Published:Updated:

ஃப்ரீடா காலோ முதல் மலாலா வரை...

காவிய நாயகிகள்...!ம.மோகன், படம்: சொ.பாலசுப்ரமணியன்

ஃப்ரீடா காலோ முதல் மலாலா வரை...

காவிய நாயகிகள்...!ம.மோகன், படம்: சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
 ##~##

''நிறைய பாதிப்புகள் பெண்களை சூழ்கிற நேரம் இது. துர்கை, பாரத மாதா, தாய்மொழி, தாய்நாடுனு நம்ம நாட்டை பெண்ணாகவே பாவனை செய்றோம். ஆனா, இன்னிக்கு நடந்துக்கிட்டிருக்கிற நிகழ்வெல்லாம், கண்ணகிக்கு எழுந்த மாதிரி கோபத்தைதான் ஏற்படுத்துது. வலி சுமந்த இந்த சூழல்லதான் என்னோட 'எபிக் விமன்’ (காவிய நாயகிகள்)  ஷோவை நடத்தி முடிச்சிருக்கேன்!''

- தன் நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைந்துவிட்டாலும், பெண்களின் பாதுகாப்பை பறித்திருக்கும் நடப்பு சூழலைப் பற்றிய வருத்தத்தை பதிவு செய்தே பேட்டியை ஆரம்பிக்கிறார், அனிதா ரத்னம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டான்சர், நடன வடிவமைப்பாளர், எழுத்தாளர், நடிகை, சமகால இந்திய நடனம் குறித்த ஆலோசகர் என்று பன்முகம் கொண்டவர், அனிதா ரத்னம். கடந்த டிசம்பர் 20 - 23 தேதி வரை, சென்னையில் 'எபிக் விமன்’ என்கிற பெயரில் நான்கு நாட்கள் 'டான்ஸ் கான்ஃபரென்ஸ்’ நிகழ்ச்சியை நிகழ்த்திஇருந்தவரிடம், தொடர்ந்து பேசியதிலிருந்து...

ஃப்ரீடா காலோ முதல் மலாலா வரை...

''இந்நிகழ்ச்சி என்னோட 12 மாத உழைப்பு. கடந்த 2011 மார்கழியில 'மேட் அண்ட் டிவைன்’னு ஒரு ஷோவை செய்தோம். அதை முடிச்ச அடுத்த நாள்ல இருந்தே... இந்த 'எபிக் விமன்’ வேலைகள்ல இறங்கிட்டேன். தமிழ்ல 'காவிய நாயகிகள்’னு சொல்வோம். நம் பண்டைய காவியங்கள்ல வலம் வந்த திரௌபதி, சீதா, கண்ணகி, மாதவினு பலரோட பங்களிப்புகளை இன்னிக்கும் நம்மோட கலாசார நற்குணங்களுக்கு சான்றா கொண்டாடிட்டு வர்றோம். ஆனா, அவங்களுக்கு அடுத்தும் நிறைய பெண்கள் தங்களோட சாதனைகள் மூலமா கொண் டாட்ட ஸ்தானத்துக்கு வந்திருக் காங்க. அவங்கதான் என்னோட 'காவிய நாயகிகள்’!

20 - ம் நூற்றாண்டின் தொடக்கத் துல பிறந்த ஃப்ரீடா காலோ, எம்.எஸ்.சுப்புலட்சுமி, இந்த 21-ம் நூற்றாண்டு நாயகிகள் ஆங் சான் சூ கி, தலிபான்களின் தாக்குத லுக்கு உள்ளான பாகிஸ்தானைச் சேர்ந்த போராளிச் சிறுமி மலாலா வரைக்கும்னு எடுத்துக்கிட்டோம்!'' என்று தன் 'ஷோ’வின் கருப்பொருள் பற்றிப் பேசியவர்,

''இந்த 'ஷோ’, இதுவரைக்கும் டான்ஸ்ல யாரும் தொடாத ஒரு புது அத்தியாயமா அமைஞ்சிருந்தது. ஒவ்வொருத்தரைப் பத்தின நடனமும் ரொம்பவே சுவாரசியத்தை ஏற்படுத்துச்சு. குறைந்தது 12 நிமிஷத்துல முடிக் கிற டான்ஸ்கூட வெச்சிருந்தோம். இப்படி குறைந்த நேரத்துக்குள்ள ஒருவரோட வாழ்க்கையை நடனத் தில் சொன்னதை ஆடியன்ஸ் ரொம்பவே ரசிச்சாங்க.

ஃப்ரீடா காலோ முதல் மலாலா வரை...

உதாரணத்துக்கு, ஓவியர் ஃப்ரீடா காலோ. மெக்ஸிகோவைச் சேர்ந்தவங்க. 1907-ல் பிறந்தவங்க. நம்ம ஊர்போல பெண்கள் பற்றின வரலாறோ, பெண் வழிகாட்டிகளோ பெரிய அளவில் இல்லாத தேசம் அது. அந்தச் சூழல்ல பிறந்து, 10 வயதுக்கு முன்பே போலியோவால தாக்கப்பட்டு, தன்னோட 18 வயசுல

ஃப்ரீடா காலோ முதல் மலாலா வரை...

பெரிய கார் ஆக்ஸிடென்ட்ல சிக்கினவங்க. ஆனா, மனதை கொஞ்சமும் தளரவிடாமல், தூரிகை எடுத்து ஓவியம் வரைஞ்சாங்க. அதில் எல்லோருக்கும் வழிகாட்டியா இருந்தாங்க. 20-ம் நூற்றாண்டின் முக்கிய ஓவியர்கள்ல ஒருவரா இப்போ வரலாற்றில் உயிர் வாழ்றாங்க. நாங்க நடனம் மூலமா அவங்களுக்கு உயிர் கொடுத்தோம்!''

- ரசித்துப் பேசுகிறார் அனிதா ரத்னம். 'காவிய நாயகிகள்’ ஷோவில் வெளிநாட்டவர் பலரும் திறமையை நன்றாக வெளிப்படுத்தியுள்ளனர்.

''சவுத் ஆப்ரிக்கா, ஜப்பான், கொரியா, யு.எஸ்.ஏ, யு.கே-னு பல நாடுகள்ல இருந்தும் இந்த நிகழ்ச்சியில் பங்களிச்சாங்க. நம்ம மொழியை அவ்ளோ ஈடுபாட்டோட கத்துக்கற முயற்சி அவங்க எல்லார்கிட்டயுமே இருந்துச்சு. ஜப்பான் நாட்டினர் நம்ம சிலப்பதிகாரம் பத்தி ஆழமா தெரிஞ்சி வெச்சிருக்காங்க. அதேபோல அவங்களோட சில கலைகளும் என்னை ரொம்பவே ஈர்த்துச்சு. இப்போ மார்கழி விழாவில் பரவலா கிளாஸிக் மட்டும்தான் பார்க்க முடியுது. அதிலும், பரத நாட்டியம் பெருசா இருக்கு. நவீன வடிவம், புதிய நாட்டியமெல்லாம் ரொம்பவே குறைவு. அதை நிவர்த்தி செய்யுற மாதிரி, 'காவிய நாயகிகள்’ அமைஞ்சது சந்தோஷமே!'' என்றவர்,

''ஒரு பெரிய நிகழ்ச்சியை நேர்த்தியா நடத்தி முடிச்சாச்சு. அடுத்த புராஜெக்ட்ல கவனம் செலுத்த ஆரம்பிச்சாச்சு. 'புருஷ்’ - இதுதான் அடுத்த வருஷ 'ஷோ’வுக்கான மையக் கருத்து. அது முழுக்க முழுக்க ஆண்கள் பற்றின நிகழ்ச்சியா இருக்கும்!'' - புன்னகையோடு விடைகொடுத்தார், அனிதா ரத்னம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism