Published:Updated:

வாசகிகள் கைமணம்

ஆஹா... சீஸ் சாலட்... அடடா... ரைஸ் பேடா!

 ரைஸ் மலாய் பேடா

 ##~##

தேவையானவை: பச்சரிசி மாவு, பனீர் துருவல்  -  தலா ஒரு கப், பால் - ஒரு லிட்டர், தேங்காய் துருவல் - ஒரு கப், முந்திரி (பொடிக்கவும்), திராட்சை - தலா 25, நெய் - 25 கிராம், டூட்டி ஃப்ரூட்டி - 25 கிராம், சர்க்கரை - 300 கிராம், ஏதாவது ஒரு எசன்ஸ் - சில துளிகள், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: முதலில் பச்சரிசி மாவை லேசாக வறுக்கவும். இதில் பனீரைக் கலந்து சிறிது சூடான பால் விட்டு, கெட்டியாகப் பிசைந்து தனியே வைக்கவும். தேங்காய் துருவல், முந்திரி, திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி, 100 கிராம் சர்க்கரை ஆகியவற்றை கலந்து, சிறிது நெய் விட்டு வதக்கி பூரணம் தயாரிக்கவும். அரிசி மாவை சிறிது எடுத்து கிண்ணம் போல் செய்து, தேங்காய்ப் பூரணத்தை  நெல்லிக்காய் அளவு எடுத்து அதனுள் வைத்து உருண்டையாக மூடிக் கொள்ளவும். இப்படியே எல்லாவற்றையும் செய்து கொள்ளவும். பாலில் நீர் விடாமல், ஒரு அகலமான பாத்திரத்தில் விட்டு கொதிக்க விட்டு, மீதமுள்ள சர்க்கரையை சேர்க்கவும். உருண்டைகளை விண்டு போகாதவாறு ஒவ்வொன்றாகப் பாலில் போடவும். வெந்ததும் மேலே வரும். மேலும் சிறிது நேரம் கொதிக்க      விடவும். பின்னர் எசன்ஸ், ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். இதை சூடாகவோ, குளிர வைத்தோ சாப்பிடலாம்.

வாசகிகள் கைமணம்

- கே.கமலி, சென்னை-83 படங்கள்: ஆ.முத்துக்குமார்

மேக்ரோனி  சீஸ் சாலட்

தேவையானவை: மேக்ரோனி (வேக வைத்தது) - 200 கிராம், தக்காளி - 3, கேரட் - 2, குடமிளகாய் - 2, வினிகர் அல்லது எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன், முட்டைகோஸ் - ஒன்று, சீஸ் - 100 கிராம், பூண்டு - 4 பல், மல்லித்தழை -  சிறிதளவு, மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.

வாசகிகள் கைமணம்

செய்முறை: கோஸை லேயர், லேயராக எடுத்து அரை வேக்காடாக வேக வைக்கவும். காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும். வேக வைத்த மேக்ரோனியுடன், நறுக்கிய தக்காளி, கேரட், குடமிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு, உப்பு, மிளகுத்தூள், வினிகர் அல்லது எலுமிச்சைச் சாறு, சீஸ் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். நறுக்கிய மல்லித்தழையை தூவவும். வேக வைத்த கோஸ் லேயர்களில் சாலட்டை வைத்து பரிமாறவும். சத்துமிக்க இந்த சாலட், சுவையாகவும் இருக்கும்.

- ஜனனி திருமலையப்பன், மதுரை

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...

மேக்ரோனி - சீஸ் சாலட்: கலர் குடமிளகாய் பயன்படுத்தினால், சாலட் பார்வைக்கு மேலும் அழகாக இருக்கும்.

ரைஸ் மலாய் பேடா: பூரணம் செய்யும்போது சிறிது கோவா சேர்த்தால், சுவை அதிகரிக்கும்.

அடுத்த கட்டுரைக்கு