Published:Updated:

''தண்டனைகளைவிட... தடுப்பதே முக்கியம்!''

முதல்வரின் அதிரடியும்... சமூக ஆர்வலர்களின் கோரிக்கைகளும்... சா.வடிவரசு

''தண்டனைகளைவிட... தடுப்பதே முக்கியம்!''

முதல்வரின் அதிரடியும்... சமூக ஆர்வலர்களின் கோரிக்கைகளும்... சா.வடிவரசு

Published:Updated:
##~##

1.  பாலியல் வன்முறை வழக்குகளை முடிந்தவரை பெண் காவல் ஆய்வாளர்கள் விசாரிப்பார்கள்.

2.  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் இவ்வழக்குகளின் விசாரணையை மாதந்தோறும் ஆய்வு செய்வார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

3.  நிலுவையில் இருக்கும் பாலியல் வன்முறை வழக்குகளை, காவல்துறை தலைவர்கள் விரைந்து முடிக்க வேண்டும்.

4.  குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை.

5.  மாவட்டம்தோறும் மகளிர் விரைவு நீதிமன்றம்.

6.  அரசு வழக்கறிஞர்களாக பெண்களே நியமிக்கப்படுவார்கள்.

''தண்டனைகளைவிட... தடுப்பதே முக்கியம்!''

7.  குற்றவழக்குகள் தினசரி நடத்தி, விரைந்து முடிக்கப்படும்.

8.  கைதாகும் நபர்கள் முன்ஜாமீன் பெறுவது தடுக்கப்படும். குற்றவாளிகளுக்கு வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம் செய்யப்படுவது; அதிகபட்சமாக மரண தண்டனை அளிப்பது குறித்து சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தப்படும்.

9.  வழக்குகளை விசாரிக்க போலீஸாருக்கு போதிய பயிற்சி அளிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்களைக் கனிவுடனும், கண்ணியத்துடனும் நடத்துவது குறித்தும் போலீஸாருக்கு போதிக்கப்படும்.

10.  பாதிக்கப்பட்ட பெண்களின் மருத்துவ சிகிச்சை மற்றும் மறுவாழ்வு இரண்டையும் அரசே ஏற்கும்.

11. 24 மணி நேரமும் உதவி செய்யும் வகையில் ஒருங்கிணைந்த இலவச தொலைபேசி அழைப்பு சேவை உருவாக்கப்படும்.

12. பொதுக் கட்டடங்கள் அனைத்திலும் கண்காணிப்பு கேமிராக்கள் நிறுவப்படுவது உறுதிபடுத்தப்படும்.

13. பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் சீருடை அணியாத காவல்துறையினர் பணியில் இருப்பார்கள். அங்கே பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுப்பார்கள்.

- இதெல்லாம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அதிரடி அறிவிப்புகள். டெல்லி, தமிழகம் உள்பட பல இடங்களில் நடந்திருக்கும் பெண்களுக்கு எதிரான கொடூர பாலியல் குற்றச்சம்பவங்களை அடுத்துதான் இந்த அதிரடிகள்!

சமூகத்தின் பல தரப்பிலிருந்தும் இந்த நடவடிக்கைகளுக்கு வரவேற்பு சொல்லப்பட்டிருக்கும் அதேசமயம், 'அவற்றில் சில மாற்றங்களைச் செய்யவேண்டும்... ஆக்கப்பூர்வமான சிலவற்றைச் சேர்க்க வேண்டும்' என்று சொல்லி, சமூக ஆர்வலர்கள் இருபது பேர் முதல்வருக்கு மனு அனுப்பியிருக்கிறார்கள்.

அவர்களில் ஒருவரான கல்வியாளர் டாக்டர் வி.வசந்திதேவி அதைப் பற்றி பேசும்போது, ''தமிழகத்தில் பெண்கள், சிறுவர்கள், தலித் மக்கள் போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட பல சட்ட அமைப்புகளையும், கண்காணிப்பு அமைப்புகளையும் மாற்றியும், திருத்தியும்

''தண்டனைகளைவிட... தடுப்பதே முக்கியம்!''

அமைக்கப்பட வேண்டிய அவசர அவசியமும் இருக்கிறது. உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்துக்கு தலைவர் கிடையாது. பெண்களுக்கான மாநில ஆணையத்துக்கு தலைவர் மட்டுமே செயல்படுகிறார். உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஆணை பிறப்பித்தும், குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படவில்லை. இவையெல்லாம், பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான குற்றங்களில் உரிய நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றன.

பாலியல் தாக்குதல்களுக்கு எதிராக கடும் தண்டனைகள் மட்டுமல்லாது, நீண்ட காலத்திட்டமாக... ஆணாதிக்க கலாசார சிந்தனையை மாற்றி, பெண்கள் பற்றிய புரிதலும், மனிதாபிமானமும் கொண்ட சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவது மிகமிக முக்கியம். அதுவே, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழாத மாநிலமாக, தமிழகம் மாறுவதற்கு அடித்தளமாக அமையும். மனிதநேய மற்றும் ஜனநாயக உணர்வுகளை இளைஞர்களுக்கு ஏற்படுத்துவது, ஊடகங்களில் ஆண்களின் இன்பத்துக்கான பொருளாக பெண்களை சித்திரிப்பதை தடுப்பது, வன்முறையை பெருமைக்குரிய விஷயமாக ஊடகங்கள் காட்டுவதைத் தடுப்பது; சட்ட கண்காணிப்பு அமைப்புகளையும், அரசியலமைப்புகளையும் பலப்படுத்துவது; இவற்றை அரசியல் சார்பற்ற தன்னாட்சி அமைப்புகளாக மாற்றுவது... போன்ற முற்போக்கு நடவடிக்கைகள் மூலம் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி படுத்த முடியும்'' என்று வேண்டுகோள் வைத்த வசந்திதேவி,

''முதல்வரின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் மரண தண்டனை மற்றும் ஆண்மை நீக்கம் இரண்டும் சீர்திருத்தத்துக்கு வழிவகுப்பவை அல்ல என்பதோடு, மனித உரிமையை அடித்தளமாகக் கொண்ட ஒரு பண்பட்ட ஜனநாயக நாட்டின் கொள்கையைப் பிரதிபலிப்பதாகவும் இல்லை. அதேபோல, குண்டர் தடுப்பு சட்டம் என்பது... அதிகார துஷ்பிரயோகத்துக்கு வழிவகுக்கவும் கூடும். இதையெல்லாம் முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' என்றும் சொன்னார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism