கேபிள் கலாட்டா
ரிமோட் ரீட்டா

சொக்கா... ஒரு காசா... ரெண்டு காசா... ஆயிரம் பொன்னாச்சே... ஆயிரம் பொன்னாச்சே! அத்தனையும் எனக்கே கிடைக்க அருள்புரிய மாட்டியா?!’னு 'திருவிளையாடல்' பட 'தருமி’ ஸ்டைல்ல இனி பரவசப் புலம்பல் கேட்டு நீங்க திரும்பிப் பார்க்க வேண்டியதுகூட இருக்கலாம்!

அட, ஆமாங்க... மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பு வந்திருக்கே! அதாங்க... சன் டி.வி-யில சனி, ஞாயிறு ராத்திரி 8.30. மணிக்கு 'ராடன்’ நிறுவன தயாரிப்புல புதுசா 'தங்க மழை’ங்கிற கேம் ஷோ ஆரம்பிச்சுருக்குல்ல!

''ஊரெல்லாம் தங்கம் விலை வானத்தைத் தாண்டி பறந்துகிட்டிருக்கறப்ப... நீங்க 'தங்க மழை’னு கரெக்டா நூல் பிடிச்சுட்டீங்களே?''னு ராதிகா மேடத்துக்குப் போனைப் போட்டேன்.

''நான் 'நம்பர் 23, மகாலட்சுமி நிவாசம்’ங்கற தெலுங்கு சீரியல் ஷூட்டிங்காக தி.நகர்ல இருக்கேன் ரீட்டா. அங்க வந்துடறியா?’'னு சட்டுனு அட்ரஸ் சொன்னாங்க மேடம். அப்புறமென்ன... நம்ம ஸ்கூட்டி விர்ர்ர்ர்ர்னு அங்க போய்த்தான் பிரேக் அடிச்சுச்சு!

''2006-ல தங்கத்தை அள்ளித் தந்த 'தங்க வேட்டை’ கேம் ஷோவுக்கு சூப்பர் வரவேற்பு இருந்தது ரீட்டா. மறுபடியும் சீரியல்ல மூழ்கிட்டாலும், இன்னொரு கேம் ஷோ ஆரம்பிக்கறதைப் பத்தி யோசிச்சிட்டேதான் இருந்தேன். தங்கம் விலை விண்ணையே தாண்டிட்டு இருக்கற இந்த நேரத்துல, தங்கத்தை பரிசா தந்து ஒரு கேம் ஷோ ஆரம்பிச்சா, நல்ல வரவேற்பு இருக்கும்னு தோணுச்சு. டீம்லயும் எல்லாரும் உறுதியா தலையாட்ட... ஆரம்பிச்சுட்டோம்'’னு சொன்ன ராதிகா, கேம் ஷோவை நடத்தப் போற தேஜஸ்வினி பத்தியும் சொன்னாங்க...

'' 'ஷோவை நீங்களே நடத்துங்களேன்’னு டீம்ல எல்லாரும் சொன்னாங்க. ஆனா, இருக்கற கமிட்மென்ட்ஸ்ல இந்த கமிட்மென்ட்டையும் ஏத்துக்கற சூழல்ல நான் இல்ல. அதனால, ஃப்ரெஷ்ஷா ஒரு மாடல் தேடினோம். நிறைய பேர் வந்தாலும் அழகா, கேமராவுக்கு ஏத்த சிரிச்ச முகமா, சரளமா தமிழ் பேசத் தெரிஞ்ச பொண்ணா கிடைக்கல. எதேச்சையா ஒரு விளம்பரத்துல தேஜஸ்வினியைப் பார்த்ததும் பிடிச்சுப் போக, விசாரிச்சா... சென்னைப் பொண்ணு! 'தங்கமாப் போச்சு'னு உடனே வரவழைச்சு, ஒரு வாரம் எல்லா டெஸ்ட்டும் எடுத்தோம். செலெக்ட் ஆயிட்டாங்க''னு சொன்ன ராதிகா, கேம் ஷோவோட விதிமுறைகள் சொன்னாங்க!

''கணவன், மனைவி அவங்களோட ரெண்டு பிள்ளைகள்னு மொத்தம் நாலு பேர் கலந்துக்கக் கூடிய ஒரு மணி நேர நிகழ்ச்சி. குறிப்பிடற வயசுல குழந்தைகள் இல்லாதவங்களும், வேறு சில காரணங்களால சொந்தக் குழந்தைகளை அழைச்சுட்டு வரமுடியாத தம்பதிகளும் உறவினர்கள் குழந்தைகளை அழைச்சுட்டு வரலாம். மொத்தம் 32 கேள்விகள். எல்லாமே சுலபமான பொது அறிவுக் கேள்விகள்தான். அதுக்கு, 'சரி’, 'தவறு’ங்கற ரெண்டே ஆப்ஷன்கள்ல விடை சொல்லணும். அதனால, கேள்விகள் எல்லாம் கொஞ்சம் சிக்கலா தெரியலாம்; சிந்தனையைத் தூண்டற மாதிரி இருக்கலாம். எல்லா கேள்விக்கும் சரியான பதிலைச் சொல்ற குடும்பத்துக்கு ஒரு கிலோ தங்கம் பரிசு! கலந்துக்கற ஒவ்வொரு குடும்பமுமே நிச்சயம் கொஞ்சம் தங்கத்தையாவது எடுத்துட்டு போவாங்க!''

- கண்கள்ல கனிவான சிரிப்போட முடிச்சாங்க ராதிகா மேடம்!

''அட, ஒங்க வீட்டுல தங்கம் விளைய''னு வாழ்த்திட்டு வந்தேன்!

படம்: என்.விவேக்

சன் டி.வி 'தங்கம்’ சீரியல்ல வர்ற 'இளவஞ்சி’ காவேரிக்கு, ஏகப்பட்ட பாராட்டுகள் குவியுதாம்! ''சீரியல்ல காமெடியனும் நான்தான், வில்லியும் நான்தான். அதனால, குழந்தைங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் என் கேரக்டர் ரொம்ப பிடிச்சுப் போச்சு ரீட்டா. இயல்புல நான் ரொம்ப சாஃப்ட் ஸ்போக்கன் பொண்ணு. ஆனா, சீரியல் கேரக்டர் எல்லாம் அதுக்கு ஆப்போஸிட்டாவே அமையுது! ராஜ் டி.வி-யில வர்ற 'கொடிமுல்லை’ சீரியல்லயும் ஒரு அரகன்ட் கேரக்டர் பண்றேன். கலைஞர் டி.வி-யில 'விளக்கு வச்ச நேரத்துல’ சீரியல்லயும் திமிர் பிடிச்ச கேரக்டர்தான். சீரியல் தவிர, 'சுழல்’ங்கற படத்துலயும் ஒரு சிஸ்டர் ரோல் பண்ணிட்டு இருக்கேன். ஆனா, என் சினிமா கேரியரைவிட, 'இளவஞ்சி’ கேரக்டர்தான் எனக்கு புகழ் வாங்கிக் கொடுத்திருக்கு!''னு சந்தோஷப்பட்டாங்க காவேரி!

தென்றல்’ சீரியல்ல 'புஜிமா’வா வர்ற தேவிகிருபாவுக்கு, சீரியல் ரசிகர்கள்கிட்ட நல்ல பேரு! ''ராஜ் டி.வி., ஜெயா டி.வி-னு நிறைய நிகழ்ச்சிகள் காம்ப்பயரிங் பண்ணி இருக்கேன் ரீட்டா. இடையில, 'பயமறியான்’ படத்துல கமிட் ஆயிட, காம்பயர் கேரியர்ல பிரேக் விழுந்துடுச்சு. மறுபடியும் பாலிமர் சேனல்ல 'சபாஷ் சரியான பாட்டு’ புரோகிராம்ல ரீ-என்ட்ரி கொடுத்தேன். 'தென்றல்’ சீரியல் வாய்ப்பு வந்தது. மெகா சீரியல்ல நடிக்கறோமேனு ஆரம்பத்துல பதற்றமா இருந்துச்சு. இப்போ பழகிடுச்சு. ஒரு ரவுடி கும்பலுக்கு அழகான தங்கச்சியா வர்ற இன்ட்ரஸ்டிங் கேரக்டர் இது''னு சொன்ன தேவிகிருபா, அதுக்கு நேரெதிரா சொன்ன ஒரு விஷயம் -

''சின்ன வயசுல இருந்தே போலீஸ் ஆகணும்ங்கறதுதான் என் ஆசை ரீட்டா. அது நடக்கல. ஏதாச்சும் ஒரு சீரியல்லயாவது போலீஸ் கேரக்டர் பண்ணிடணும்ங்கிற வெறியோட இருக்கேன்.''