Published:Updated:

சாப்பிட வாங்க !

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

##~##

ஒரு ஹோட்டலுக்குச் செல்லும்போது... 'இங்கே தரப்படும் உணவு வகைகள், சுவை, தரம், விலை என எல்லாமும் முன்கூட்டியே தெரிந்தால்... நன்றாக இருக்குமே' என்று ஒவ்வொரு தடவையும் யோசிப் பீர்கள்தானே! அதை இதழ்தோறும் உங்களுக்குப் படம் பிடித்துக் காட்டும் பகுதிதான், 'சாப்பிட வாங்க!’

இந்த இதழில் இடம்பிடிக்கிறது.... சென்னை, நுங்கம்பாக்கத்தில் இயங்கும் 'ஜீவன் யுவர் 'கஃபே’ சைவ உணவகம்.

நாம் ஆர்டர் செய்ய, பேரர் கொண்டு வந்து டேபிளில் வைக்க... என உட்கார்ந்த இடத்தி லேயே சாப்பிடுவதற்குப் பதிலாக, நமக்குப் பிடித்ததை, வேண்டும் அளவுக்கு நாமே எடுத்துச் சாப்பிடும் 'பஃபே சிஸ்டம்' இந்த ஹோட்டலின் ஸ்பெஷல். அதையே நாமும் தேர்ந்தெடுத்தோம். தென்னிந்திய, வட இந்திய உணவு வகைகள் என்று டேபிளிலும் விநியோகிக்கிறார்கள். 'பஃபே’க்கு தனியிடம்!

பஃபே வகையில் 35 வகையான உணவுகள் என்றதும்... 'இவ்வளவையும் சாப்பிட முடியுமா?’ என்று மலைக்கவே செய்தது. ஆனால், சைனீஸ் வெஜிடபிள் சூப், தந்தூரி பைனாப்பிள் எனத் தொடங்கி... ஐஸ்க்ரீம் வித் குலோப்ஜாமூன் வரை ஒன்றுவிடாமல் சாப்பிட முடிகிறது.

சாப்பிட வாங்க !

ஒரு நாளைக்கு தரப்படும் மெனு, மறுநாள் போனால் கிடைக்காது. ''அடுத்த ரவுண்ட் வருவதற்கு கிட்டத்தட்ட 45 நாட்கள் ஆகும்'' என்கிறார் சூப்பர்வைசர்... வாவ்! பலவகை உணவுகளும் கிடைக்கும் இப்படிப்பட்ட உணவகங்களில்... சைனீஸ், பஞ்சாபி என்று மற்ற ஊர் சமையலில் கவனம் செலுத்திவிட்டு, உள்ளூர் சமையலில் கோட்டைவிடுவது வழக்கம். இங்கே உள்ளூர் சமையலிலும் தனிக்கவனமே... குறிப்பாக, நம்மூர் ரசம்... பிரமாதம்!

'இது குழந்தைகளுக்கு வேண்டாம்; இது பெரியவர் களுக்கு சரிப்படாது’ என்று எதையும் ஒதுக்க முடிய வில்லை. அக்கம்பக்கத்தில் சாப்பிட்டு எழுந்தவர்களின் தட்டுகளும் துடைத்து வைத்தாற்போல இருக்கிறது! காளான், நூடுல்ஸ், சீஸ், காலிஃப்ளவர், காராமணி என்று வடஇந்திய, தென்னிந்திய உணவு வகைகளை கலந்து கட்டி சாப்பிடுவது தனி இன்பமே. நமக்குத் தேவையான 'சாட்' எதுவோ... அதை நாமே தயாரித்துக் கொள்ளும் வகையிலும் ஏற்பாடு செய்திருப்பது... எக்ஸலன்ட்!

பஃபே என்றால், வெவ்வேறு தட்டுகளை மாற்ற அனு மதிப்பதில்லை பெரும்பாலான உணவகங்களில். இங்கே, அதை அனுமதிப்பது ஆச்சர்யமே! சாப்பிட்டதும்... தட்டு களை அவ்வப்போது எடுத்துவிட்டு சுத்தப்படுத்துவதும், வேறு ஏதாவது சாப்பிடுங்களேன் என்று உற்சாகப் படுத்துவதுமாக கூடுதல் மதிப்பெண்களை பெறுகிறார்கள் சர்வர்கள்.

சாப்பிட வாங்க !

அதேசமயம்... நாம் உட்கார்ந்து சாப்பிட்ட மேஜை, தரைமட்டம் சரியில்லாமல் நடுங்கிக் கொண்டிருக்க... சாப்பிடும் சூப் மேலே சிதறும் என்ற பதற்றத்தை ஆரம்     பத்திலேயே ஏற்படுத்துகிறது. பேப்பர் கப்களில் தண்ணீர் வைப்பது, முகம் சுளிக்க வைக்கிறது. சூப் சுமாராக இருப்பதும் ஒரு குறையே! கடைசியாக எல்லாம் முடிந்து சாப்பிட்ட தட்டை வைக்க இடம் தேட வேண்டியிருக்கிறது. பாக்கு, ஸ்வீட் சோம்பு, டூத் பிக் என குட்டி மரப்பெட்டியில் வைத்திருந்தாலும் அது எங்கே இருக்கிறது என்பது தேடி கண்டுபிடிக்க வேண்டும்.

