Published:Updated:

டெல்லிக்குப் போறோம் !

சா.வடிவரசு, கே.தீபிகா படங்கள்: இ.ராஜவிபீஷிகா

டெல்லிக்குப் போறோம் !

சா.வடிவரசு, கே.தீபிகா படங்கள்: இ.ராஜவிபீஷிகா

Published:Updated:
##~##

 சந்தோஷமாக கோரஸ்கிறார்கள், சென்னை, எஸ்.ஐ.இ.டி. கல்லூரி இரண்டாம் ஆண்டு என்.சி.சி. மாணவிகளான பவித்ரா, ஷமாபானு, பிரியா, காயத்ரி மற்றும் லுப்னா. ஜனவரி 26 அன்று டெல்லியில் நடக்க விருக்கும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொண்டு நம் மாநில கலாசார நடனங்களை அரங்கேற்ற, செம்மொழிப் பூங்காவில் பயிற்சி செய்து கொண்டிருந்தவர்களைச் சந்தித்தபோதுதான், இந்த சந்தோஷம்!

''ஒவ்வொரு வருஷமும் டெல்லியில நடக்கற குடியரசுதின அணிவகுப்புல கலந்துக்க, பல மாநிலங்கள்ல இருந்தும் என்.சி.சி, என்.எஸ்.எஸ் உள்ளிட்ட பிரிவுகள்ல திறமையான மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்வாங்க. என்.சி.சி-யை பொறுத்தவரைக்கும் டிரில், கலாசார நடனம்னு பல பிரிவுகள் உண்டு. இதில் ஒவ்வொரு பிரிவுக்கும் மாநிலத்துக்கு 11 பேர் வீதம் தேர்வு செய்வாங்க. நாங்க கலந்துக்கப் போற கலாசார நடனப் பிரிவுக்குத் தேர்வான 11 பேர்ல, நாங்க 5 பேருமே ஒரே காலேஜ்ல இருந்து தேர்வானது சிறப்பான விஷயம். 16-ம் தேதியே டெல்லிக்குப் போயிடுவோம். அங்க 9 நாள் பயிற்சி முடிச்சு, 26-ம் தேதி குடியரசுதின அணிவகுப்பு, 28-ம் தேதி பிரதம மந்திரி முன்னிலையில் ஊர்வலம்னு கலக்கப் போறோம்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- கண்கள் படபடக்கப் பேசுகிறார்கள் பவித்ராவும் லுப்னாவும்.

டெல்லிக்குப் போறோம் !

''எங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற 6 நிமிஷத்துல பரதநாட்டியம், குச்சிப்புடி, கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலாசார நடனங்களை ஆடணும். கடுமையா, சின்ஸியரா பிராக்டீஸ் எடுத்துட்டு இருக்கோம். ஏன்னா, நாட்டில் இருக்கிற லட்சக்கணக்கான மாணவர்கள்ல சிலருக்கு மட்டுமே கிடைக்கிற வாய்ப்பாச்சே..! இப்படிப்பட்ட வாய்ப்பை எங்களுக்கு கொடுத்த என்.சி.சி மாஸ்டர், காலேஜ் நிர்வாகம், தேர்வு கமிட்டி எல்லாருக்குமே வார்த்தைகள்ல நன்றி சொல்றதைவிட, எங்க நிகழ்ச்சியோட வெற்றி மூலமா சொல்வோம்...''

- பயிற்சியில் துளிர்த்திருந்த வியர்வைத் துடைத்துச் சொல்கிறார்கள் ஷமாபானு மற்றும் பிரியா.

''காலேஜ்ல சேர்ந்த புதுசுல, மேம் யாராச்சும் லீவ் எடுக்க மாட்டாங்களா, ஏதாச்சும் ஃப்ரீ அவர் கிடைக்காதானு ஏங்கிக் கிடப்போம். அப்போதான், 'என்.சி.சி-ல சேர யாருக்கெல்லாம் விருப்பம் இருக்கோ, பெயர் கொடுங்க...’னு கிளாஸ்ல லிஸ்ட் எடுத்தாங்க. 'ஹைய்யா! இதுல சேர்ந்தா அடிக்கடி கிளாஸ்ல இருந்து 'எஸ்’ ஆயிடலாம்!’னு பெயர் கொடுத்த பொண்ணு நான். ஆனா சேர்ந்ததுக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது, அதுக்கான பயிற்சிகள் எவ்வளவு கஷ்டம்னு. டிரில் வாங்கும். ஆனாலும், போகப்போக பழகிடுச்சு, பிடிச்சிருச்சு. சின்ஸியர் என்.சி.சி. ஸ்டூடன்ட்டா உருமாறினேன். அந்த ஆர்வத்துக்கும், திறமைக்கும்தான் இப்போ டெல்லி போற வாய்ப்புக் கிடைச்சுருக்கு. ஆகவே ஃப்ரெண்ட்ஸ்... என்.எஸ்.எஸ், என்.சி.சி. போன்ற ஸ்கீம்களில் சேரும்போது, பொழுதுபோக்குனு நினைச்சு சேராம, அர்ப்பணிப்போட பணியாற்றுங்க. நிச்சயமா அங்கீகாரம் கிடைக்கும்!'' என்று காயத்ரி சொல்ல,

''ஏய்... பொண்ணு மெசேஜ் சொல்லி முடிச்சுட்டா!'' என்று அனைவரும் அவரை கலாய்க்க,

''போதும்... போதும். பேக் டு பிராக்டீஸ்!'' என்று ஃபார்முக்கு இழுத்தார் பவித்ரா!

டெல்லி சலோ கேர்ள்ஸ்!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism