குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி
சிகரத்தை நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர்

ப்ளீஸ்... ஒரு கதை சொல்லுங்க !

கதைகள் மட்டுமல்ல, விளையாட்டும்கூட வளர்த்தெடுக்கும்... உங்கள் குழந்தையை 'நம்பர் ஒன்'னாக! என்று கடந்த இதழில் முடித்திருந்தேன். ஆக, விளையாட்டு பற்றித்தான் இப்போது பேச வேண்டும். ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன், தன் ஏழு வயதுக் குழந்தையுடன் என்னைச் சந்தித்த ஒரு பெண்மணி, இந்த இதழிலும் கதையைப் பற்றியே மிக அழுத்தம் கொடுத்துப் பேச வைத்துவிட்டார்.

''மேடம்... என் குழந்தைக்குப் பாடங்களைக் கத்துக்குறதுல நிறைய சிரமம் இருக்கு. அவனால படிச்ச எதையும் நினைவுல வெச்சுக்க முடியல. இத்தன வயசாகியும் இன்னும் சரியா நிறங்கள், வடிவங்கள், உறவுகள் எல்லாம் சொல்லத் தெரியல. என்ன பண்றது?’ என்று கேட்டார்.

நான் அவரிடம், ''உங்க குழந்தைக்கு கதை சொல்வீங்களா..?'' என்றேன்.

''இல்ல மேடம்... எனக்கு கதை சொல்லத் தெரியாது'' என்றார்.

சட்டென அவரிடம் சொன்னேன்... ''அப்படின்னா உங்க குழந்தையும் படிக்காது. உங்களுக்கோ, உங்க கணவருக்கோ கதை சொல்லத் தெரியாது. ஆனா, உங்கள் குழந்தை மட்டும் எப்படி எல்லாம் தெரிஞ்சவனா இருக்கணும்னு எதிர்பார்க்கறீங்க? உங்களுக்கு அந்த உரிமை இல்லை!'' என்று!

பல பெற்றோர்கள் கலந்து கொண்ட ஒரு கருத்தரங்கில் இதே கேள்வியைத்தான் கேட்டேன்... ''எத்தனை பேர் உங்க குழந்தைகளுக்குக் கதை சொல்றீங்க?'' என்று. 'ஆம்’ என்று பதில் சொன்னவர்கள் மிகமிக சொற்பம். ''உங்கள்ல எத்தனை பேர், நீங்க குழந்தையா இருக்கும்போது கதை கேட்டு வளர்ந்தீங்க? என்ற கேள்விக்கு, அரங்கத்தில் இருந்த 80 சதவிகிதம் பேர் 'ஆம்’ என்று பதில் சொன்னார்கள். நாம் அனுபவித்த சந்தோஷத்தை நம் குழந்தைகளுக்குத் தர மறுப்பது எந்த விதத்தில் நியாயமாகும் தோழிகளே?

ஏன் கதைக்கு இத்தனை தூரம் முக்கியத்துவம் தருகிறோம்? கனமான காரணம் இருக்கிறது. மறுபடியும் காக்கா-நரி-வடை கதையையே எடுத்துக் கொள்வோம். 'ஒரு ஊர்ல ஒரு கறுப்புக் காக்கா இருந்துச்சாம். அந்தக் காக்கா ரெண்டு றெக்கையையும் அகலமா விரிச்சு விரிச்சுப் பறந்துச்சாம். பாட்டி மெதுவடை சுட்டு வெச்சிருந்தாங்களாம்’ என்று நீளும் கதை. 'பறவைங்களுக்கு மட்டும்தான் றெக்கை இருக்கும். நரியால பறக்க முடியாது. ஏன்னா, நரி ஒரு விலங்கு. அதுக்கு றெக்கைக்குப் பதிலா நாலு கால்கள் இருக்கும்’ என்று குழந்தை பல புதிய விஷயங்களை இந்தக் கதையிலிருந்து கற்றுக் கொள்கிறது. தன் 'மொழி’த் திறனையும் பேச்சுத் திறனையும் சீக்கிரமாக வளர்த்துக் கொள்கிறது.

'வடை சூடா இருக்கும்போது காக்கா தூக்கிட்டு போயிருந்தா..?’ என்ற நீங்கள் இடம் பார்த்து கேள்வியோடு கதையை நிறுத்தும்போது, குழந்தையின் 'லாஜிக்கல்’ திறனும், 'காக்காவின் வடையை நரி ஏமாத்தி தூக்கிட்டுப் போனது தப்புதானே அம்மு?’ என்கிற உங்கள் கேள்வியில், 'அடுத்தவர்களை ஏமாற்றக் கூடாது’ என்கிற வாழ்வியல் மதிப்பீடுகள் சார்ந்த அற, ஒழுக்கச் சிந்தனைகளையும் நாம் சொல்லும் கதை மூலம் குழந்தை கற்றுக் கொள்கிறது.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்திக்கு, 'பொய் சொல்லல் பாவம்’ என்ற அற நெறியை கற்றுக் கொடுத்து, 'மாகாத்மா காந்தி’யாக மாற்றியது... 'ஹரிச்சந்திரன் - சந்திரமதி’ கதைதானே?!

இன்று டாக்டராக, இன்ஜினீயராக, வக்கீலாக, அரசு அதிகாரிகளாக, கல்லூரிப் பேராசியர்களாக, விஞ்ஞானிகளாக என பலவிதமான பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கும் சீனியர்கள் எல்லாம், தங்கள் வீட்டுத் திண்ணைகளில் உட்கார்ந்து தாத்தா - பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்தவர்கள்தானே!

எனவே, உங்கள் குழந்தைக்கு சொத்து சேர்ப்பதைவிட முக்கியம், நல்ல கதைகள் சொல்வது. அவை அவர்களின் வளர்ச்சிக்கான அறிவு, பண்பு, குணம், கற்பனைத் திறன், ஒழுக்கம், வாழ்வியல் அறநெறி அத்தனையும் செலவில்லாமல் கொடுத்துவிடும். இன்றைய தலைமுறை, சுயநலம் மிக்க தலைமுறையாக வளர்ந்து வருகிறது என்கிற பேச்சு பரவலாக எழுந்துள்ளது. கதையில்லா வாழ்க்கை முறையும்கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

யோசியுங்கள்... சொல்லத் துவங்குங்கள் உங்கள் குழந்தைக்கு சின்னச் சின்ன கதைகளை!

உங்கள் குழந்தை வளரும்போதே, அதனுடன் ஒரு மேனேஜ்மென்ட் படிப்புக்கான பாடதிட்டத்தில் உள்ள 'அமைப்பு’ (Organisation), 'திட்டமிடல்’ (Planing), 'குழு உத்வேகம்’ (Team spirit), 'கோட்பாடு உருவாக்கம்’ (Concept creation), 'நிர்வாகப் பண்பு' (Management quality), 'சமயோஜித புத்தி' (time sense), 'நெருக்கடியை சமாளித்தல்' (Risk manegement) என அத்தனைத் திறமைகளும் வளர வேண்டுமா? அப்படியானால் உங்கள் குழந்தைகளை தினமும் கண்டிப்பாக விளையாட விடுங்கள்.

படம்: விஜய் மணி

- வளர்ப்போம்...