Published:Updated:

வி.ஐ.பி.வாண்டூஸ் !

ஜெயலெஷ்மி சமுத்திரக்கனி சந்திப்பு: ம.மோகன் ,படங்கள்: ஆ.முத்துக்குமார்

வி.ஐ.பி.வாண்டூஸ் !

ஜெயலெஷ்மி சமுத்திரக்கனி சந்திப்பு: ம.மோகன் ,படங்கள்: ஆ.முத்துக்குமார்

Published:Updated:
 ##~##

''இவங்களோட நடிப்பில் சமீபத்துல வந்த 'சாட்டை’ படத்தை தியேட்டர்ல குழந்தைங்களோட பார்த்துட்டு இருந்தோம். படத்துல, இவங்க அடி வாங்குற மாதிரி ஒரு ஸீன் வரும். உடனே இவங்க மடியில உட்கார்ந்திருந்த எங்களோட ரெண்டாவது பொண்ணு தியானா ஷிவானி, அப்பா அடி வாங்குறதைப் பார்த்து கன்னம் நனைய அழ ஆரம்பிச்சுட்டா. அப்பான்னா அவ்ளோ உயிர்... பசங்க ரெண்டு பேருக்குமே!''

- ஜெயலெஷ்மி இதைச் சொன்னபோது, குழந்தைகள் ஹரி விக்னேஷ்வரன், தியானா ஷிவானி இருவரோடும் விளையாடிக் கொண்டிருந்தார், இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி. ஜெயலெஷ்மிக்கு தாய்மாமன்தான் சமுத்திரக்கனி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''குழந்தைகள், குடும்ப பொறுப்புகள்னு என் அத்தனை சௌகரியங்களும் குறையாமல் பார்த்துக் கொள்வது ஜெயலெஷ்மிதான். எங்க வீட்டு வாண்டூஸ் பற்றி அவங்க நிறைய சொல்லுவாங்க!'' என்று சமுத்திரக்கனி வழிவிட, தன் குழந்தைகளின் குட்டி உலகம் பற்றிப் பேசினார் ஜெயலெஷ்மி.

வி.ஐ.பி.வாண்டூஸ் !

''பையன் ஹரி விக்னேஷ்வரன், ஐந்தாம் வகுப்புப் படிக்கிறான்.  படிப்பு, விளையாட்டு, டெக்னாலஜினு   அத்தனையிலும் ஆர்வம் அவனுக்கு. கையில சின்னதா ஒரு ஒயரும், ரெண்டு பேட் டரியும் கிடைச்சுட்டா போதும்... புதுசா ஒரு குட்டி ஹெலிகாப்டரோ, ரேஸ் காரோ செய்து அசத்திடுவான். அதைப் பார்த்து நானும் அவங்களும் ஆசை ஆசையா ஆச்சர்யப்படுவோம். சமீபத்துல அப்படித்தான் அவன் தங்கச்சி விளையாடிட்டு இருந்த ஒரு குட்டி கார் உடைஞ்சுடுச்சு. அதுல உள்ள பேட்டரியை எடுத்து, தெர்மாகோல் அட்டை எல்லாம் வெச்சு செட் பண்ணி, ஒரு ஏரோபிளேன் செஞ்சு, அதை ஓடவும் வெச்சுட்டான். அவங்க அப்பா ஷூட்டிங் முடிச்சு ராத்திரி வீட்டுக்கு வந்ததும் ஆர்வமா காட்டி, 'டாடி, இதை உயரத்துல பறக்க வைக்கணும். அடுத்த முறை அதையும் ட்ரை பண் றேன்..!’னு சொன்னப்போ, பையனோட புத்திசாலித் தனத்தை நினைச்சு அவங்கப்பாவுக்கு பெருமை தாங்கல.

இவங்களோட டைரக்ஷன் மற்றும் நடிப்புக்கு முதல் விமர்சன நீதிபதியே ஹரிதான். அவனோட மார்க்கை அவங்களும் முக்கியத்துவம் கொடுத்து கேட்பாங்க. குழந்தைங்ககிட்ட இந்தப் படத்துக்கு என்ன ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்பதை ஹரிகிட்ட இருந்து துல்லியமா தெரிஞ்சுக்கலாம். தவிர, 'சூப்பர்’னு பொதுவான ஃபீட்பேக் சொல்றதைவிட 'இது நல்லா இல்லை, இதை இப்படி செஞ்சுருக்கலாம் டாடி...’னு அவன் சொல்ற கரெக்ஷன்களை அதிகமா ரசிப்பாங்க.

வி.ஐ.பி.வாண்டூஸ் !

பொண்ணு, தியானா ஷிவானி எல்.கே.ஜி. படிக்கிறா. அவளை அவங்கப்பா செல்லமா 'தங்கம்’னுதான் கூப்பிடுவாங்க, கூப்பிடணும்! ஷூட்டிங் நேரங்களில் வெளியூர்ல இருக்கும்போதெல்லாம் 'அப்பாகிட்ட பேசணும்...’னு ஒரே அடம் பண்ணுவா. போனில் பேசின பிறகுதான் தூங்குவா. கால் பண்ணிக் கொடுத்தா, 'அப்பா, தங்கம் ஸ்கூலுக்கு போயிட்டு வந்து, ஹோம்வொர்க் எல்லாம் முடிச்சுட்டேன். தங்கம் சாப்பிட்டேன். ஐ லவ் யூ டாடி!’னு ஒரே பாச டெலிவரியா இருக்கும்.

தியானாவை சமீபத்துல தோழி ஒருத்தவங்க வீட்டு கொலுவுக்கு அழைச்சுட்டுப் போயிருந்தேன். அங்க இருந்தவங்க 'சமுத்திரக்கனி சாரோட பொண்ணா..?!’னு அள்ளிக் கொஞ்சினாங்க. சிலர், 'எங்க... பாட்டு ஏதாவது பாடேன்!’னு கேட்க, 'அவ இப்பதாங்க எல்.கே.ஜி படிக்கிறா. பாட்டு எல்லாம் அடுத்தடுத்த வருஷம்தான் அவளுக்கு கத்துக் கொடுக்கணும்...’னு நான் சொல்லி முடிக்கிறதுக்குள்ள, 'இல்லையே... எனக்குப் பாட்டு தெரியும். எங்க மிஸ் சொல்லிக் கொடுத்திருக்காங்க. ஸ்கூல்ல என் ஃப்ரெண்ட்ஸுக்கு எல்லாம் நான்தான் அதை சொல்லிக் கொடுப்பேன்...’னு சொல்லிட்டு அவ ஸ்லோகங்கள் பாட ஆரம்பிக்க, எனக்கு ஒரே ஆச்சர்யம்.

வி.ஐ.பி.வாண்டூஸ் !

அவங்க மிஸ்கிட்ட கேட்டா, 'ஆமாங்க... தியானா ப்ரீ-கே.ஜி படிக்கும்போதே ஸ்லோகம் எல்லாம் அழகா சொல்லுவா, மற்ற ஸ்டூடன்ட்ஸுக்கும் சொல்லிக் கொடுப்பா. சமர்த்துப் பொண்ணு!’னு சொல்லி அவ கன்னத்தை செல்லமா தட்டினாங்க.

வீட்டுக்கு வந்ததும், 'இதெல்லாம் நீ எங்கிட்ட சொன்னதே இல்லையே..?’னு நான் கேட்க, 'நீ எங்கிட்ட கேட்கவே இல்லையே!’னு சிரிக்கிறா அந்த குறும்பி!

பொண்ணு ஸ்கூலுக்கு கார்ல போறா. கொஞ்சம் விவரம் தெரியற வரைக்கும் இப்படியே போகட்டும்னு விட்டிருக்கோம். பையன் ஆரம்பத்துல இருந்து ஸ்கூல் வேன்லதான் போறான். அவன் எல்லாத்தையும், எல்லாரையும் சந்திக்கணும்னுதான் அப்படி செய்தோம். அவனும் இப்போ அதைத்தான் விரும்புறான். குழந்தைகளோட சுதந்திரத்துக்கு நானும், அவங்களும் எந்த விதத்துலயும் தடையா இருக்கிறதே இல்லை.

வி.ஐ.பி.வாண்டூஸ் !

அவங்களுக்கு எவ்ளோ வேலைகள் இருந்தாலும் சனி, ஞாயிறு ரெண்டு நாட்களையும் குழந்தைங்களுக்குதான் ஒதுக்குவாங்க. சமயத்துல அது தவறினாலும், அவங்க இருக்கிற இடத்துக்கு நாங்க போயிடுவோம். கோயில், பீச், ஷாப்பிங்னு நாங்க நாலு பேரும் சேர்ந்து சின்ன சின்ன அவுட்டிங் கிளம்புவோம். இப்போ அவங்க ஸ்க்ரீன்ல முகம் காட்ட ஆரம்பிச்ச பிறகு இதெல்லாம் மிஸ்ஸிங். பையன் அதைப் புரிஞ்சிக்கிட்டான்.

'அப்பா ஏன் வரலை..!’னு ஷிவானிதான் கேட்டுட்டே இருப்பா. இன்னும் கொஞ்ச வயசு கூடுச்சுனா, நிச்சயமா அவளும் புரிஞ்சிப்பா!'' - குழந்தைகளை அணைத்துச் சிரிக்கிறார் ஜெயலெஷ்மி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism