Published:Updated:

குட்டீஸ் குறும்பு !

ஒவ்வொன்றுக்கும் பரிசு: 150 ஓவியங்கள்: ஹரன்

குட்டீஸ் குறும்பு !

ஒவ்வொன்றுக்கும் பரிசு: 150 ஓவியங்கள்: ஹரன்

Published:Updated:

'கடவுள், தோசை தருவாரே!’

குட்டீஸ் குறும்பு !
 ##~##

என் மகள் சுதர்சனா, சாப்பிட மிகவும் அடம் பிடிப்பாள். கீழேயெல்லாம் தாறுமாறாக சிந்த வைப்பாள் சாதத்தை. அப்போது யு.கே.ஜி படித்துக் கொண்டிருந்த அந்த வாண்டிடம், 'இப்படி சிந்தினா அப்புறம் கடவுள் நமக்கு சாப்பாடே தர மாட்டார்...’ என்றேன். உடனே அவள் சட்டென, ''சாப்பாடு தரலைனா கடவுள்கிட்ட இட்லி, தோசை வாங்கிக்கலாம்மா!'' என்று பதிலளித்து, சுலபமாக தீர்வு சொல்லிவிட்ட பெருமிதத்துடன் என்னைப் பார்க்க, வாரிக் கட்டிக்கொண்டேன்!

- என்.இ.வாசவி, காசிபாளையம்

'மாற்றான்' வாழைக்காய்!

குட்டீஸ் குறும்பு !

என் மகனை காய்கறி வாங்கிவரச் சொல்லியிருந்தேன். அவன் வாங்கி வந்த காய்களை ஒரு தட்டில் கொட்டிய எங்கள் வீட்டு வாண்டு உற்சாகமாகி, ''பாட்டி, இங்க வந்து பாருங்க 'மாற்றானை’...'’ என்று கத்த, நாங்கள் ஓடிச் சென்று பார்த்தால், இரண்டு வாழைக் காய்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டியிருந்தன. அந்த சுட்டியின் 'பிரசென்ஸ் ஆஃப் மைண்ட்’டை ரசித்துச் சிரித்தோம்!

- சரஸ்வதி ராசேந்திரன், மன்னார்குடி

பை... ரவி, பிலஹரி?

குட்டீஸ் குறும்பு !

என் பேத்திகள் ரேஷ்மாவும், ரீதிகாவும் பாட்டு கற்றுக்கொள்கிறார்கள். அன்று அவர்கள் தங்கள் டீச்சரிடம் பாட்டு கிளாஸில் ஸ்ருதிப் பெட்டியுடன் அமர்ந்திருந்தபோது, அவர்களுடைய அப்பா ரவி, வெளியே கிளம்பினான். 'பை... ரவி...’ என்று நான் சொன்னேன். உடனே என் சின்னப் பேத்தி, 'பைரவி இல்லை ஜீம்மா (அவள் என்னை அப்படித்தான் அழைப்பாள்)... இது பிலஹரி!’ என்று ராகத்தை இணைத்துப் பேச... அனைவரும் சிரித்துவிட்டோம்!

- ஆர்.சாவித்ரி, சென்னை-18