வாசகிகள் பக்கம்
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

150
ஓவியங்கள்: கண்ணா

சிலிண்டர் உஷார்!

என் அக்காவுக்கு பொதுவாக ஒரு கேஸ் சிலிண்டர் இரண்டு மாதங்களுக்கு பயன்படும். ஆனால், அந்த முறை பத்தே நாட்களில் சிலிண்டர் தீர்ந்துபோக, அதிர்ந்துவிட்டாள். பத்து நாளில் தீர்ந்து போகும் அளவுக்கு வீட்டில் எந்த ஒரு விசேஷமோ, விருந்தோ இல்லை என்பதால், 'எப்படி தீர்ந்து போகும்...?’ என்ற கேள்வியுடன், கொதிப்புடன் சம்பந்தப்பட்ட சமையல் எரிவாயு ஏஜென்ஸியை அணுகினாள். ''ஏதோ ஒரு வகையில இங்க தப்பு நடந்திருக்கு. பாதி உபயோகப்படுத்தின நிலையில இருந்த சிலிண்டரை ஊழியர்கள் உங்களுக்குக் கொடுத்து ஏமாத்தி இருக்கலாம். இனிமே அப்படி நடக்காம பார்த்துக்கறோம்...'' என்றதுடன், ''தயவுசெஞ்சு இதை வெளியில சொல்லிடாதீங்க...'' என்றிருக்கிறார்கள். அனுபவம் தந்த அலர்ட் காரணமாக இப்போதெல்லாம் சிலிண்டர் வந்தவுடன் எடை பார்த்து விடுகிறாள் அக்கா.

சிலிண்டர் உபயோகப்படுத்த ஆரம்பிக்கும் தேதியைக் குறித்து வைத்துச் சரிபார்ப்பதுடன், சந்தேகமாக இருந்தால் உடனடியாக எடை போட்டுப் பார்த்துவிடுவதும் நல்லதுதானே!

- எம்.பானுமதி, திருச்சி

ஊட்டுங்கள் தன்னம்பிக்கையை!

வசதி மிக்கவளான என் தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். என்னை அவள் உபசரித்து பேசிக் கொண்டிருந்தபோது தெருவில் ''அப்பளம், வடகம், ஊறுகாய்...'' என்று ஒரு பெண்ணின் குரல் கேட்கவே... அவசரமாகச் சென்று அவரை நிறுத்தி, ஊறுகாயும், அப்பளமும் வாங்கி வந்தாள். ''உனக்கு இருக்கிற வசதிக்கு, பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள்ல இருந்து பொருட்கள் உன் வீடு தேடியே வரவழைக்கலாம். ஏன் தெருவுல விக்கிறதையெல்லாம் வாங்கறே?'' என்றேன் நான் புரியாமல். ''இல்லடி... இப்படி கஷ்ட ஜீவனம் நடத்தற பெண்கள்கிட்ட வாங்கினா, அவங்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கறதா இருக்கும்; பொருட்கள் விலை குறைவாவும் இருக்கும்!'' என்றாள்.

இப்போது நானும் அவள் வழி!

- ம.ஹேமா, ஆரணி

கற்பூரவல்லி... கொசுவுக்கு வில்லி!

எங்கள் வீட்டில் கொசுக்களை விரட்ட, கொசு விரட்டிச் சுருளை ஏற்றி வைப்பது வழக்கம். கிராமத்திலிருந்து வந்த பாட்டி ''ஏன் இந்தப் புகையை வெச்சுக்கிட்டு கஷ்டப்படறீங்க?'' என்று கவலையாகக் கேட்டதோடு, நாங்கள் பூந்தொட்டியில் வளர்க்கும் கற்பூரவல்லி இலைகளையும், சோற்றுக் கற்றாழையையும் பறித்து மிக்ஸியில் அரைத்து, சாறு எடுத்து, அதை வீடு முழுவதும் தெளித்தார். என்ன ஆச்சர்யம்... கொசுக்கள் மாயமாக மறைந்து விட்டன! பின் சாம்பிராணி கோன்கள் வாங்கி, அவற்றை இந்த கற்றாழை - கற்பூரவல்லி சாறில் ஊற வைத்து, வெயிலில் காய வைத்து எடுத்துக் கொடுத்தார். அதை தினம் இரவு ஏற்றி வைத்துதான் இப்போதெல்லாம் படுக்கிறோம். கொசுக்கள் வருவதே இல்லை. கொசு விரட்டிச் சுருளில் வரும் புகையினால் ஏற்பட்ட மூச்சு இரைப்புத் தொல்லையும் இல்லை!

தேங்க்ஸ் டு கிராமத்து கில்லி!

- ஆர்த்தி, சென்னை-4

குழந்தையை அழ வைத்த ஜிகினா!

திருமண விழாவுக்குச் சென்றிருந்தபோது, ஓர் இளம் பெண்ணின் கையில் இருந்த குழந்தை, அவர் தோளில் சாய்வதும், விடாமல் சிணுங்குவதுமாக இருந்தது. குழந்தை தூக்கத்துக்குத் தவிப்பது புரிந்தது. சற்று நேரம் இதை கவனித்த நான், ''ஒரு டவல் இருந்தா கொடுங்க...'' என்று கேட்டு வாங்கி, அதை மடித்து அவர் தோளில் போட்டு, அதன்மீது குழந்தையை சாய்த்துக் கொள்ளச் சொன்னேன். சௌகரியமாக தூங்கியது குழந்தை. இவ்வளவு நேரமும் குழந்தையின் தூக்கத்துக்கு தடையாக இருந்தது, அந்த பெண் அணிந்திருந்த கற்கள், ஜிகினா, சமிக்கி பதித்த டிசைனர் சேலைதான்.

கைக்குழந்தை வைத்திருக்கும் இளம் பெண்களே... கவனம்!

- ஆர்.கே.பொன்னி மோகன், காரைக்கால்