Published:Updated:

'போலீஸ்' சித்ரா... சொல்லி அடிச்ச கில்லி !

சா.வடிவரசு, படங்கள்: க.கோ.ஆனந்த்

'போலீஸ்' சித்ரா... சொல்லி அடிச்ச கில்லி !

சா.வடிவரசு, படங்கள்: க.கோ.ஆனந்த்

Published:Updated:
##~##

''தப்பு செய்யற ஆண்களைத் தண்டிக்கணும். இதுதான் போலீஸ் வேலையில சேர என்னைத் தூண்டின விஷயம்!''

- கம்பீரக் குரலில் பேச்சைத் தொடங்கினார் சித்ரா. சென்னை, அம்பத்தூரில் தமிழ்நாடு ஸ்பெஷல் போலீஸாக பணிபுரிபவர். ரன்னிங் மற்றும் லாங் ஜம்பில் தேசிய சாம்பியன். மூன்று வயதுக் குழந்தையின் அம்மா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''என் சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி கிராமம். எங்க ஊருல எப்பவும் யாராவது குடிச்சுட்டு சண்டை போட்டுட்டே இருப்பாங்க. அவங்களை எல்லாம் தட்டிக் கேட்கணும்னு கோபம் கோபமா வரும். அதுக்காகவே போலீஸ் வேலையில சேரணும்னு ஆசைப்பட்டேன். படிப்பு ஓரளவுதான். ஆனா, விளையாட்டுல அதிக ஆர்வம். கிளாஸ்ல இருந்ததைவிட, கிரவுண்டுலதான் அதிகமா இருந்திருக்கேன். ஸ்கூல் லெவல்ல நடக்குற விளையாட்டுப் போட்டிகள்ல நிறைய பரிசுகள் வாங்கினேன்.  

திறமையைப் பாராட்டின அப்பா, நிறைய உற்சாகப்படுத்தினார். ரன்னிங், லாங் ஜம்ப் பிராக்டீஸ்காக  தினமும் நான் 3   கிலோ மீட்டர் தூரம் போயிட்டு வர்றதைப் பார்த்துட்டு, மூணு லோடு மணல் வாங்கிட்டு வந்து எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கற காலி  இடத்துல கொட்டினார். போட்டியில ஜெயிக்கறப்ப எல்லாம் சந்தோஷமா தட்டிக் கொடுத்தார். ப்ளஸ் டூ முடிச்சதுக்கு அப்புறம், ஆசைப்பட்டபடியே ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல போலீஸ் வேலை கிடைச்சுது. அப்பாவைத் தவிர, வீட்டுல யாருக்கும் போலீஸ் வேலையில விருப்பம் இல்ல. எல்லாரையும் சமாளிச்சு சந்தோஷமா வேலைக்கு அனுப்பினார் அப்பா.

'போலீஸ்' சித்ரா...  சொல்லி அடிச்ச கில்லி !

டிரெயினிங் பீரியட்ல காட்டின ஆர்வத்தைப் பார்த்த சீனியர்ஸ், 'நிறைய விளையாடு, தொடர்ந்து விளையாடு’னு ஊக்கப்படுத்திட்டே இருந்தாங்க. இன்னொரு பக்கம் வேலையிலயும் சின்ஸியரா இருந் தேன். கல்யாண ஏற்பாடுகள் நடந்தப்போ, 'விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி விழுந்துடுமோ'னு தயங்கி«னன். ஆனா, கணவரும் எங்கப்பா மாதிரியே என்னு டைய விளையாட்டு வெற்றிகள்ல மகிழ்ந்து, என்னைத் தாங்கிப் பிடிக்கறவரா அமைஞ்சது, என் ஆசீர்வாதம்!

எத்தனையோ போட்டிகளில் விளையாடி இருந்தாலும், சோதனை கடந்து சாதனை செஞ்ச போட்டிதான்... மனசுல எப்பவும் மறக்க முடியாதது. அப்படி ஒரு போட்டிதான், திருச்சியில நடந்த மாநில அளவிலான போட்டி. பிராக்டீஸ் செய்றப்போ வலது கால் முட்டியில அடிபடவே, ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணினாங்க. 'இனிமே நீங்க விளையாடவே கூடாது!’னு டாக்டர் சொல்லிட்டார். நிறைய அழுதேன். அப்பவும், 'உன்னால முடியும். நாளையில இருந்து நீ பிராக்டீஸ் எடு. ஜெயிப்பே!’னு அப்பாதான் தேறுதல் சொன்னார். எனக்கே அது கொஞ்சம் அதிர்ச்சியா இருந்தாலும், ஆறுதலாவும் இருந்தது. அடுத்த நாளே பிராக்டீஸுக்குப் போனேன். அந்தத் தொடர்ல 'ஓவர் ஆல் கப்’ வாங்கினேன்.

இந்த வருஷம் மைசூர்ல நடந்த தேசிய அளவிலான ஓட்டப் பந்தயத்துல 10 கி.மீ தொலைவை வெறும் 39.40 நிமிடங்கள்ல ஓடி ரெக்கார்ட் பிரேக் பண்ணினது... ரொம்ப பெருமையான தருணம். வர்ற நவம்பர் மாசம் சீனாவுல நடக்க இருக்கிற சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டியில இந்தியா சார்பா கலந்துக்கப் போறேன். இதுக்காக இந்தியாவுல இருந்து போற 22 பேர்ல நானும் ஒருத்தி. எல்லாரும் நிச்சயம் நம்ம நாட்டுக்கு பெருமை சேர்ப்போம்!'' என்று ஸ்போர்ட்ஸ் வாழ்க்கை பேசியவர், குடும்பம், குழந்தை பற்றிப் பேசும்போது கண்கள் விரிகிறார்.

'போலீஸ்' சித்ரா...  சொல்லி அடிச்ச கில்லி !

''குழந்தை பிறந்தப்போ, 'உன் உடம்பு அவ்வளவுதான். இனி விளையாட்டு, போட்டினு போக முடியாது’ னு பலரும் பயமுறுத்தினப்போ, 'பிரசவம் என்கிற பெரிய போராட்டத்தை தாண்டினதுல, முன்னைவிட உன் உடம்புல வலுவேறி இருக்கும். தேங்கிடாம தொடர்ந்து விளையாடு!’னு என்னை உற்சாகப்படுத்தினது கணவர் கிருஷ்ணன்தான். அவர்கிட்ட குழந்தையைக் கொடுத்துட்டு போட்டிகள்ல கலந்துக்க வெளியூர், வெளிமாநிலங்கள்னு போகும்போது, சிலசமயம் மாதக்கணக்கில்கூட தங்க வேண்டி வரும். 'அவளை ஏன் இன்னும் விளையாட அனுப்பிட்டு இருக்க..?’னு சொந்தங்காரங்க சொல்றதை எல்லாம் காதில் வாங்காம, நான் வெற்றியோட திரும்பி வர்றதுக்காக காத்திருப்பார். ஆனா... இந்த விளை யாட்டு ஆர்வத்தால மூணு வயசுப் பையன் தருணை சரியா பார்த்துக்க முடியலைங்கறதுதான் ஒரு அம்மாவா என் பெரிய கவலை'' என்றவரைத் தொடர்ந்த கிருஷ்ணன்,

''இதுவரைக்கும் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகள்ல 50-க்கும் மேலான தங்கம், 30-க்கும் மேலான வெள்ளி மற்றும் 40-க்கும் மேலான வெண்கலப் பதக்கங்கள் வாங்கியிருக்காங்க சித்ரா. அவங்களோட ரோல்மாடல்... பி.டி உஷா. சர்வதேச அளவில ஒரு தங்கமாவது வாங்கிடணும்கிறதுதான்... அவங்களோட இலக்கு!'' என்றார் ஆதரவாக.

நிறைவேறட்டும். ஒரு தாய் பெறும்போது, அந்த வெற்றியின் மதிப்பு கூடும்தானே?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism