Published:Updated:

ரசனை தரும் ரிச் லுக் !

ஸ்டார் டிசைனர் அனுபவ தொடர்விவேக் கருணாகரன்

ரசனை தரும் ரிச் லுக் !

ஸ்டார் டிசைனர் அனுபவ தொடர்விவேக் கருணாகரன்

Published:Updated:

ஃபேஷன் வேர்ல்டு

##~##

'நம்மோட டிரெஸ்ஸிங் ஸ்டைல் நல்லா இருக்கணும்'னு அப்பப்போ நம்ம மனசுல சின்னதா ஆசை உருவாகும். 'அது, அந்த நிமிஷத்தோட முடிஞ்சு போயிடாம, அதை ஒரு உறுதிமொழியா எடுத்துக்கணும்'னு எங்கிட்ட அறிமுகமாகிற ஒவ்வொருத்தர்கிட்டயும் சொல்வேன். 'என்னோட டிரெஸ்ஸிங் ஸ்டைல் இப்படித்தான் இருக்கும்!’னு இளம் வயதிலிருந்தே நமக்குனு ஒரு தனித்துவ ஸ்டைலை உருவாகிக்கணும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு பயணம் போறோம். வழியில ஒரு இடத்துல சுவையான ஒரு உணவகம் இருக்கும். சாப்பிடுவோம். வித்தியாசமான ஒரு பொருளைப் பார்ப்போம். வாங்குவோம். இதையெல்லாம் பயண நேர சந்தோஷமா அனுபவிச்சுட்டு, வீடு திரும்பினதும் அடுத்தடுத்த வேலைகளில் மூழ்கிடுவோம். இதேமாதிரிதான் சிலர் கல்யாணம், 'கெட் டுகெதர்’னு வருஷத்துல நாலு, ஐந்து விசேஷங்களுக்கு மட்டும் சிறப்பா உடுத்தி சந்தோஷப்பட்டுட்டு, மற்ற நாட்கள்ல... 'எனக்கு இது போதும்’னு சாதாரண டிரெஸ்ஸுல இருப்பாங்க. சிலர், விசேஷங்களுக்குகூட கவனம் எடுத்து உடைகளை உடுத்துறதில்ல. இது தப்பு. ஜஸ்ட் லைக் தட் நம்மோட காஸ்ட்யூம்ஸ் இருக்கக் கூடாது.

கல்லூரியிலோ, அலுவலகத்திலோ, உறவுகள் மத்தியிலோ உடையைப் பத்தின உரையாடல் இல்லாம இருக்கா...?

''ஏய்... பார்ட்டிக்கு, நந்திதா என்ன டிரெஸ் போட்டுட்டு வந்தா..?''

''தெரியலயே... அவ என்னிக்கு மனசுல பதியற மாதிரி டிரெஸ் போட்டுட்டு வந்திருக்கா?''

''தீபிகா டிரெஸ் சூப்பர்ல!''

''செம சூப்பர். எப்பவும்போல       கலக்கிட்டா. சென்டர் ஆஃப் அட்ராக்ஷன் ஆயிட்டா.''

நீங்க நந்திதாபோல உடுத்தணுமா, தீபிகாபோல உடுத்தணுமா?

ரசனை தரும் ரிச் லுக் !

உடைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கனு நான் இவ்வளவு வலியுறுத்த  காரணம், நம்ம எல்லோருக்கும் தெரிஞ்சதுதான் - ஆள் பாதி, ஆடை பாதி. நாம என்னதான் உயர்வான குவாலிட்டிகளோட இருந்தாலும், அதை நம் ஆடைகளிலும் பிரதிபலிக்கணும். எளிமை, தனித்தன்மை, கம்பீரம், ரொமான்டிக்னு நம் ஆடைகளும் நம் கேரக்டரைப் பேசணும். நீங்க எந்த இடத்துக்கு போனாலும்.... நீங்க பேச ஆரம்பிக்கறதுக்கு முன்னயே... மத்தவங்களுக்கு உங்க டிரெஸ் ஒரு நல்ல அறிமுக இம்ப்ரஷனைக் கொடுக்கணும். 'இந்தப் பொண்ணு ஒரு நல்ல அட்மாஸ்பியர்ல இருந்து வர்றாங்க’னு உங்களைப் பத்தி மத்தவங்கள தன்மையா உணர வைக்கணும்.

உடையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கும்போது, கல்லூரி, அலுவலகம், மீட்டிங், விசேஷம்னு கிளம்புறப்போ கடைசி நிமிஷ வேலையா டிரெஸ்ஸிங் ரூமுக்குள்ள ஓடி, அவசர அவசரமா கண்ணுல படுற ஆடைகள்ல ஒண்ணை எடுத்து உடுத்திக்கிட்டு கிளம்பலாமா? அதனால தினசரியோ, விசேஷமோ... என்ன ஆடை உடுத்துறதுனு மனசுல ஒரு சின்ன பிளான் போட்டு, அதை நேர்த்தியா எக்ஸிக்யூட் பண்ணுங்க. போற இடத்துல நீங்கதான் ஸ்டார்!

ஓகே... இப்போ ஸ்டார் காஸ்ட்யூம் பத்தி பேசுவோமா?! போன முறை ரஹ்மான் சார் பத்தி நிறைய பகிர்ந்துக்கிட்டேன். இந்த முறை, நயன்தாரா. நான் ரெண்டாவது எபிசோட்ல தமன்னாவுக்கு டிரெஸ் டிசைன் பண்ணினது பத்தி சொன்னேனே, அதே நேரத்துலதான் நயன்தாராவுக்கும் வொர்க் பண்ணினேன். இது போட்டோகிராஃபர் வெங்கட்ராமோட கேலண்டர் ஷூட்காக பண்ணினது. இந்த ஷூட்டுக்கு ஒரு வின்டேஜ் கார் இருந்தா நல்லா இருக்கும்னு ஒரு ஐடியா கிளிக் ஆச்சு. அதுக்காக ஹை லுக் கொடுக்குற ஓல்டு மாடல் காரை கொண்டுவந்தோம். அந்த ஷூட் சென்னையிலதான் நடந்துச்சு.  

டிரெஸ் ஸ்டைல் ரொம்ப பெர்ஃபெக்டா இருக்கணும்னு மெனக்கெடுற நடிகைகள்ல நயன்தாரா முக்கியமானவங்க. இந்த காஸ்ட்யூம் தனக்கு சூட் ஆகுமா, ஆகாதானு பார்த்ததுமே சொல்லிடுற அளவுக்கு டிரெஸ் சென்ஸ் உள்ளவங்க. அதேபோல ஸ்டைல், டிசைனு ஃபேஷன்ல அப்டேட்டடா எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிற ஆர்வத்தோட இருக்கறவங்க.

ரசனை தரும் ரிச் லுக் !

அவங்களோட ஸ்டைல் டிசைன் வொர்க்கை கையில எடுத்த சமயத்துல, 'ஃபேஷன் வீக்’ ஷோ ஒண்ணு செய்திருந்தேன். பொதுவா ஒவ்வொரு ஷோலயும் ஃபைனலா வலம் வர்ற டிரெஸ் ரொம்பவே முக்கியமானதா, மாஸ்டர் பீஸா இருக்கும். அதேபோல அந்த ஷோல இறுதி ரவுண்ட்ல மாடல் அணிந்து வந்த காஸ்ட்யூம், நிறைய பாராட்டுகளை குவிச்சுது. அந்த மாடல் டிரெஸைத்தான் நயன்தாராவோட கேலண்டர் ஷூட்டுக்காக பிளான் பண்ணி எடுத்துக்கிட்டேன்.

'எம்ப்ராய்டட் பப்பிள் டிரெஸ்’... அதுதான் அந்த டிசைனோட பேரு. போட்டோ பாருங்க... நயன்தாரா உடுத்தியிருக்கும்போது அது இன்னும் அழகாகுதுல? இந்த டிரெஸோட கலர்ஸ் அண்ட் எம்ப்ராய்டரி வொர்க் அவங்களை ரொம்பவே இம்ப்ரஸ் பண்ணினதை, அவங்களோட சந்தோஷத்துலயே தெரிஞ்சுக்க முடிஞ்சது. 'கிராண்ட் ஃபங்ஷன்களுக்கு இந்த டிரெஸ் ரொம்பவே கிராண்ட் லுக் தரும்ல..?!’னு ஷூட் அப்போ சொல்லி ரொம்ப ரசிச்சாங்க.

இப்பவும் அவங்களுக்கு நிறைய டிரெஸ் டிசைன் செய்து கொடுத்துக்கிட்டிருக்கேன். ஒரு பெயின்ட்டிங் வொர்க்கை ரசிக்கிற மாதிரிதான், ஒரு டிரெஸோட ஸ்டைல் அண்ட் டிசைன்ஸையும் நயன்தாரா ரசிப்பாங்க. அந்த ரசனைதான் அவங்களுக்கு எப்பவும் ரிச் லுக் கொடுக்குதுனு நினைக்கிறேன்!

- மெருகு கூடும்...  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism