Published:Updated:

கணவன் கட்டாயப்படுத்தினால்...அதில் தவறில்லை !

ஒரு தீர்ப்பும், அலசலும்... சா.வடிவரசு

கணவன் கட்டாயப்படுத்தினால்...அதில் தவறில்லை !

ஒரு தீர்ப்பும், அலசலும்... சா.வடிவரசு

Published:Updated:
##~##

நாட்டை பரபரப்பாக்கிய மற்றுமோர் தீர்ப்பு இது!

டெல்லியைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர், தன் முதல் கணவர் இறந்ததால், முறைப் படி இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ஒரு கட்டத்தில், 'இவன் சொத்துக்காக ஆசைப் பட்டுதான் நம்மை திருமணம் செய்து கொண் டானோ..?’ என்று அவருக்கு சந்தேகம் எழ, கணவரை 'நெருங்கவிடாமல்’ செய்தார். தாம்பத் யத்துக்கு மறுத்தவருடன், வலுக்கட்டாயமாக உறவு கொண்டுள்ளார் கணவர். கோபமடைந்த பெண் டெல்லி மாவட்ட கோர்ட்டில், வழக்கு தொடர்ந்தார். 2007-ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில், தற்போது தீர்ப்பு வெளியாகி யுள்ளது. நீதிபதி ஜே.ஆர்.ஆர்யன், 'சட்டப்படி திருமணம் செய்து கொண்ட கணவர், தன் மனைவியுடன் வலுக்கட்டாயமாக உடலுறவு வைத்தது இந்திய திருமண சட்டம் மற்றும் தண்டனை சட்டங்களின் படி தண்டனைக்குரியது அல்ல!’ என்கிற தீர்ப்பை வழங்க... விஷயம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து இவர்களிடம் கேட்டபோது...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அபிலாஷா, மனநல மருத்துவர்: ''மனைவியாக இருந்தாலும்கூட, அவருடன் வலுக்கட்டாயமாக உறவு கொள்வது தவறுதான். 'விரும்புவதற்கும், மறுப்பதற்கும் என நம் உடல் மீதான உரிமைகூட நமக்கு இல்லையே’ என்று வேதனைப்படும் ஒரு பெண்ணின் மனம், தற்கொலைவரைகூட   யோசிக்கலாம். தன் மனைவிக்கு தன்னிடம் ஏதோ வருத்தம், கோபம், வெறுப்பு என்று கண வனுக்கு தெரியவந்தால், அதை சரிசெய்வதற் கான முயற்சிகள் எடுக்க வேண்டுமே தவிர, 'நீ என்ன வேணும்னாலும் நினைச்சுக்கோ, ஆனா நீ வேணும்’ என்று அவள் மனதைப் புறக்கணித்து, உடலை அடைய நினைப்பது, சுயநல வன்முறை அல்லாமல் வேறென்ன? இது தனிமனித உரிமை யைப் பறிக்கும் குற்றமும்கூட. இதுவும் ஒரு வகையில் பாலியல் பலாத்காரமே! எல்லாவற்றையும் சட்டங்களின் அடிப் படையில் மட்டுமே தீர்மானித்துவிட முடியாது. மனோவியல் ரீதியாகவும் சில விஷயங்களைப் பார்க்கும்போதுதான், அதன் உண்மையான வீரியம் புரியும்.''

கணவன் கட்டாயப்படுத்தினால்...அதில் தவறில்லை !

பூமா, சமூக ஆர்வலர்: ''கணவன் - மனைவிக்கு இடையேயான தாம்பத்யப் பிரச்னையின் முழு ஆழமும் மூன்றாம் நபர்களுக்குத் தெரியாது. இந்த வழக்    கிலும் கூட அந்தப் பெண் தாம்பத்யம் மறுத்ததற்கான காரணமோ, அந்தக் கணவன் கட்டாய உறவு கொண்ட சூழலோ... அதில் இருக்கும் உண்மை களை யாரும் முழுமையாக அறிய மாட்டார்கள். இருந்தாலும், எந்தச் சூழலிலும், மனைவியே ஆனாலும், ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி உறவு கொள்வது தவறுதான். தாம்பத்யம் என்பது சம உரிமை. அன்பால் நிகழ வேண்டியது. இதில் ஒருவரின் விருப்பத் துக்கு மற்றவரை கட்டாயப்படுத்தும் அடிமைத்தனம் கூடாது. அந்தப் பெண் ணும், அவரின் கணவரும் ஒருவருக்கு ஒருவர் ஒத்துவராத பட்சத்தில் விவாக ரத்து மூலம் பிரிந்திருக்கலாம். அந்தரங்க மான விஷயத்தை இப்படி நீதிமன்றம் வரை கொண்டு சென்றிருக்க வேண்டாம்.''

சுதா, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்: ''யாரா வது மூன்றாவது நபரிடம், ஒருவர் வலுக்கட்டாயமாக உடலுறவு கொண் டால், அது தவறு. ஆனால் கணவன் - மனைவி உறவுக்கு அடிப்படையே தாம்பத்யம்தானே? அதை எப்படி தவறு என்று சொல்ல முடியும்? ஒரு கணவன் தன் மனைவியிடம் அதைப் பெற உரிமை இருக்கிறது. எனவே, அவர் வலுக்கட்டாய மாகவே உடலுறவு கொண்டிருந்தாலும் அதை பலாத்காரம் என்று சொல்லிவிட முடியாது. கணவருடன் வாழப் பிடிக்கவில்லை என்றால், விவாகரத்து வாங்கி இருக்க வேண்டும். அதைச் செய்யாமல் தாம்பத்யத்துக்கு மறுத்த தற்கான சரியான காரணமில்லாமல் தன் கணவர் மேல் பாலியல் பலாத்கார வழக்கு போட்டது தவறுதான். இது போன்ற ஆதாரமில் லாத வழக்கைப் போட்ட பெண் மீதுதான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதாரமற்ற இந்த வழக்குக்கு வழங்கிய இந்த தீர்ப்பு சரியானதுதான்.''

கணவன் கட்டாயப்படுத்தினால்...அதில் தவறில்லை !

ஆலிஸ், குடும்பத் தலைவி: ''தாம்பத் யத்தைத் தள்ளிப்போட ஒரு மனைவிக்கு உரிமை இருக்கிறது. ஆனால், மறுக்க உரிமை இல்லை. இந்த வழக்கில் அந்தப் பெண்ணுக்கு தன் கணவன் மீது எழுந்த சந்தேகம், உண்மை என்று நிரூபண மாகவில்லையே? ஆக, ஆதாரம் இல்லாத அவர் சந்தேகத்துக்கு தன் கணவரை தண்டித்துள்ளார். அந்தக் கணவனைப் பொறுத்தவரை குடித்துவிட்டு அடிக் கிறார், வரதட்சணை கேட்கிறார், வேறு பெண்ணுடன் தொடர்பில் இருக்  என்று எந்தப் புகாரும் இல்லை. ஒரு கணவனின் இயல்பான எதிர்பார்ப்பே அவருக்கும் இருந்திருக்கிறது. ஒரு கண வன் தன் மனைவியிடம் உடலுறவு கொள்ளாமல், வேறு யாரிடம் செல்வான்? அதைக் குற்றம் என்று சொன்னால், அவர் வேறு எப்படி இருந் திருக்க வேண்டும் என்று இந்தப் பெண் எதிர்பார்க்கிறார்? வாழ்நாள் முழுக்க, 'நெருங்க விடாமல்’ விரட்டும் தன் மனைவியை தொந்தரவு செய்யாத 'நல்ல’ கணவராக இருக்க முடியுமா என்ன?''

மணிமுத்து, குடும்பத் தலைவர்: தாம்பத் யத்துக்கு தன் உடல்நிலை, மனநிலை சார்ந்து முடிவெடுக்க ஒரு பெண்ணுக்கு உரிமை உண்டு. அதற்கான சுதந்திரத் தையும், சூழலையும் ஏற்படுத்துவதுதான் ஆணுக்கு அழகு. அன்பு இருக்கும் இல்லங் களில் இதெல்லாம் சரியாக இருக்கும். ஆனால், ஆசையும் ஆணாதிக்கமும் மட் டுமே இருக்கும் இல்லங்களில், பெண்கள் இப்படித்தான் துன்புறுத்தப்படுகிறார்கள். அதை சரிசெய்வதாக இல்லாமல், சரி என்பதாக அமைந்துவிட்ட இந்த தீர்ப்பு, வருத்தம்தான் அளிக்கிறது!''