Published:Updated:

கேபிள் கலாட்டா - புதுமுகம்... அறிமுகம்!

ரிமோட் ரீட்டா படங்கள்: ஆ.முத்துக்குமார், ஜெ.வேங்கடராஜ்

கேபிள் கலாட்டா - புதுமுகம்... அறிமுகம்!

ரிமோட் ரீட்டா படங்கள்: ஆ.முத்துக்குமார், ஜெ.வேங்கடராஜ்

Published:Updated:
 ##~##

சேனல் ஏரியாவுக்குள்ள சமீபத்துல என்ட்ரி கொடுத்திருக்கிற புதுமுகங்களுக்கு 'ஹாய்’ சொல்லி, அவங்களுக்கு சின்னத்திரை வாய்ப்புக் கிடைச்ச வரலாற்றுக் கதைகளைக் கேட்டேன்!  

''எனக்கு நியூ இயர், டிசம்பர் 23ம் தேதி ! ''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜெயா டி.வி-யில 450 எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகிட்டிருக்கிற 'தகதிமிதா’ நிகழ்ச்சிக்கு புதிய தொகுப்பாளரா வரப்போறாங்க ஸ்ரீ சித்ரா. ''டி.வி-யில புரமோ பார்த்தேன். வாழ்த்துக்கள்!''னு போன் பண்ணினா,

''தேங்க்ஸ் ரீட்டா! காலேஜ் முடிஞ்சதுக்கு அப்புறம் பேசலாம்... சாயங்காலம் வீட்டுக்கு வாயேன்!''னு அழைச்சாங்க அண்ணா பல்கலைக்கழகத்துல மூன்றாமாண்டு 'இண்டஸ்ட்ரியல் இன்ஜினீயரிங்’ படிச்சுட்டிருக்கற சித்ரா.

கேபிள் கலாட்டா - புதுமுகம்... அறிமுகம்!

''படிப்பு, டான்ஸ், பாட்டு... இது மூணும்தான் என் உலகம். இன்ஜீனியரிங் கோர்ஸ் நல்லா போய்க்கிட்டிருக்கு ரீட்டா. பாட்டு, டான்ஸுனு மத்த திறமைகளையும் வெளியில கொண்டு வர, விஷ§வல் மீடியா என்ட்ரிக்காக காத்துக்கிட்டிருந்தேன். அந்த ஆர்வத்துக்கு நல்ல பரிசு, 'தகதிமிதா’ நிகழ்ச்சியோட ஆங்கர் பொறுப்பு. இந்தியப் பாரம்பரியத்துல நம் நடனங்களுக்கு முக்கியமான இடம் இருக்கு. ஒடிசி, கதகளி, மோகினி ஆட்டம்னு அதை எல்லாம் இந்த நிகழ்ச்சி மூலமா இளம் தலைமுறையினர் எடுத்து ஆடும்போது, சந்தோஷமா இருக்கு. புதுப்பொலிவோட இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக போற டிசம்பர் 23-ம் தேதி முதலே... என்னோட நியூ இயர் கொண்டாட்டம் தொடங்கிடும் ரீட்டா!''

- சந்தோஷப் பொலிவோட சிரிச்சாங்க, சித்ரா!

கேபிள் கலாட்டா - புதுமுகம்... அறிமுகம்!

போட்டோகிராஃபர், நடிகர் ஆன கதை!

ன் டி.வி-யில ஒளிபரப்பாகிற 'அழகி’ தொடர்ல அழகு பையனா வந்து கலக்கிட்டிருக்காரு, கமல்தீப்.

