Published:Updated:

நான் ஆணா பெண்ணா ?!

எம்.மரிய பெல்சின்

நான் ஆணா பெண்ணா ?!

எம்.மரிய பெல்சின்

Published:Updated:
 ##~##
''என்
உறவுக்காரப் பெண்ணின் நண்பன் அவன். வயது 24 ஆகிறது. மரபணு குறைபாடு காரணமாக, முழுமையான ஆண் போல் இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவரிடம் காண்பித்தும், ஏதும் முன்னேற்றம் இல்லை. திருமணம் செய்ய ஆசை கொண்ட அவன், அது நிறைவேறுமா என்று பெரும் கலக்கம் சுமந்து இருக்கிறான். மரபணு குறைபாட்டோடு இருக்கிற பெண்களும் இருப்பார்கள். அப்படி ஒரு பெண்ணை அவன் திருமணம் செய்ய ஆசைப்படுகிறான். 'இந்த விஷயத்தில் டாக்டர்களிடம் கலந்தாலோசித்தும் குழப்பமே மிஞ்சுகிறது. என்ன செய்வதென்றே புரியவில்லை’ என்று, என் உறவுக்காரப் பெண் என்னிடம் புலம்பினாள். 'அவள் விகடனிடம்' இதை பகிர்ந்தால், நிச்சயம் விடை கிடைக்கும் என்ற நம்பிக்கை யுடன் தொலைபேசுகிறேன்... வழிகாட்டுங்கள்...!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- சென்னை, திருவொற்றியூர் வாசகி ப்ரியா வைத்த கோரிக்கை இது.

உடனே விஷயத்தை பிரபல 'செக்ஸா லஜிஸ்ட்' காமராஜிடம் சொன்னோம். ''அந்த நபரின் மரபணு குறைபாடு எத் தகையது என்பதை முதலில் மருத்துவ பரிசோதனை மூலமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, பரிசோதனை முடித்து, அந்த முடிவுகளுடன் என்னை சந்திக்கச் சொல்லுங்கள்'' என்று சொன்ன டாக்டர், என்னென்ன பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தினார்.

நான் ஆணா பெண்ணா ?!

அதன்படியே அந்த நபர், பரிசோதனைகள் முடித்து, அந்த அறிக்கைகளுடன் ஆஜராக, அதையெல்லாம் ஆராய்ந்து பார்த்த டாக்டர், பிரச்னையைப் பற்றி அவருக்குத் தெளிவான விளக்கம் தந்ததோடு, சில சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் உங்கள் பிரச்னைக்கு ஓரளவு தீர்வு காண முடியும். தற்போது 24 வயது என்பதால், எவ்வளவு சீக்கிரம் அதை ஆரம்பிக்கிறீர்களோ... அவ்வளவுக்கு அவ்வளவு, பலன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது'' என்று சொல்ல,

''சீக்கிரமே சிகிச்சைக்காக திரும்ப வருகிறேன்'' என்று விடைபெற்றார் அந்த இளைஞர்.

இதையடுத்து நம்மை அழைத்த டாக்டர், ''இது மிகவும் சிக்கலான ஒரு பிரச்னை'' என்று சொல்லிவிட்டு, அது குறித்து விரிவாகவே பேசினார். ''திரு நங்கைகள் எனப்படுபவர்கள், ஆணாக பிறந்து, ஆண் போலவே இருந்து, பருவ வயது வரும்போது, மனரீதியாக பெண்ணாக உணர்ந்து, அறுவை சிகிச்சை மூலமாக தங்களை பெண் ணாக மாற்றிக்கொண்டு விடுவார் கள்.  பெண்ணாக பிறந்து, மனரீதியாக ஆணாக உணர்பவர்களும் உண்டு. இது குறைந்த சதவிகிதமே!

நம்மிடம் வந்திருப்பவரின் பிரச்னை கொஞ்சம் மாறுபட்டது. பிறக்கும்போது ஆணுறுப்பி லேயே வித்தியாசம் தெரிந்து விடும். 24 வயது டைய இவருக்கு இருக்கும் இந்தக் குறைபாட்டை, ஹைப்போகொனாடிசம் (பிஹ்ஜீஷீரீஷீஸீணீபீவீsனீ) என்று மருத்துவத்தில் அழைக்கிறோம். பொதுவாக, ஆண்களுக்கு ஆண் ஹார்மோன் குறைவாக இருந்தால் விந்துப்பை, ஆணுறுப்பு சிறிதாக இருக்கும். வயதுக்கேற்ற உயரம் இல்லாமல், உடல் பருமனாக காணப்படுவர். மீசை, தாடி இருக்காது. ஆணுறுப்பைச் சுற்றி முடி குறைவாக அல்லது இல்லாமலும் இருக்கலாம்.

இவருக்கு சிறுவயதிலேயே இத்தகைய குறைபாட்டை கண்டுபிடித்து, அதற்காக சிறிய அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். ஆனால், ஹார்மோன் குறைபாட்டைக் கண்டறிந்து தரப்பட வேண்டிய ஊசி மருந்து களை, குறைவான அளவிலேயே செலுத்தி இருக்கிறார்கள். இதனால் அவருக்கு ஆணுக் குரிய சரியான வளர்ச்சி இல்லாமல், குறை பாட்டுடனேயே வளர்ந்திருக்கிறார். இப்போது இவருக்கு

நான் ஆணா பெண்ணா ?!

மீசை, தாடி இல்லை. விரைப்பை கீழே இறங்கவில்லை.

இதுபோன்ற குறைபாடுகளுடன் 100-ல் 2 ஆண்கள் இருக்கிறார்கள். இந்தக் குறைபாட்டை பிறக்கும்போதே கண்டறிந்து சரிசெய்ய முடியும். ஆண் குழந்தை பிறந்தவுடன் விந்துப்பை, விரையில் இறங்கி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். பொதுவாக, ஆண் குழந்தைக்கு, அது தாயின் வயிற்றில் வளரும் 13-ம் வாரத்திலேயே ஆணுக்குரிய ஹார்மோன் சுரந்து, ஆணுக்குரிய உறுப்புகள் வளர வேண்டும். அத்தகைய சூழலில் தாய் கருத்தடை மாத்திரைகள் அல்லது ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிட்டாலோ, ஹார்மோன் ஊசி போட்டாலோ இதுபோன்ற குறைபாடு களுடன் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. உதாரணமாக, அந்தக் குழந்தைகளுக்கு பெண்ணுக்குரிய சினைமுட்டையும், ஆணுக்கான விந்துப்பையும் இருக்கும். சிலருக்கு ஆணுறுப்பு இருக்கும், அதேநேரத்தில் கர்ப்பப்பை இருக்கும். இதுபோன்று பல்வேறு மாறுதல்களுடன் குழந்தைகள் வளரலாம்.

இவர்களை எந்த பாலினம் என்று தீர்மானிக்க முடியாது. இப்படிப்பட்டவர்களை சிலர் ஆண் என நினைத்து வளர்ப்பார்கள். ஆனால், அவருக்கு பெண்ணுக்குரிய குரோமோசோம்கள் இருக்கும். இவர்கள் எந்தப் பாலினமாக வாழ விரும்புகிறார்கள் என்று கேட்போம். அதேபோல் குரோமோசோம்கள் எப்படி இருக்கின்றன என்று பார்த்து, அதற்குரிய சிகிச்சை அளிக்கப்படும். உதாரணமாக ஆணுக் குரிய குரோமோசோம் இருந்து, அவர் பெண்ணாக வாழ விரும்பினால், மார்பக வளர்ச்சி, பெண் உறுப்பு போன்றவற்றை மறு கட்டமைப்பு செய் வோம். ஆணாக வாழ விரும்பினால், ஆணுக்கான ஹார்மோன் கொடுத்து மீசை - தாடி வளரச்செய்து உறுப்பு வளர்வதற்கான சிகிச்சை அளிப்போம்.

இந்த நபரை பொறுத்தமட்டில், ஆணாக வாழவே விரும்புகிறார். இவருக்கு 'எக்ஸ்ஒய்' (ஙீசீ) என்ற ஆண் குரோமோசோம் உள்ளது. ஆனால், ஹார்மோன் குறைபாடு உள்ளது. இத்தகைய குறைபாட்டுக்கு, போதுமான ஹார்மோன்களை செலுத்தினால் நாளடைவில் மீசை, தாடி வளரும். கூடவே, ஆண் உறுப்பும் வளரும். உடல் பருமன் குறைந்து, இயல்பு நிலைக்கு வருவார். ஆனால், விந்தணுக்கள் உயிரோடு இருக்க வாய்ப்புகள் குறைவு. இருந்தபோதிலும் தாராளமாக தாம்பத்யத் தில் ஈடுபடலாம். செயற்கைமுறை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெறலாம்'' என்று தெளிவாக விளக்கம் கொடுத்தார் டாக்டர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism