Published:Updated:

'எப்படி மீட்கப் போறீங்க இந்தியாவை?'

- சா.வடிவரசு, படம்: ரா.மூகாம்பிகை

'எப்படி மீட்கப் போறீங்க இந்தியாவை?'

- சா.வடிவரசு, படம்: ரா.மூகாம்பிகை

Published:Updated:
##~##
நா
ட்டின் 64-வது குடியரசுதின விழா கொண்டாட்ட நேரம் இது. அடிமை இந்தியாவில் சுதந்திரத்துக்காக நேரடி பங்காற்றிய வரலாறு கொண்ட மற்றும் நாட்டின் நலனுக்காக இயங்கிக் கொண்டு இருக்கும் இந்தப் பெண்களுடன் பேசினோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லஷ்மி, சுதந்திரப் போராட்ட வீரர்: ''1947-ம் வருஷம், ஆகஸ்ட் 15... நம்ம நாட்டுக்கு சுதந்திரம் கிடைச்சது. ஆனாலும், அப்போ இந்தியாவுக்கு நிரந்தரமான, நேர்த்தியான அரசியலமைப்பு சாசனம் இல்லை. டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான ஒரு குழு பல கட்ட உழைப்புக்கு பிறகு, 'உலகில் உள்ள மற்ற குடியரசு நாடுகளின் அரசியல் சாசனங்களைவிட பெரியது'ங்கற சிறப்போட... ஜனவரி 26, 1950-ல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நிறுவப்பட் டது. அதைக் கொண்டாடும் விதமா, குடியரசுதின விழா வருஷம்தோறும் கொண்டாடப்படுது. இந்த வரலாறை, இளைய தலைமுறைக்குச் சொல்லித்தர ஆள் இல்லை. டி.வி-யைத் தொறந்தா... சினிமா, பாட்டு, டான்ஸுதான்.

'எப்படி மீட்கப் போறீங்க இந்தியாவை?'

படாத பாடுபட்டு சுதந்திரம் வாங்கின நாடு இது. ஆனா, சமீப காலமா நடக்கற விஷயங்கள எல்லாம் வெச்சி பார்க்குறப்போ, குழந்தையைக் கூட வெளியில அனுப்புறதுக்கு ஒவ்வொரு பெற்றோரும் பயப்பட வேண்டியதா இருக்குது. அந்த அளவுக்கு நம்ம நாட்டோட நிலைமை கெட்டுப்போய் கிடக்குது. ஒரு பெண் தனியா வெளியில போயிட்டு வர்றதுங்கறதே பெரிய விஷயமா ஆயிடிச்சு. இதையெல்லாம் பார்க்கறப்போ இந்தியா சுதந்திரம் அடைஞ்சதுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லையோனு தோணுது. ஒரு பெண், ராத்திரி 12 மணிக்கும்கூட வெளியில தனியா... சுதந்திரமா... போயிட்டு வர்ற நாள்தான் நம்ம நாடு முழு சுதந்திரமும், குடியுரிமையும் அடைஞ்ச நாள். அடுத்த தலைமுறையாவது, தானே தலையெடுத்து... இந்தியாவை உண்மையான, முழுமையான குடியரசு நாடா மாத்தணும்!''

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், சுதந்திரப் போராட்ட வீரர்: ''அப்போ இருந்த அரசு, குடிமக்கள் ஆளும் அரசா இருந்தது. இன்னிக்கு குடிமக்களை அடிமைப்படுத்தி ஆளுற அரசாங்கம்தான் இருக்கு. குறிப்பா, மக்களோட நலனில் அக்கறை இருந்தா... விபரீதம் வரப்போகுதுனு தெரிஞ்சும்... சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பாங்களா? அதைப் போராடி எதிர்க்கும், தடுக்கும் உரிமையும் கடமையும் இந்த ஜனநாயக நாட்டோட ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கு. ஆனா, அப்படி ஓர் எழுச்சி இன்னமும் இங்க எழும்பாமல் இருக்கறது வேதனையா இருக்கு. இன்னொரு பக்கம், கட்சிகளோட சுயநல அரசியல். ஆனாலும் மக்களோட நலனை கருத்தில்கொண்டு, இதை முழுமையா எதிர்க்கற மம்தா பானர்ஜியை பாராட்டத் தோணுது.

'எப்படி மீட்கப் போறீங்க இந்தியாவை?'

இன்னிக்கு அதிகாரமும் பணபலமும் தர்றதுல இந்தியாவிலேயே நம்பர் ஒன் தொழில், அரசியல். மக்களோட உரிமைக்காகவும், சுதந்திரத்துக்காகவும், நலனுக்காகவும் அமைக்கப்பட்ட குடியரசு, இன்னிக்கு அரசியல்வாதிகளோட கையில. ஆங்கிலேயர்கள்கிட்ட இருந்து இந்தியாவை நாங்க மீட்டுக் கொடுத்துட்டோம். ஆனா, மறுபடியும் அந்நியர்கிட்ட அடகுவைக்கிற அரசியல்வாதிகள்கிட்ட இருந்து எப்படி மீட்கப் போறீங்க எதிர்கால இந்தியாவை?!''  

சின்னப்பிள்ளை, நிறுவனர், 'களஞ்சியம்’: ''கொடி ஏத்துறோம். இனிப்புக் கொடுக்குறோம். அதோட முடிஞ்சுடாம, மனசெல்லாம் கேள்விகளா அரிக்குது. நாட்டுக்கே சுதந்திரம் வாங்கிட்டோம். ஆனாலும், தாழ்ந்த சாதிக்காரங்க கோயில், பொதுக்கிணறுனு சுதந்திரமா உலவக்கூட முடியாத ஊருங்க நம்ம நாட்டுல இருக்கு. குடியாட்சினு சொல்றோம். கவுன்சிலர் எலெக்ஷன்ல இருந்து நாடாளுமன்றத் தேர்தல் வரை மக்களோட ஓட்டைவிட, கட்சிகளோட அரசியல்தான் பேசுது. 'இந்த அரசாங்கம், மக்களோட வேலைக்காரன்’னு சொல்லுறாங்க. பாமர மக்கள்

'எப்படி மீட்கப் போறீங்க இந்தியாவை?'

அரசாங்க ஆபீஸுக்குப் போனா... அடிச்சு விரட்டாத குறைதான்.

இந்தியக் குடிமக்களோட அடிப்படை உரிமைகள் பத்தி பெரியவங்க கூட்டங்கள்ல பேசுறதைக் கேட்டிருக்கேன். பணம், அதிகாரம்   இருக்கிறவன் பேசணும், ஏது மில்லாதவன் கேட்கணும்ங்கிறதுதான் எல்லா இடத்துலயும் இருக்கிற நடைமுறை. பெண்கள் பாதுகாப்புக்கு நம்ம சட்டத்துல நிறைய சொல்லியிருக்காங்களாம். எல்லாம் புத்தகத் தோடயே இருக்க, ரோட்டுல பொண்ணுங்க  நடக்க முடியாத நிலை.

உலகத்துல எத்தனையோ சர்வாதிகார தேசங்கள் எல்லாம் இன்னும் இருக்க, இந்தியா மாதிரி ஒரு ஜனநாயக நாட்டோட குடிமக்களா இருக்கிறது பெருமைக்குரிய விஷயம். ஆனா, அரசியல் சட்டத்துல இருக்குற உரிமைகள் எல்லாம் என்னை மாதிரி படிக்காதவங்க வரை எல்லாருக்கும் கிடைக்கணும். அன்னிக்கு... உண்மையான குடியரசு தினம் கொண்டாடுவோம்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism