Published:Updated:

சதுரங்க விளையாட்டில் சாதிக்க என்ன வழி ?

ஆல் இன் ஆல் உதவிப் பகுதி

சதுரங்க விளையாட்டில் சாதிக்க என்ன வழி ?

ஆல் இன் ஆல் உதவிப் பகுதி

Published:Updated:
##~##

''என் எட்டு வயது மகன், செஸ் விளையாட்டில் மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறான். ஆனால், அதற்கு ஈடு தரும் வகையில் எங்கள் பகுதியில் பயிற்சியாளரோ, வேறு உதவிகளோ இல்லை. அவன் திறமையை மெருகூட்ட உதவும் புத்தகங்கள், ஆன்லைன் உதவி, போட்டி பங்கேற்பு விவரங்கள் போன்றவற்றைத் தெரிவித்தால், மிகவும் உதவியாக இருக்கும்.''

- விஜயா குமரன், தம்மம்பட்டி ராஜா ரவிசேகர், சர்வதேச சதுரங்க பயிற்சியாளர், பெங்களூரு:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இணையத் தேடலில் சதுரங்கப் பயிற்சிக்கான ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. என்றபோதிலும், ஆரம்பகட்டத்தில் ஒரு தகுதியான பயிற்சியாளர் துணையுடன் சதுரங்க வியூகங்களை கற்றுக் கொள்வது உங்கள் மகனின் பிரகாசமான எதிர்காலத்துக்கு அடித்தளம் இடும். தமிழ்நாடு முழுக்கவே மாவட்டம்தோறும் 'செஸ் அசோஸியேஷன்' வெற்றிகரமாக செயல்படுகிறது. http://www.tamilchess.com/ என்ற தளத்தில் ஏரியா வாரியாக செஸ் சங்க பொறுப்பாளர்களைத் தொடர்புகொள்வதற்கான தகவல்கள் இருக்கின்றன. இவர்கள் மூலமாக உங்கள் அருகாமையில் இருக்கும் தகுதியான பயிற்சியாளரைக் கண்டெடுக்கலாம். வார இறுதி நாட்களிலோ அல்லது மாதத்தில் குறிப்பிட்ட தினங்களிலோ பயிற்சியாளரிடம் நேரடி பயிற்சி பெறுவது நல்லது. மேலும் பயிற்சிக்கான புத்தகங்களையோ அல்லது அவற்றின் ஜெராக்ஸ் காப்பிகளையோ இந்த மாவட்ட சதுரங்க சங்கத்தினர் மூலமாகவே பெற்றுக் கொள்ளலாம்.

சதுரங்க விளையாட்டில் சாதிக்க என்ன வழி ?

தேசிய அளவிலான சதுரங்க போட்டிகள் குறித்த செய்திகள் மற்றும் தொடர்புக்கு http://www.indianchessfed.com/ என்ற முகவரியை அணுகலாம். உலக செஸ் ஃபெடரேஷனை http://www.fide.com/ என்ற தளத்தில் அணுகலாம். சர்வதேச செஸ் உலக செய்திகளுக்கும், சாஃப்ட்வேர் தரவிறக்கத்துக்கும் http://www.chessbase.com/என்ற தளம் உதவும். http://www.rajaravisekhar.com/htmlpages/coaches.htm என்ற என்னுடைய தளத்திலும் தமிழ்நாடு உட்பட நாடு முழுக்க செயல்படும் சதுரங்க பயிற்சியாளர்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண்களை ஓரளவுக்குத் தொகுத்துள்ளேன். மேலும் சதுரங்கப் பயிற்சிக்கான புத்தகங்கள், சாஃப்ட்வேர் என என்னுடைய பரிந்துரை பட்டியலையும் அங்கே பெறலாம்.

சதுரங்கப் பயிற்சி என்பது போட்டியில் கலந்துகொள்ள மட்டுமல்ல, குழந்தைகளின் சிந்தனை மற்றும் ஞாபகத்திறனை கூர்மையாக்கும் விளையாட்டு. இதில் பெறும் பயிற்சி, உங்கள் குழந்தையின் படிப்பிலும் வாழ்க்கையின் இதர திறன்களிலும் நிச்சயம் எதிரொலிக்கும். இதைக் கருத்தில்கொண்டுதான் இந்தக் கல்வியாண்டு முதல் தமிழகப் பள்ளிகளில் சதுரங்கப் பயிற்சியை அமலுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.''

''சுயஉதவிக் குழுவுக்கு புத்துயிர் தருவது எப்படி?''

''எங்கள் குடியிருப்பு பகுதியின் இல்லத்தரசிகளாக சேர்ந்து ஒரு சுய உதவிக் குழுவை ஆரம்பித்தோம். உறுப்பினர்கள் மத்தியில் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் குழு செயல்பாடு முடங்கிக் கிடக்கிறது. அதன் தலைவியாகிய எனக்கு பலவகையிலும் சிக்கல். இவற்றிலிருந்து விடுபட்டு, சுயஉதவிக் குழுவுக்கு புத்துயிர் தர நான் என்ன செய்யவேண்டும்?''

- செ.பாக்கியம்மாள், சேலம்

சதுரங்க விளையாட்டில் சாதிக்க என்ன வழி ?

கே.கிருஷ்ணவேணி, சுயஉதவிக் குழு பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர், சிதம்பரம்:

''கிராமப்புற பெண்களால் துவக்கப்படும் சுய உதவிக் குழுக்களைவிட, நகர்ப்புற பெண்களால் துவக்கப்படும் சுய உதவிக் குழுக்கள் உங்கள் குழுவைப் போல அதிகம் தள்ளாட்டம் காண்கின்றன. காரணம், ஒவ்வொருவருக்கும் தத்தமது கணவர் மூலமாக நிரந்தர வருமான வாய்ப்பு இருப்பதால் ஏற்படும் அசிரத்தை, குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைக்க மறுப்பது போன்றவைதான். ஆனால், கிராமப்புறத்தை விட... கடனுதவி, பயிற்சி, மார்க்கெட்டிங் என ஏராளமான அனுகூலங்கள் நகர்ப்புற இல்லத்தரசிகள் நடத்தும் சுயஉதவிக் குழுக்களுக்கு இருக்கின்றன என்கிற நிதர்சனத்தை இவர்கள் மறந்துவிடுகிறார்கள். இது உட்பட, பல சாதக அம்சங்களை உங்கள் உறுப்பினர்கள் புரிந்துகொண்டால், குழு மீட்சியடையும்.

சதுரங்க விளையாட்டில் சாதிக்க என்ன வழி ?

முதலில், உங்கள் குழு உறுப்பினர்களை அவர்களுக்கு வசதியான இடத்தில்; நேரத்தில் கூட்டி விவாதியுங்கள். உங்கள் ஒருங்கிணைப்பின் துவக்கப் புள்ளியை நினைவுகூர்ந்து, அவர்களுக்கு உத்வேகம் கொடுங்கள். சீனியர் உறுப்பினர்களின் உதவியோடு இந்தக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி, குறைகளை அறிய முயற்சிக்கலாம். குறைகளை செவிமெடுப்பதோடு... களைவதற்கான நடவடிக்கைளை தீர்மானமாக இயற்றி, உரிய கெடுவையும் பகிரங்கமாக அறிவிக்கலாம். உங்களை மேற்பார்வையிடும் தொண்டு நிறுவனம் மற்றும் மகளிர் திட்டத்தின் திட்ட அலுவலர் போன்றவர்களை அழைத்து அவர்கள் முன்னிலையில் இம்மாதிரியான கூட்டங்களை நடத்துவது, நடைமுறை பலனைத் தரும். குழுத்தலைவியாக நீங்கள் கவனிக்க மறந்த/மறுத்த குறைபாடுகளை இவர்கள் சுட்டுவார்கள். இவர்கள் மூலமாக குழுவினருக்கு உத்வேகமும், நம்பிக்கையும் அளிக்கும் மேலதிக ஆலோசனையை பெறலாம். வெற்றி பெற்ற முன்மாதிரி குழுவைச் சார்ந்தவர்களையும் அழைத்து வந்து, உங்கள் குழுவினருக்கு உத்வேகம் அளிக்கலாம். பெரும்பாலும் நகர்ப்புற பெண்களுக்கு அவரவர் குடும்பச் சூழலே பெரும் தடையாக இருக்கும். தேவையெனில் குடும்பத்தினரையும் சந்தித்து பேசலாம்.

உங்கள் தலைமைக்கு எதிரான மனோபாவமும்கூட, குழுவினரின் ஒத்துழையாமைக்கு காரணமாக இருக்கக்கூடும். திறந்த மனதோடு இந்த எல்லா அம்சங்களையும் அணுகி விடை காணுங்கள். காலக்கிரமத்தில் குழுப்பொறுப்பாளர்கள் குழு கூட்டத்தை கூட்டி வரவு - செலவு வங்கி சம்பந்தப்பட்ட தரவுகள் என அனைத்தையும் வெளிப்படையாக சமர்ப்பித்து, அனைவரின் சம்மதத்தைப் பெறவேண்டும். இந்த நடவடிக்கைகளை தீர்மானமாக பதிந்து விடுவதும் நல்லது. குழு உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் கடனோ, சேமிப்போ, செயல்பாடோ... ஏதோ ஒரு விதத்தில் பங்களிப்பு அமையும்படி குழு நிர்வாகத்தை திட்டமிடுங்கள். பொறுப்புணர்வு வர இந்த உத்தி உதவும்.

பொதுவாக, ஒரு சில வெற்றிகளை ருசிக்கும் வரை இதுபோன்ற ஊடாடல்கள் சாதாரணமே. இதைப் பெரிதுபடுத்தாமல் அனைவரையும் தட்டிக் கொடுத்து அரவணைத்து செல்ல வேண்டியது தலைவியாக உங்களது பொறுப்பு. உரிய இலக்கை அடைந்ததும், குழுவினர் உங்களை கொண்டாடும்போது கடந்து வந்த கசப்புகள் மறைந்துவிடும்!''

சதுரங்க விளையாட்டில் சாதிக்க என்ன வழி ?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism