வாசகிகள் பக்கம்
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

150
ஓவியங்கள்: ஹரன்

'பத்தும் பத்தும் எவ்வளவு?'

அமெரிக்கா சென்று இருந்தபோது, என் ஐந்து வயது பேரன் சித்தார்த்தை, தினமும் காலையில் பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் சென்று, மாலையில் திரும்ப அழைத்து வரும் பொறுப்பை சில மாதங்கள் வரை நான் ஏற்றிருந்தேன். அப்படிச் செல்லும்போது தினமும் காலையில் அவன் டீச்சரைப் பார்த்து சில வார்த்தைகள் பேசுவதுண்டு. ஒரு நாள் வகுப்புகள் முடிந்து வந்தவன், பள்ளி வாசலில் காத்திருந்த என்னிடம் வந்து, ''பாட்டி உனக்கு 'அடிஷன்' (கூட்டல்) தெரியுமா?’' என்றான். தலையாட்டினேன். ''பத்தும் பத்தும் எவ்வளவு... சொல்லு பார்க்கலாம்?'’ என்றான். நான் சிறிது யோசிப்பதுபோல் பாவனை செய்து, ''இருபது'’ என்றேன். உடனே அவன் கோபமாக, ''எங்களுக்குச் சொல்லித் தர்றதுக்கு முன்னால காலையிலேயே மிஸ் உனக்கு சொல்லி கொடுத்துட்டாங்களா..?'’ என்று சீற, அதை அவனுடைய டீச்சரிடம் சொல்லிச் சிரித்தேன் நான்!

- சாந்தா பத்மநாபன், சென்னை-78

'என்னை அடிச்சா...குரங்கா மாறிடுவீங்க!'

நான்கு வயதுப் பேரன் ஹரிஹரன் விடுமுறைக்கு அவன் பெரியம்மா வீட்டுக்குச் சென்றிருந்தான். மற்ற குழந்தைகளை எல்லாம் அடிக்கும் பழக்கம் அவனிடம் உண்டு. அதை மாற்றும் முயற்சியாக, ''இப்படித்தான் அந்த மூணாவது வீட்ல ஒரு பையன் எல்லாரையும் அடிச்சுட்டே இருந்தான். அதனால அவன் குரங்கா மாறிட்டான்...'’ என்று அவனிடம் கதை சொல்லி இருக்கிறாள் பெரியம்மா. அதை கவனமாக கேட்டுக் கொண்ட வாண்டு, ''பெரியம்மா... ஊருக்குப் போனவொடனே... அம்மா, அப்பாகிட்ட இதைச் சொல்லி, 'இனிமே என்னைய அடிக்காதீங்க. குரங்கா போயிடுவீங்க...’னு சொல்லணும்...'’ என்று பூமராங் வசனம் பேசியுள்ளான்.

நொந்து நூடுல்ஸாகிவிட்டாள் பெரியம்மா!

- வி.கணபதி, காஞ்சிபுரம்

'கோமா’ கிளாக்!

அன்று எங்கள் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் உறவினர் 'கோமா’ ஸ்டேஜில் இருப்பது பற்றி கூறினார். அதைக் கவனித்துக் கொண்டிருந்த பத்து வயது பேத்தி வைசாலி, அவர் சென்ற பிறகு, ''கோமா ஸ்டேஜ்னா என்ன..?'' என்றாள். ''உயிர் இருக்கும். மூச்சு வரும். ஆனா, உடல் உறுப்புகள் செயலிழந்திருக்கும். வைத்தியம் செஞ்சா மறுபடி சரியாகலாம்...'' என்று எனக்குத் தெரிந்தவரை விளக்கினேன். சில தினங்கள் கழித்து, ''ஐயையோ... வால் கிளாக் கோமா ஸ்டேஜுக்கு போயிடுச்சே. யாராச்சும் வைத்தியம் பண்ணி காப்பாத்துங்க'' என்று திடீர் கவலையை வெளிப்படுத்தினாள் பேத்தி. ரிப்பேர் ஆகி நொடி முள், நிமிட முட்கள் எல்லாம் நின்றுவிட, பெண்டுலம் மட்டும் ஆடிக்கொண்டிருந்த எங்கள் வீட்டு சுவர்க்கடிகாரத்தைப் பார்த்து வெடித்துச் சிரித்தோம்!

- டி.லலிதா, சென்னை-107

உங்கள் வீட்டு குட்டீஸ் குறும்புகளையும் இந்தப் பகுதியில் அரங்கேற்றலாம். அனுப்ப வேண்டிய முகவரி: 'குட்டீஸ் குறும்பு,’ அவள் விகடன், 757,அண்ணாசாலை, சென்னை-600 002