'எஜுகேஷன் ஸ்பெஷல்' அறிவிப்பை வெளியிட்டதும்... றெக்கை கட்டிக் கொண்டது எடிட்டோரியல் டீம்! எந்தெந்த மூலையில், என்னென்ன ரூபத்தில் எல்லாம் படிப்பு தொடர்பான செய்திகள் இருக்கின்றனவோ... அத்தனையும் கொண்டு வந்து, வாசகிகளின் விரல்நுனியில் சேர்த்தாக வேண்டுமே!

இந்த ஓட்டத்துக்கு நடுவே... கல்விக் கூடங்களில் நடந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகளுக்காக, இளம் மாணவிகள் மூவர் தற்கொலை செய்து கொண்ட செய்தியைக் கேட்டால் எப்படியிருக்கும்?

'ஏன்தான் உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு, பிஞ்சுகள் மனதில் நஞ்சை விதைக்கிறார்களோ?' என்று வருத்தத்தில் மூழ்காமல் என்ன செய்ய முடியும்?

குழந்தைகளின் முதல் ஆசிரியரே பெற்றோர்தான். 'நான் பட்ட கஷ்டங்களை என் பிள்ளைகள் படக்கூடாது' என்று அதிக செல்லம் கொடுப்பது... சின்னச் சின்ன ஏமாற்றங்கள், தோல்விகள், கிண்டல்கள் போன்றவற்றையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியாதவர்களாக குழந்தைகளை வளர வைக்கிறது என்று புரியாதவர்களா நாம்!

'நாங்கதான் இப்படி ஆகிட்டோம். நீயாவது நல்லா படிச்சு, பெரிய ஆளா மாறு' என்று அடிக்கடி அச்சுறுத்திக் கொண்டே இருப்பது, ஏதாவது சின்ன சறுக்கல் ஏற்பட்டால்கூட தவறான பாதைக்கு வழி காட்டிவிடும் என்பதும் உண்மைதானே!

பெற்றோருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஆசிரியர்களில் சிலர், தங்களின் பொறுப்பை சமயங்களில் மறந்து போவதும் இத்தகைய கொடுமைகளுக்குக் காரணமாகிவிடும்போது யாரிடம் நோக முடியும்!

'படிப்பு இல்லாவிட்டால், இன்றைய வாழ்க்கையில் என்னவிதமான கஷ்டம்' என்று அழகாக புரிய வைக்காமல், 'வாழ்க்கையே அவ்வளவுதான்' என்று அபத்தமாக பயமுறுத்துவது... விபரீதங்களைத்தானே விலைக்கு வாங்கும்!

எங்குதான் தவறுகள் இல்லை..? எல்லாத் தவறையும் திருத்திக் கொள்ளலாம். ஆனால், தற்கொலை என்பது திருத்திக் கொள்ளவே முடியாத தவறு.

இனியாவது... பெற்றோர்களும், ஆசிரியர்களும் கவனம் காட்டுவார்களா?

உரிமையுடன்

ஆசிரியர்