Published:Updated:

செம ஸீன் பார்ட்டீஸ் !

உ.கு.சங்கவி படங்கள்: செ.நாகராஜன்

##~##

அதிகமா ஸீன் போடுறது ஆண்களா, பெண்களா..?! - இதுதான் இந்த முறை 'டீன் டாக்’ டாபிக். சென்னையைச் சேர்ந்த சில காலேஜ் கேர்ள்ஸ் சாலமன் பாப்பையா, லியோனி, ஞானசம்பந்தன் பட்டிமன்றம் ரேஞ்சுக்கு டீம் பிரிஞ்சு பேசின பேச்சு, ஆஹா... ஓஹோ ரகம்னுதான் சொல்லணும்!

''சந்தேகமே இல்லாம பசங்கதான்!''னு ஆரம்பிச்சாங்க அனுஷ்யா.

''பழைய சாமான் கடையில இருந்து தள்ளிட்டு வந்த மாதிரி மொக்கையா ஒரு பைக் வெச்சுகிட்டு, என்னமோ பஜாஜ் கம்பெனிக்காரன் (பார்த்தும்மா... வக்கீல் நோட்டீஸ் வந்துடப்போகுது) அவனுக்குனே அதை டிசைன் பண்ணின மாதிரி வெட்டி பந்தாவோட ஓட்டிட்டுப் போறது மட்டும் இல்லாம, அதுக்குப் போடுவாங்க பாருங்க ஒரு ஹெல்மெட்டு.... நெருப்பு பறக்கிற மாதிரி, ஸ்பைடர்மேன் படம் எல்லாம் போட்டு... ஷ்ஷ்ப்பா... கொசுத் தொல்ல... தாங்க முடியல!''னு அனுஷ்யா சொல்ல,

''ஏய், அந்த கண்ணாடி கரகாட்டத்தைச் சொல்லுங்கப்பா!''னு வந்தாங்க லலிதா.

''பச்சை கலரு சிங்குச்சா, மஞ்ச கலரு சிங்குச்சானு கண்ணைக் குத்தும் அவங்க போடுற கண்ணாடி கலர். இது போதாதுனு ஹேர் கலர் அலப்பறை வேற. ராயப்பேட்டையில இருந்து வந்துட்டு, அமெரிக்கன் பேக்; அதுவும் 'நண்பன்’ விஜய் ஸ்டைல்ல சைட் பேக்னு கொல்லுவாங்க. அப்புறம் என்ன... நமக்கெல்லாம் 'நெஞ்சு பொறுக்குதில்லையே’தான்!''னு கண்ணைக் கசக்கினாங்க லலிதா.

செம ஸீன் பார்ட்டீஸ் !

''அட, இதெல்லாம்கூட பரவாயில்லடி. அவ்ளோ மொக்கை பையனா இருந்துட்டு, ஒரு அழகான பொண்ணு போனாக்கூட திரும்பிப் பார்க்காம 'நான் நல்லவன்’னு போடுவாங்க பாருங்க ஒரு ஸீனு...''னு சொல்லிட்டு சிரிச்சு தீர்த்த டெலினா, ''அதுக்கு மன்னிப்பே இல்லை!''னு தீர்ப்பையும் வேற சொல்லிட்டு 'கெக்கேபிக்கே'தான்!

அடுத்தபடியா... பொண்ணுங்களோட ஸீன்களை பட்டியல் போடறதுக்காக பரபரப்பா கிளம்பி வந்தாங்க கௌசல்யா அண்ட் டீம்.

''பசங்களாச்சும் பொண்ணுங்க முன்னதான் ஸீன் போடுவாங்க. ஆனா... பொண்ணுங்க, பொண்ணுங்களுக்குள்ளயே ஸீன் போடுவாங்க. குறிப்பா, தனக்கு வராதுனு தெரிஞ்சும் முன்னாடி கொஞ்சம் முடியை எடுத்துவிட்டுட்டு, அதை ஒதுக்கிட்டே பேசுவாங்களே... ஸ்டைலாமாம்!''னு ஷன்மதி ஆரம்பிக்க,

செம ஸீன் பார்ட்டீஸ் !

''எல்லாரும் சேர்ந்துதான் போயிட்டு இருப்போம். அப்போ யாராவது ஒரு பையன் அந்தப் பக்கம் வந்துட்டா போதும், அங்க திடீர்னு ஒரு 'சந்தோஷ் சுப்பிரமணியம்’ ஹாசினி பிறந்துடுவா. சத்தமா சிரிக்கிறது, குதிச்சுக்கிட்டே நடக்கிறதுனு... அப்பப்பா!''னு ஜாயின் அடித்தார் பிருந்தா. ''ஃபுல் மேக்கப் பண்ணிட்டு காலேஜுக்கு வருவாங்க. கிளாஸ்ல அப்பப்போ இல்ல... எப்பவுமே டச் அப் வேலைதான் நடந்துட்டே இருக்கும். ஒரு ஹேண்ட் மிரர் வெச்சுட்டு, 'இப்போ ஓ.கே.யா?’னு ஏதோ அடுத்த ஸீனுக்கு ரெடியாகப் போற ஆக்ட்ரஸ் மாதிரி கேள்வி கேட்டு கொல்லுவாளுங்க!''னு கௌசல்யா சொல்ல,

''கல்யாணம், ரிசப்ஷன்னு ஏதாவது ஒரு ஃபங்ஷன்னா போதும்... பத்து வருஷமா பக்கத்து வீட்டுல இருக்கிற குழந்தை, ரோட்ல சுத்துற நாய், பேய் எல்லாம் அப்பதான் நம்ம நண்பிகளுக்கு கண்ல படும். 'அச்சுசூ... ஸோ க்யுட்டீ... ச்சோ ஸ்வீட்டி’னு விடுவாளுங்க பாசப் பீட்டரு!''னு முடிச்சாங்க பிருந்தா.

ஆக... பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்... ரெண்டு பேருமே செம'ஸீன்’ பார்ட்டீஸ்தான் என்பது... 'டீன் டாக்’ தீர்ப்பு!

அடுத்த கட்டுரைக்கு