ஒட்டுமொத்தமாக...

விருந்து என்பது வெறும் வயிற்றை நிரப்புவது மட்டுமல்ல; மனதையும் நிரப்புவதுதான் என்பதை முழுமையாக்குகிறது ஜீவன் யுவர் கஃபே. ஒரு சின்ன மீட்டிங் முடித்துவிட்டு லஞ்ச், நண்பர்களுடன் கெட் டுகெதர், வீக் எண்ட் ஃபேமிலி ஈட்டிங் அவுட்டிங் போன்றவற்றுக்கு தாராளமாக 'டிக்’ செய்யலாம்!

- சுவைப்போம்...

ஹோட்டல்: ஜீவன் யுவர் கஃபே
லேண்ட் மார்க்: எண் 14, ஜெகந்நாதன்
தெரு. நுங்கம்பாக்கம், சென்னை
(ஸ்டெர்லிங் ரோடு பஸ் நிறுத்தம் அருகில்).

உணவு: வடஇந்திய, தென்னிந்திய உணவு வகைகள்.
தென்னிந்திய மதிய உணவு

சாப்பிட வாங்க !

120,
வடஇந்திய மதிய உணவு

சாப்பிட வாங்க !

150,
சைனீஸ் மதிய உணவு

சாப்பிட வாங்க !

150,

மினி மீல்ஸ்

சாப்பிட வாங்க !

70
ரெவ்யூ டீம் சுவைத்தது: பஃபே உணவு.
வரிகளுடன் சேர்த்து

சாப்பிட வாங்க !

295
மூன்று வயதிலிருந்து பன்னிரண்டு வயது வரையிலானவர்களுக்கு

சாப்பிட வாங்க !

175

'டிப்ஸ்... டிப்ஸ்...’ விஜயலட்சுமி ராமாமிர்தம், 'கோல ஸ்பெஷலிஸ்ட்' அருணா சண்முகம், '30 வகை உணவு ஸ்பெஷலிஸ்ட்' சீதா சம்பத் ஆகியோர் இம்முறை நம் குழுவில் இணைந்திருந்தனர். அவர்களின் பார்வையில்...

விஜயலட்சுமி ராமாமிர்தம்: நடுத்தரக் குடும்ப மக்கள், தயக்கமில்லாமல் வந்து சாப்பிடக்கூடிய எளிய, அதேசமயம் தூய்மையான தோற்றத்துடன், கண்களை உறுத்தாத உள் அலங்காரங்களுடன், நேர்த்தியாக இருப்பது ப்ளஸ் பாயின்ட். உணவு வகைகள் அதிக காரமில்லாமல் இருப்பது வரவேற்கத்தக்கது. மைனஸ் என்றால்... சாப்பிட்டு முடித்து வாசலுக்கு வந்ததும் குப்பென்று வீசும் கெட்ட வாடைதான். காரணம், மாநகராட்சி குப்பைத்தொட்டி. ஹோட்டல் நிர்வாகத்தினர் இதை அப்புறப்படுத்துவது சுலபம் என்றே தோன்றுகிறது.

சாப்பிட வாங்க !

அருணா சண்முகம்: மற்றவர்களுக்காக வாச லில் காத்திருந்த என்னை, வெயிட்டிங் ஹாலுக்கு அழைத்து உட்கார வைத்து, குடிக்கத் தண்ணீர் கொடுத்து சிரித்த முகத்துடன் வரவேற்பு தந்தது... எங்கேயும் நான் பார்த்திராதது. உணவைப் பொறுத்தவரை ஏ.சி. அறையிலும் அப்பளம், அப்பளமாக இருந்தது ஒன்றே போதும். விலைக்கேற்ற தரமான உணவையும் நல்லதொரு ஐஸ்க்ரீமையும் சாப்பிட்ட திருப்தி. புளி சாதத்தில்தான்... ஏனோ டேஸ்ட் குறைவு.

சீதா சம்பத்: வடஇந்திய, தென்னிந்திய உணவு வகைகளை ஒரேநேரத்தில் சாப்பிட்ட உணர்வு ஏற்பட்டது. கலருக்காக மசாலா அயிட்டங்களை அதிகம் சேர்க்காமல், இயற்கையான ருசியில் கொடுப்பதைப் பாராட்ட வேண்டும். வாஷ்பேஸினில் கூடுதல் கவனம் செலுத்தலாம்.

அடுத்த கட்டுரைக்கு