Published:Updated:

தேவனின் பூமியிலே...!

தேவனின் பூமியிலே...!

தேவனின் பூமியிலே...!

தேவனின் பூமியிலே...!

Published:Updated:
##~##

'ஏசு வாழ்ந்த இடத்தை நாம் தரிசிக்கப் போகிறோம்... ஏசு நடந்த இடத்தில் நாமும் நடக்கப் போகிறோம்!’

-சென்னையிலிருந்து, இஸ்ரேலுக்கு எங்கள் புனிதப் பயணம் தொடங்கியதுபோது, எனக்கும் என் கணவர் பிராங்லினுக்கும் மனசு முழுக்க இந்த பூரிப்பு மந்திரம்தான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இஸ்ரேல் நாட்டின் எல்லைப் புறத்திலிருக்கிறது எகிப்து. பிரமிடுகளும், பள்ளிவாசல்களும், பழமையான கட்டடங்களும், நைல் நதியும் அலங்கரிக்கும் இன்றைய எகிப்தில்தான் இருக்கிறது... அன்னை மரியாள், ஏசுவோடு வாழ்ந்த வீடு! அது, 'நோவா பெட்டகம்' போன்று வடிவமைக்கப்பட்டு, இன்று பெரிய கோயில் போல பராமரிக்கப்படுகிறது. இங்கே வருபவர்களுக்கு பாவமன்னிப்புக் கிடைப்பதாகச் சொல்கிறார்கள்.

வரலாற்றுச் சிறப்புமிக்க சீனாய் மலையின் உச்சியில், மோயீசனுக்கு, கடவுள் கொடுத்த பத்து கட்டளைகள் உள்ள பலகையைக் கண்டோம். எகிப்து நாட்டின் பாரவோன் மன்னன், தன் நாட்டு மக்களைக் கொன்றுக் குவித்தான். அந்த ரத்தம் கலந்த கடல், செங்கடல் (Jaffa Gate) . இக்கடலில் குளித்தால் சரும நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை.

இதையெல்லாம் முடித்த பிறகே... இஸ்ரேல் பயணம். ஏசு அவதரித்த நாடுதான் இஸ்ரேல். புனிதமான ஜெருசலேம் நகர், ஒலிவ மலையில் ஏசு உயிர்ப்பு அடைந்த இடம், ஏசு ரத்த வியர்வை சிந்திய கெத்சமனி தோட்டம் ஆகிய இடங்களையெல்லாம் பார்த்தபோது, எங்களையும் அறியாமல் உடல் சிலிர்த்தது.

தேவனின் பூமியிலே...!

ஜெருசலேம் நகரிலிருந்து இருந்து, ஜஃபா கேட் (யிணீயீயீணீ நிணீtமீ) வழியாக, ஏசு பிறந்த இடமான பெத்லேகம் போய்விடலாம். பெத்லேகமில் மலை உச்சியில் திருக்குடும்ப ஆலயம் கட்டப்பட்டுள்ளது. மாற்கு, மத்தேயு, லூக்கா, அருளப்பர் ஆகிய நான்கு நற்செய்தியாளர்களின் சின்னங்கள் இங்கு உள்ளன. கிறிஸ்து பிறந்த மாட்டுக்கொட் டில், இன்று தேவாலயமாக உள்ளது. திறந்தவெளி ஜெபக் கூடங்கள், நீண்ட சுவர்களால் இங்கு உண்டாக்கப்பட்டு இருக்கின்றன. தினசரி மக்கள் இங்கு கூடி, 'மெசியா சீக்கிரம் பிறக்க வேண்டும்' என்று இந்த நீண்ட சுவரில் (Wailing Wall), முட்டி அழுகிற காட்சியைப் பார்த்தபோது கண்கள் பனித்தன.

யூத மக்கள், இன்றைக்கும் தங்கள் ஆண் பிள்ளைகளுக்கு 13 வயது பூர்த்தி ஆனதும், மேளதாளத்துடனும்... உற்றார், உறவினர்களுடனும் இந்தச்  சுவருக்கு வந்து நடனம் ஆடி, பூஜை செய்து, விருந்து படைக்கிறார்கள்.

கல்வாரி மலை, இன்று வியாபார ஸ்தலமாக மாறிவிட்டது. ஏசுவின் பாடுகள் 14. இதில் அவர் கல்வாரி மலையில், சிலுவை சுமந்து சென்றது முதல் ஸ்தலம். இதை நாம் பார்க்க இயலாது. பூட்டி வைத்து இருக்கிறார்கள். பெரிய வெள்ளி அன்று அனுமதிப்பார்களாம்.

ஏசுவும், அப்போஸ்தலர்களும் இரவு உணவு அருந்திய இடம், ஏசு இறந்ததும், மரியாளும், அப்போஸ்தலர்களும் சேர்ந்து தங்கி இருந்த இடம், ஏசு அப்போஸ்தலர்களுக்கு பாதம் கழுவிய இடம் ஆகிய கட்டடங்கள் 'கோத்திக்’ கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளன. சென்னை, மயிலாப்பூரில் இருக்கும் சாந்தோம் தேவாலயமும் இதே பாணியில் கட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 'பார்த்தர் நோஸ்டர்' என்ற பெயரில் இங்கிருக்கும் கோயிலில், 'பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே..’ என்ற ஜெபம் எல்லா மொழிகளிலும், முக்கியமாக தமிழிலும் உள்ளது. கெத்சமனி தோட்டத்தில், ஏசுவின் ரத்தத் துளிகள், வியர்வையாக விழுந்த இடங்களைப் பார்த்தபோது... கனத்த மனதும் கலங்கிய கண்களுமாய் நின்றோம்.

தேவனின் பூமியிலே...!

உலகின் மிக விலையுயர்ந்த இடம் ஜெருசலேம். இங்குள்ள யூத பல்கலைக்கழகம் உலகப் புகழ் வாய்ந்தது. இதன் பக்கத்தில் உள்ள லசரியா கிராமப் பகுதியில், யூதர்கள் - முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள்.

எரிகோ, பாலஸ்தீன ஆளுகையில் உள்ள நகரம். இங்கும் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இணைந்து வாழ்கிறார்கள். இங்குள்ள சாக்கடலில் நாம் குளிக்கும்போது கடல் நீரில் மிதக்கிறோம். முன்பக்கம் இஸ்ரேல் ராணுவம், பின்பக்கம் பாலஸ்தீன ராணுவம் என காவல் காக்கிறார்கள். சாக்கடல் இஸ்ரேல் வசம் உள்ளது.

இப்படி, ஏசுவின் வாழ்க்கையில் கலந்து கிடக்கும் இன்னும் பல இடங்களையும் தரிசித்த நாங்கள், நிறைவாக பார்த்தது... அருளப்பர், ஏசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்த யோர்தான் நதி. அந்த நதியில் நாங்களும் மூழ்கிக் குளித்து, பெரும்பேறு பெற்றோம்.

இதைவிடப் பேறு என்ன?!

 நீங்களும் நிருபர்தான்!

அசத்தலான, அற்புதமான, விஷயங்கள், சாதனை புரியும் பெண்கள்... இன்னும் பலதரப்பட்ட செய்திகள் உங்கள் அக்கம்பக்கத்தில் கொட்டித்தானே கிடக்கின்றன! அவற்றில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து, புகைப்படங்களுடன், கட்டுரையாக எழுதி அனுப்புங்கள்! பிரசுரமாகும் கட்டுரைகளுக்கு பரிசு உண்டு!

அனுப்ப வேண்டிய முகவரி...

'நீங்களும் நிருபர்தான்’,

தேவனின் பூமியிலே...!அவள் விகடன்,
757 அண்ணா சாலை,
சென்னை 600 002.
இ-மெயில்: aval@vikatan.com

பின்குறிப்பு : கட்டுரைகள் நூறு சதவிகிதம் உண்மை யானவையாக இருப்பது முக்கியம். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism