கொப்புடைய நாயகியே !
கரு.முத்து

எல்லாம் அந்த கொப்புடையாள் பார்த்துக்குவா!'' என்பதுதான் எல்லா காரியங்களிலும் செட்டிநாட்டு மக்களின் மிகப் பெரிய நம்பிக்கை. காலையில் கடை திறப்பதற்கு முன் நகரத்தில் உள்ள பெரும்பாலான கடைகளின் சாவியும் அம்மனின் காலடியில் வைக்கப்பட்டு, பூஜித்து எடுத்த பிறகே விழிக்கிறது கடை வீதி. துரோகம், வஞ்சகம், ஏமாற்று செய்கிறவர்களையும் 'நீயே பார்த்துக்கம்மா...’ என்று அவளிடம்தான் ஒப்படைக்கிறார்கள்.

. இப்படி செல்வம், ஆரோக்கியம், நிம்மதி, பகைவரிடமிருந்து பாதுகாப்பு என்று எல்லாவற்றுக்கும் ஒருசேர அருள் பாலிக்கும் இந்த கொப்புடையம்மன் இருப்பது... சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகரின் மையப் பகுதியில்!.
வீரம்மிக்க மருது சகோதரர்கள், மோர் விற்ற இடையர் குல கிழவி என்று பலராலும் தொடர்ந்து திருப்பணி செய்து வரப்பட்டு, தற்போது நவீனமாக மாற்றியமைக்கப் பட்டிருக்கும் அம்மனின் ஆலயம், கிழக்கு நோக்கியபடி இருக்கிறது. நான்கு கைகளுடன், தலையில் தீச் சுவாலை கிரீடம் தாங்கி, மூலஸ்தானத்தில் ஐம்பொன் விக்கிரகமாக நிற்கிறாள் அன்னை கொப்புடையம்மன். உற்சவ காலங்களில் வீதி உலாவுக்குச் செல்வதும் இதே விக்கிரகம்தான் என்பது சிறப்போ சிறப்பு!

சென்னையில் இருந்து குடும்பத்துடன் வந்து, இரண்டாவது பிள்ளைக்கு மொட்டை போட்டுக் கொண்டிருந்தார் உமா. ''எங்க குடும்பத்துல குழந்தைகளுக்கு முதல் மொட்டை போடறது, காது குத்து, கல்யாணம்னு எல்லா விசேஷமும் இவ சந்நிதியிலதான். சென்னையில மட்டுமில்ல... உலகத்துல எந்த மூலையில இருக்கற இவ பக்தர்களும் இதுமாதிரியான விசேஷங்களுக்கு இங்கதான் தேடி வருவாங்க. இவளுக்கு கொழந்தைகள்னா ரொம்பவே பிரியம். அதனால கொழந்தைகள இவகிட்ட ஒப்படைச்சுட்டா, எல்லாத்தையும் அவளே பார்த்துக்குவா!'' என்று பரவசம் பொங்கச் சொன்னார் உமா.

குழந்தைகள் மீதான கொப்புடையாளின் அதீத பிரியத்தில்தான் இருக்கிறது கோயிலின் தலவரலாறே! காரைக்குடி நகரில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செஞ்சை சங்கராபுரத்தில் இருக்கும் காட்டம்மன் எனும் அன்னையின் தங்கைதான் இந்த கொப்புடையாள். காட்டம்மனுக்கு ஏழு பிள்ளைகள். கொப்புடையாளுக்கு குழந்தைகள் இல்லை. அதனால் ஆசை பொங்க அக்காவின் குழந்தைகளைக் காண அடிக்கடி பலகாரங்கள் செய்து எடுத்துக் கொண்டு வருவாள் கொப்புடையாள். குழந்தை இல்லாத இவள், இப்படி வருவது, கொஞ்சுவது காட்டம்மனுக்கு பிடிக்கவில்லை. அதனால் ஒருமுறை கொப்புடையாளின் கண்களில் படாதவாறு குழந்தைகளை மறைத்துவிட்டாள். கோபப்பட்ட கொப்புடையாள், குழந்தைகளைக் கல்லாக்கி விட்டு காரைக்குடி வந்து தெய்வமாக நின்றுவிட்டாள்.

மொகலாய மன்னர்கள் காலத்தில் இந்து தெய்வங்களுக்கு ஆபத்து வந்தபோது, ஐம்பொன்னாலான அவளுடைய விக்கிரகம் ஒரு

பெரிய வேப்பமரத்தில் இருந்த பொந்தினுள்ளே ஒப்படைக்கப்பட்டதாம். இப்படி ஒப்படையாக வைக்கப்பட்டவள், பிற்காலத்தில் மாடு மேய்க்கும் சிறுவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் வெளியே எடுக்கப்பட, 'ஒப்புடையாள்’ என்ற பெயரில் வழிபடப்பட்டாளாம். அதுதான் கொப்புடையாள்ஆகி விட்டது என்றும், காதில் அணிந்திருந்த 'கொப்பு’ என்கிற அணிகலன் காரணமாகத்தான் 'கொப்புடையாள்' என்றும் இரு மாதிரியான பெயர்க்காரணங்கள் கூறப்படுகின்றன.

அம்மனுக்கான நேர்த்திக்கடன்களில் ஒன்று, மாலை மாற்றிக் கொள்வது. திருமணம் எங்கு நடந்தாலும், மறுநாள் மணமக்களை சந்நிதிக்கு அழைத்து வந்து, அம்பாள் பாதத்தில் அர்ச்சனை செய்த மாலைகளை மாற்றிக் கொள்ளச் செய்கிறார்கள். இப்படி ஒரு பிரார்த்தனைக்காக சென்னையில் இருந்து சுற்றம்சூழ வந்திருந்தார் ருக்மணி சுந்தர்ராஜ் (இவர், பிரபல கர்னாடக இசை மேதை அரியக்குடி ராமானுஜ அய்யங்காரின் கொள்ளுப்பேத்தி).

''பையனுக்கு நல்லபடியா மணமாலை அமையணும்னு அம்மன்கிட்ட வேண்டிக்கிட்டேன். அவ அருளால நேத்துதான் நல்லபடியா திருமணம் முடிஞ்சுது. இவ சந்நிதியில, அவளுக்கு முன்னால மாலை மாத்தி நன்றி சொல்ற அந்த நேர்த்திக்கடனுக்காகத்தான் எல்லாரும் வந்திருக்கோம். இனி பொண்ணும், மாப்பிள்ளையும் அவ பொறுப்பு!'' என்றார் ருக்மணி சந்தோஷத்துடன்.

வேறு எங்குமே இல்லாத சிறப்பான ஒரு நேர்த்திக்கடனும் இங்கு இருக்கிறது. பக்தர்கள் விரும்பினால் விரும்பிய நாளில், விரும்பிய நேரத்தில் அம்பாளை புறப்பாடு செய்து திருவீதி உலா வரச்செய்ய முடியும் என்பதுதான் அது. இதற்காக ஆகும் செலவு முழுவதையும் கோயில் அலுவல கத்தில் செலுத்த வேண்டும். காரைக்குடி சுற்று வட்டாரப் பகுதிகளில் 60, 80 வயது முடிந்தவர்கள் இத்தகைய புறப்பாட்டை செய்து வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

''திருமணத் தடை, குழந்தைப் பேறு தள்ளிப்போவது என தன்னிடம் வந்து உருகும் பக்தர்களின் குறைகளை உடனடியாக தன் கருணையால் நிவர்த்திக்கிறாள் அம்மா. வருகிறவர்களிடம் அவள் அருள் விழி நேரடியாக பேசும். குழந்தைகள் மேல் ஆசை வைத்து தெய்வமானதால்தான் அவர்கள் மேல் தனிப் பிரியம் கொண்டிருக்கிறாள். சந்நிதிக்கு வரும் குழந்தைகளை நோய், நொடி அண்டாமல் கண்ணுக்குள் வைத்துக் காக்கிறாள் இந்த அன்னை!'' என்று அம்பாளின் அருள் மகிமையைச் சொல்கிறார் ஆலயத்தின் முறை குருக்கள்களில் ஒருவரான சுந்தரேச குருக்கள்.

ஒப்பில்லாத வரப்பிரசாதி இந்த கொப்புடையாள் என்பதற்கு வாழும் சாட்சியாக லட்சக்கணக்கானோர் இருந்தாலும், அழியாத காவியங்களாக இவளின் அடியார்கள் எழுதி வைத்துவிட்டுப் போன பிள்ளைத்தமிழ், திருப்பள்ளியெழுச்சி, இரட்டை மணிமாலை என பலவும் விளங்குகின்றன.

''மைப்படிந்த கண்ணுடையாள் மலர்முகத்தாள்,
புன்னகையாள் பவளவாயாள்
இப்படியால் இவ்வணத்தாள் என்றெழுதிக் காட்ட
வொண்ணா இறைவியாவாள்
ஒப்புடையாள் காரைநகர் ஊர்நடுவில் கொலுவிருக்கும்
உலகம் ஈன்று
கொப்புடைய நாயகியாள் கொய்மலர்சேவடி தலை
மேற்கொண்டு வாழ்வோம்...''

- அம்மன் வருவாள்...

எப்படிச் செல்வது?

தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் இருந்து காரைக்குடிக்கு நேரடி பேருந்து போக்குவரத்து வசதி இருக்கிறது. ரயில் போக்குவரத்தும் உண்டு. கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6.30 - 12.00 மணி வரை. மாலை 4.30 - 8 மணி வரை. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அரை மணி நேரம் கூடுதலாக திறந்திருக்கும். கோயில் தொலைபேசி எண்: 04565-238861.

இணையதள முகவரி: www.koppudayanayakiammantemple.org

படங்கள் : எஸ்.சாய் தர்மராஜ்