''ரீட்டா, இந்த கமல் பையன் பிறந்தது கேரளாவா இருந்தாலும், சின்ன வயசுல இருந்தே சென்னைவாசிதான். நாலு வருஷத்துக்கு முன்ன லயோலா காலேஜ்ல விஸ்காம் முடிச்சுட்டு, போட்டோகிராஃபி ஆர்வத்துல கேமராவும் கையுமா சுத்திக்கிட்டிருந்த ஆளு நான். என்னோட போட்டோகிராஃபி கலெக்ஷன்களை எல்லாம் சேர்த்து ஒரு பெரிய கண்காட்சியே வைக்கலாம். இப்பக்கூட கொஞ்ச நேரம் கிடைச்சாலும், கேமராவை எடுத்துக்கிட்டு கிராமம், நகரம்னு சுத்த ஆரம்பிச்சுடுவேன். அப்படித் திரிஞ்சிட்டு இருந்தப்போதான் திடீர்னு நடிப்புல ஆர்வம் வந்தது. 'அழகி’ தொடர் ஆடிஷன்ல கலந்துக்கிட்டேன். ஸ்க்ரீன் டெஸ்ட்ல பாஸாகி... சீரியல்ல கமிட் ஆகிட்டேன்! இப்போ இந்த சீரியல்தான் எனக்குனு தனி அடையாளம் கொடுத்திருக்கு. 'அழகி’ டீமுக்கு நியூ இயர் வாழ்த்துக்களை உன் மூலமா சொல்லிக்கறேன்!''னு நெகிழ்ந்தாரு கமல்தீப்!

'அழகி’க்கு ஹேப்பி நியூ இயர்!

''கத்திச் சண்டையும் தெரியும்!''

''நீங்க நிஜமாவே அம்மா - பொண்ணா?!னு விஜி மேடத்தையும், என்னையும் கேட்கற ரசிகர்களோட பட்டியல் நீண்டுகிட்டே போகுது. அறிமுகமான சீரியல்ல நல்ல பேர் எடுத்துட்டோம்னு மனசுக்கு நிம்மதியா இருக்கு!''

- 'அழகி’ தொடர்ல 'சூர்யா’வா வர்ற ராதாவுக்கு, நடிப்பை போல பேச்சும் அழகு.  

''சென்னை பொண்ணுதான் ரீட்டா நான். ஸ்கூல் படிக்கும்போது 'கத்திச் சண்டை’ போட்டியில ஸ்டேட் அவார்டு எல்லாம் வாங்கி இருக்கேன். எப்படி வந்ததுனு தெரியல இந்த நடிப்பு ஆசை. வாய்ப்புத் தேடிப் போக, 'அழகி’ மூலமா இப்போ நானும் நடிகை. அதில் கிடைச்சிருக்கிற அறிமுகம், 'ஜீ’ தமிழ் சேனல்ல 'புகுந்த வீடு’ சீரியல் வாய்ப் பும் வாங்கிக் கொடுத்திருக்கு.

'ஆச்சி’ மனோரமா ஆன்ட்டிதான் என் ரோல்மாடல். பொழுதுபோக்கா நடிச்சுட்டு, ரெண்டு வருஷத்துல காணாம போயிடாம, அவங்கள மாதிரி நடிப்புல நிலைச்சு நிற்கணும்ங்கறதுதான் என் நியூ இயர் சபதம்!''

- சின்ஸியரா சொன்னாங்க ராதா!

சியர் அப்!

''நடிக்க வந்தது ஆக்ஸிடென்ட்..!’'

''சீரியல்ல நடிக்க கறுப்பா, களையா ஒரு பையன் வேணும்டானு, சன் டி.வி 'கார்த்திகை பெண்கள்’ தொடருக்காக என் ஃப்ரெண்ட் 'மொக்க’ மகி பேசிக்கிட்டிருக்கும்போது சொன்னான். 'தம்பி... என்னைப் பார்த்தா உனக்கு அப்படித் தோணலையா?’னு சும்மா விளையாட்டுக்குத்தான் கேட்டேன். அடுத்த நாள் சீரியலோட டைரக்டர் கவிதா பாரதி சார் முன்ன கொண்டுபோய் நிறுத்திட்டான். கையும் ஓடல... காலும்  ஓடல!''

- சமீபத்துல 'கார்த்திகை பெண்கள்’ தொடர்ல அறிமுகமாகி இருக்காரு ராஜ்குமார்.

கேபிள் கலாட்டா - புதுமுகம்... அறிமுகம்!

''டைரக்டரும் என்னை ஓ.கே பண்ணிட்டாரு. அடுத்த நாள்ல இருந்து நடிப்பை பாடமா படிச்சுட்டு இருக்கேன் ரீட்டா. ஹோட்டல் மேனேஜ்மென்ட் கோர்ஸ் முடிச்சுட்டு, கேட்டரிங் துறையில கத்தார், மலேசியானு வேலை பார்த்துட்டு இருந்த பையன், இன்னிக்கு சின்னத்திரைக்குள்ள வந்திருக்கேன். ஸ்டார்ஸ் பலரும், 'நான் நடிக்க வந்ததே ஒரு விபத்துதான்!’னு பேட்டி கொடுக்கறதைப் பார்த்திருக்கேன். அது இப்போ என்னோட விஷயத்துலயும் நடத்துடுச்சே! (1001-வது தடவை ரிப்பீட்டு). சந்தோஷத்தைவிட, 'நியூ இயருக்கு ட்ரீட் பாஸ்..!’னு காத்துட்டு இருக்கற ஃப்ரெண்ட்ஸை நினைச்சாதான் கலக்குது!''னு சிரிச்சார் ராஜ்குமார்!

பார்ட்டிக்கு நீங்களே சமைச்சுடுவீங்களா..?!

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கேபிள் கலாட்டா - புதுமுகம்... அறிமுகம்!

150

பொது அறிவை விரிவுபடுத்தலாமே..!

''சொல்லுங்கண்ணே... சொல்லுங்க என்றபடி வந்து, பலருடைய நெஞ்சங்களையும் கொள்ளை கொண்ட இமான் அண்ணாச்சி, சன் டி.வி-யில் ஞாயிற்றுக்கிழமை வரும் 'குட்டீஸ் சுட்டீஸ்’ நிகழ்ச்சி மூலமாக, பலருடைய வசவு களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார். குழந்தைகளிடம் அவர் கேட்கும் கேள்விகள், சங்கடத்தில் ஆழ்த்துகின்றன. சமயங்களில் நம்மை நெளியவும் வைக்கின்றன. எளிதான... பொதுவான கேள்விகளைக் கேட்டு, குழந்தைகளின் பொது அறிவை விரிவுபடுத்தலாமே? அதைவிடுத்து, மழலைகளை உற்சாகப்படுத்துகிறேன் என்று ஏடாகூட கேள்விகளாக கேட்கிறார்... குழந்தைகளும் வயதுக்கு மீறிய பேச்சுக்களை வெளிப்படுத்துகின்றன. இதெல்லாம் தேவையா அண்ணாச்சி?'' என்று கடுகடுக்கிறார்... பெசன்ட் நகரைச் சேர்ந்த காந்தி சுப்ரா.

கிராஃபிக்ஸ் பயன்படுத்தலாம் !

''ஜீ தமிழ் டி.வி-யின் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியில், நிஜப் பிரச்னைகளே அலசப்படுகின்றன. பெண்கள் பலரும் நேரடியாக பங்கேற்கின்றனர். ஆனால், அதில் அலசப்படும் விஷயங்கள் பலமாதிரியாக இருப்பதால், இந்தப் பெண்கள் நாளைக்கு வீதியில் நடைபோடும்போது... தேவையற்ற சங்கடங்களை அது அவர்களுக்கு ஏற்படுத்தக்கூடும். எனவே, அவர்களின் எதிர்கால நலன் கருதி, அவர்களது முகத்தை கிராஃபிக்ஸ் மூலமாக மறைக்கலாம். இப்படி செய்ய ஆரம்பித்தால், இன்னும் பலரும்கூட உண்மைச் சம்பவங்கள், கசப்பான அனுபவங்களையெல்லாம் தைரியமாக பகிர முன்வருவார்கள்'' என்று ஆலோசனை தருகிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த ரம்யா தேவி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism