Published:Updated:

வாருங்கள்... வழிகாட்டுகிறோம் !

பியூட்டிஷியன் கோர்ஸுக்கு... அரசாங்க உதவிகள் !

வாருங்கள்... வழிகாட்டுகிறோம் !

பியூட்டிஷியன் கோர்ஸுக்கு... அரசாங்க உதவிகள் !

Published:Updated:

 பிஸினஸ் கேள்வி - பதில்

##~##

சுயதொழில் தொடங்க ஆர்வம் கொண்ட பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்கள் கேள்விகளாக கேட்க... அதற்கு தெளிவான பதில்களைப் பெற்றுத் தரும் பகுதி இது. இங்கே உங்கள் கேள்விகளுக்கு பெரியார் தொழில்நுட்ப வணிக காப்பகத்தின் திட்ட இயக்குநர் ராமசாமி தேசாய் பதிலளிக்கிறார்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'பியூட்டிஷியன் பயிற்சி நிறுவனம் நடத்த வழிகாட்டுவீர்களா..?'

''நான் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறேன். என் மகளும் உதவியாக இருக்கிறாள். இப்போது பலரும் எங்களிடம் பியூட்டிஷியன் கோர்ஸ் எடுக்கச் சொல்லிக் கேட்கிறார்கள். இதற்காக எங்கள் நிறுவனத்தை பதிவு செய்வது, மாணவிகளுக்கு அரசுச் சான்றிதழ் பெற்றுத்தருவது  போன்ற விஷயங்களில் வழிகாட்ட முடியுமா?''

- எஸ்.சிவகாமி, திருச்சி

''பியூட்டி பார்லர் மட்டுமல்ல... தையற்கலை, எம்ப்ராய்டரி, கம்ப்யூட்டர் என வெவ்வேறு துறைகளிலும் திறன் பயிற்சி அளித்து அரசு சான்றிதழ் கொடுக்க என்ன செய்ய வேண்டும் என்கிற கேள்வி பல பெண்களுக்கும் உள்ளது. திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் கொடுத்து, சான்றிதழ் வழங்க, மத்திய அரசு உதவியுடன் சில நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவர்களின் சான்றிதழ்களைப் பெற்று, அவர்கள் பெயரில், நீங்கள் பயிற்சி சான்றிதழ்களை வழங்கலாம்.

வாருங்கள்... வழிகாட்டுகிறோம் !

உதாரணமாக, மத்திய அரசு உதவியுடன் 'பாரத் சேவாக் சமாஜ் வெகேஷனல் எஜுகேஷன்’ என்கிற நிறுவனம் நடத்தப்படுகிறது. பல திறன் பயிற்சி வகுப்புகளை இவர்களிடம் பதிவு செய்தால், அவர்களுடைய சான்றிதழ்களை வழங்குவார்கள். ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களிடம் கட்டி, இதற்காகப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

முகவரி: Bharat Sevak Samaj, National Development Agency Promoted by Govt of India, Tambaram West, Chennai-63. .

தொலைபேசி: 044 - 4205 9344, 4205 9345

தேசிய சிறுதொழில் கழகம் (National Small Industries Corporation), சிறுதொழில் புரிபவர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து வருகிறது. மத்திய அரசின் இந்த நிறுவனத்தில், 'என்எஸ்ஐசி - டிஐசி பிபிபி மோட்' (NSIC -TIC PPP Mode) என்கிற திட்டம் உள்ளது. இதன்கீழ் பயிற்சி நிறுவனமாக சேர, குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும். மேலும் தரப்படும் சான்றிதழுக்காக, நீங்கள் வசூலிக்கும் தொகையில் 15% தொகையை அவர்களுக்குக் கட்ட வேண்டும்.

மேலதிக விவரங்கள் பெற: Chief Manager (TIC), NSIC - Okhla Industrial Estate, New Delhi -தொலைபேசி: 011 - 2682 6846, 2682 6848.

பாரத பிரதமரின் 'திறன் வளர்ச்சி ஊக்குவிக்கும் திட்டம்' (Skill Development Institution Scheme - SDIS) மூலமாகவும் பலதரப்பட்ட பயிற்சிகளை அளிக்க முடியும். உங்கள் நிறுவனத்தை மத்திய அரசின் தொழிலாளர் அமைப்பின் கீழ் (DGET - Director General of Employment and Training)இணைத்து ஒரு பயிற்சி நிலையம் (VTP - Vocational Training Provider)என்றுகூட மாறலாம். இதன் மூலம் (NCVT -National Council for Vocational Training)சான்றிதழ் பயிற்சியும் அளிக்கலாம். இந்தப் பயிற்சிகள் அனைத்தையும் இலவசமாக நடத்தலாம். இப்படி இலவச பயிற்சி அளிப்பது குறித்து, முறைப்படி அரசாங் கத்துக்கு தெரியப்படுத்தினால்... அதற்கான உதவித் தொகையை அரசாங்கம் உங்களுக்கு அளிக்கும்.

வாருங்கள்... வழிகாட்டுகிறோம் !

உதாரணமாக... அழகுக் கலையில் மட்டும் ஒன்பது பிரிவுகள் உள்ளன. இதில் சேரும் ஒவ்வொருவருக்கும் ஒரு மணி நேரப் பயிற்சிக்கு உங்களுக்கு 15 ரூபாய் வரை அரசாங்கம் வழங்கும். ஒரு பயிற்சி, சுமார் 120 மணியிலிருந்து 300 மணி வரை இருக்கும். இவை அனைத்தும் 'மாடுலர் எம்ப்ளாய்மென்ட் ஸ்கீம்’ மூலம் வருபவை. இதுபோல் சுமார் 1,400 தொழில்களுக்கு பயிற்சி அளிக்கலாம்.

இப்படி பயிற்சி அளிக்க நினைத்தால், நீங்கள் பயிற்சி வகுப்புகள் முடித்து பதிவு பெற்ற தொழில் செய்பவராக அல்லது தொண்டு நிறுவனத்தினராக இருக்க வேண்டும், வருமானவரிக் கணக்கு நிரந்தர எண்ணுக்கான அட்டை (பான் கார்டு) வைத்திருக்க வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்து, 2,000 ரூபாய் பணம் கட்டினால் போதும், 'எஸ்டிஐஎஸ்' அமைப்பிலிருந்து, ஆய்வு செய்து அனுமதி அளிப்பார்கள். இது, பாரத பிரதமரின் புதிய திறன் பயிற்சி திட்டம்.

மேலதிக விவரங்களுக்கு, தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை துணை இயக்குநர் பி.பரமேஸ்வரியை 99444 05759 என்ற எண்ணில் அணுகலாம்.

பயிற்சி நடத்துவதற்கு மத்திய அரசின் 'என்சிவிடி' (NCVT) சான்றிதழ் மட்டும் கிடைத்தால் போதும், வேறு உதவிகள் தேவையில்லை என்று நீங்கள் நினைத்தால்... அதற்கும் திட்டங்கள் உள்ளன. மாநில அரசின் தொழில் ஆலோசனை மையம் (ITCOT - Industrial and Technical Consultancy Organisation of Tamilnadu Limited) சென்னையில் உள்ளது. அவர்கள் உங்கள் மாணவர்களுக்கு திறன் பயிற்சி தேர்வுகள் வைத்து, அதில் வெற்றி பெறுபவர்களுக்கு 'என்சிவிடி' சான்றிதழை வழங்குவார்கள்.

இந்தத் தேர்வு எழுதுபவர் பயிற்சி பெற்றவராகவோ அல்லது சுயமாக தொழில் பெற்றவராகவோ இருக்கலாம். சுமார் 1,450 தொழில்களுக்கு இத்தகைய தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு எழுதும் ஒவ்வொருவரும் 800 ரூபாய் பணம் கட்டி விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட நாளில் தேர்வு நடக்கும். தேர்வில் வெற்றி பெற்றால், 'என்சிவிடி' சான்றிதழ் அரசு முத்திரையுடன் கிடைக்கும். இது மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் என்பதால், வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் வெளிநாட்டு வேலைகளுக்குச் செல்வதற்கு பயன்படும். தேர்வில் வெற்றி பெற்றால், விண்ணப்ப கட்டணத்தை அரசாங்கம் திரும்பக் கொடுத்துவிடும்.

மேலதிக விவரங்களுக்கு: ITCOT Consultancy Serivce Ltd, Govt of Tamilnadu, Chennai. திட்ட அலுவலர் சிவகுமாரின் தொடர்பு எண், 94433 04956.

திறன் பயிற்சி திட்டத்துக்கு மட்டும் அல்லாமல், ஏழு துறை அமைச்சகங்களின் மூலம் இலவச பயிற்சி திட்டங்களும் உள்ளன.

நிறுவனத்தை பதிவு செய்வதைப் பற்றி கேட்டிருந்தீர்கள். உங்கள் நிறுவனத்தை குறுதொழில் நிறுவனமாக பதிவு செய்யலாம். மாவட்ட தொழில் மையத்தை அணுகி, 'மெமரண்டம் பார்ட்-2' என்கிற விண்ணப்பத்தை வாங்கி, பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைன் மூலமாகவும் முயற்சிக்கலாம்,

வாழ்த்துக்கள்!’'

வெற்றிக் கோட்டை தொடுவதற்கு நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி... 'வாருங்கள்...            வழிகாட்டுகிறோம்’ கேள்வி - பதில் பகுதி, அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism