உணர்வுப் பழக்கத்தையும் கொஞ்சம் செதுக்கலாமா..? எந்த ஒரு காரியத்துக்கும் தாமதமின்றி நில நிமிடங்கள் முன்பாகவே தயாராகுங்கள். காத்திருப்பதை சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும், தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும். வேலைகளை தள்ளி வைப்பது... மனதுக்குள் அரித்துக்கொண்டே இருக்கும். கடைசி நேரக் குழப்பங்கள் மனதை பாடாய்ப் படுத்திவிடும், முன்கூட்டியே திட்டமிடுங்கள். அதேபோல, 'ஐயையோ எல்லாம் போச்சே’ என்று பதறாமல் சில மாற்று யோசனைகளையும் யோசித்து வைத்திருங்கள். சில வேலைகள் தடைபடு வதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்துவிடப் போவதில்லை தானே?!

மனக்குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம், உறவுகளிடம் பகிருங்கள். தினமும் உங்கள் மனதை மகிழச் செய்யும் ஏதாவது ஒரு செயலைச் செய்யுங்கள். பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும்கூட பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

'என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே' என்கிற முனகலைத் தவிர்த்து பிறரைப் புரிந்துகொள்ளப் பழகுங்கள். உங்கள் நடை, உடை பாவனைகளில் தன்னம்பிக்கை மிளிரட்டும்.

மகிழ்வுடன், தெளிவுடன் இருக்கும் மனதில்... அழுத்தம் அண்டாது!

நீங்களும் நிருபர்தான் !

வாசகிகளே... இது உங்களுக்கான பக்கம்! 'செய்திகளை சேகரிப்பதில், பெண்களுக்கு நிகர் வேறு யாரும் இருக்க முடியுமா என்ன?'

அசத்தலான, அற்புதமான, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கின்ற விஷயங்கள்; 'அட, நாமும் இதேபோல முன்னேறலாமே' என்று நம்மை சொல்ல வைக்கின்ற சாதனைப் பெண்கள்; இன்னும், இன்னும் பலதரப்பட்ட செய்திகளும் உங்களிடமும்... உங்கள் அக்கம் பக்கத்திலும் கொட்டித்தானே கிடக்கின்றன! அத்தகைய செய்திகளில், பிரசுரத்துக்குத் தகுதியான செய்திகளைத் தேர்ந்தெடுத்து, நேர்த்தியான புகைப்படங்களுடன், அசத்தலான செய்திக் கட்டுரையாக எழுதி அனுப்புங்களேன் தோழிகளே! பிரசுரமாகும் கட்டுரைகளுக்கு தகுந்த பணப்பரிசு உண்டு!

பின்குறிப்பு: உங்களின் கட்டுரைகள் நூறு சதவிகிதம் உண்மையானவையாக இருப்பது முக்கியம். கட்டுரைகளை தபால், இ-மெயில் மூலமாக அனுப்பலாம்.

தபாலில் அனுப்புபவர்கள்... 'நீங்களும் நிருபர்தான்’, அவள் விகடன், 757 அண்ணா சாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கு அனுப்பவும். இ-மெயில்: aval@vikatan.com