Published:Updated:

குட்டீஸ் குறும்பு !

ஓவியம்: ஹரன்

குட்டீஸ் குறும்பு !

ஓவியம்: ஹரன்

Published:Updated:

 ஒவ்வொன்றுக்கும் பரிசு:

குட்டீஸ் குறும்பு !

150

டிசைன் டிசைனாக அடி!

 ##~##
நண்பரின்
வீட்டுக்குச் சென்றிருந்தோம். பத்து வயதிலிருக்கும் அவரின் மூத்த மகன், தன் தம்பி அடிப்பதாக அழுதுகொண்டே கூறினான். உடனே நண்பர், ''டேய்... நீதான் அண்ணன். அதுமட்டுமில்லாம... கராத்தேல பிளாக் பெல்ட் வேற வாங்கியிருக்கே. அவன்கிட்ட போய் அடி வாங்கலாமா..?'' என்று கிண்டலாகக் கேட்டார். உடனே அவன், ''மாஸ்டர் எனக்கு சொல்லிக் கொடுத்தது மாதிரி அவன் என்னை அடிச்சா... நான் தடுத்திருப்பேன். ஆனா, டிசைன் டிசைனா அடிக்கிறான்பா... ஒண்ணுமே புரியலப்பா'' என்று சொல்லி... மேலும் அழ, எங்களுக்கோ சிரிப்பு பொத்துக் கொண்டது!

- எஸ்.ரேவதி சிவகுமார், திருவனந்தபுரம்

'நைட்'ஸ்வரி நம!

குட்டீஸ் குறும்பு !

என் ஆறு வயது பேரன், அன்று காலை உணவு சாப்பிட அமர்ந்தபோது, ஐந்து முறை 'அகிலாண்டேஸ்வரி நம’ என்று சொல்லிவிட்டுச் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்தேன். அவ்வாறே செய்தான். அன்றிரவு சாப்பிட உட்கார்ந்ததும், 'அகிலாண்நைட்ஸ்வரி நம’ என்று ஐந்து முறை சொல்லி சாப்பிட ஆரம்பித்தான். இவன் வேறு ஏதோ சொல்கிறானே என்று நான் அவனை உற்றுப் பார்க்க, ''டே டைம்ல அகிலாண்'டே’ஸ்வரி சொன்னேன். இப்ப நைட் (இரவு) ஆச்சே..! இப்ப, அகிலாண்'நைட்’ஸ்வரிதானே சொல்லணும்?'' என்று கேட்க, தினம் தினம் சிரித்தபடி இருக்கிறோம், 'நைட்'ஸ்வரியை நினைத்து!

- ருக்மணி சுந்தரம், மும்பை

உம்மாச்சிக்கு பழம் பிடிக்காதா?

நானும் என் தோழியும், அவளின் பேரனை அழைத்துக் கொண்டு முருகன் கோயிலுக்குச் சென்றோம். கற்கண்டும், வாழைப்பழம் - வெற்றிலை பாக்கும் தட்டில் வைத்து அர்ச்சனைக்குக் கொடுத்தோம். இதைப் பார்த்த தோழியின் பேரன், ''எதுக்கு இதை அந்த மாமா கையில் கொடுத்தே?''    என்று கேட்டான். அவளும், ''முருகா உம்மாச்சிக்கு (கடவுள் என்பதை இப்படித்தான் குழந்தைக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறோம்) சாப்பிடக் கொடுத்தோம்'' என்றாள். அர்ச்சனை முடிந்து குருக்கள் கற்கண்டை எல்லோருக்கும் பிரசாதமாகக் கொடுத்தார். வாழைப்பழத் தட்டை தோழியிடம் கொடுத்தார். உடனே அவள் பேரன், ''ஏன் பாட்டி வாழைப்பழத்தை மாமா திருப்பிக் கொடுத்திட்டா? என்னை மாதிரி, முருகா உம்மாச்சிக்கும் பழம் பிடிக்காதா?'' என்று வாயையும், கையையும் ஆட்டி ஆட்டிப் பேச... சந்நிதியில் இருந்த அனைவரிடமும் ஆனந்த சிரிப்பு களைகட்டியது!

- ஆர்.ராஜலஷ்மி, சென்னை-42