Published:Updated:

வால்மார்ட் வரவே கூடாது !

கே.கே.மகேஷ், அ.சாதிக் பாட்ஷா, நா.சிபிச்சக்கரவர்த்தி, ச.ஜெ.ரவிபடங்கள்: தி.விஜய், பா.காளிமுத்து, என்.ஜி.மணிகண்டன், செ.திலீபன்

வால்மார்ட் வரவே கூடாது !

கே.கே.மகேஷ், அ.சாதிக் பாட்ஷா, நா.சிபிச்சக்கரவர்த்தி, ச.ஜெ.ரவிபடங்கள்: தி.விஜய், பா.காளிமுத்து, என்.ஜி.மணிகண்டன், செ.திலீபன்

Published:Updated:
##~##

'சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு அவசியமா...?' என்பதுதான் இன்று நாடு முழுக்க ஒலித்துக் கொண்டிருக்கும் கேள்வி. நம் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான பி.ஜே.பி. தொடங்கி... சின்னஞ்சிறு கட்சிகள் வரையிலும் உள்ளூர் வியாபாரிகளின் பக்கமே நிற்கிறார்கள். ஆனபோதும்... மத்திய அரசு அசைந்து கொடுப்பதாக இல்லை.

இந்நிலையில், பொதுமக்களின் கருத்துக்களை மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில், 'அவள் விகடன்’ சார்பாக தமிழகமெங்கும் பிரமாண்ட வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 'உள்ளூர் வியாபாரியா... உலக சர்வாதிகாரியா?’ என்ற தலைப்பில் நடத்தப்படும் இந்த வாக்கெடுப்புக்காக, தமிழகம் முழுக்க இருக்கும் பல்லாயிரக் கணக்கான சில்லறை கடைகளில் (மளிகை) வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டு, பொதுமக்கள் விறுவிறுப்பாக தற்போது வாக்குகளை உள்ளூர் வியாபாரிகளுக்கு ஆதரவாக பதிவு செய்து கொண்டுள்ளனர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'நாங்க ஓட்டுப்போட்டு உருவாக்குன அரசாங்கமே... எங்களோட கருத்தைக் கேட்காம ஒரு முடிவை எடுத்துடுச்சி. 'அவள் விகடன்’ எங்க கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்த வாக்கெடுப்பு நடத்துறதும், அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப் போறதும்... 'அவள் விகடன்’ மேல எங்க மரியாதையை இன்னும் அதிகமாக்குது!'' என்று அக்கறையுடன் வாக்களித்தனர் பெண்கள்! அவர்களில் சிலரின் பகிர்வுகள்...  

வால்மார்ட் வரவே கூடாது !

ஜானகி (இல்லத்தரசி, மதுரை): ''எங்க வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளுக்கு காளிமார்க் கலரோ, டொரினோவாதான் கொடுக்கறது வழக்கம். ஆனா, 'ரிலையன்ஸ்’ மாதிரி பெரிய கடைகள்ல இதெல்லாம் இல்ல. பெப்ஸி, கோக்னு எதையாச்சும் கொடுக்கறாங்க. நாக்கு 'நமநம'னு அரிக்குது. கடலைமிட்டாய், தேன் மிட்டாய், இலந்தைப்பழ மிட்டாய், நாட்டுச்சர்க்கரை, நல்ல பனங்கற்கண்டு எதுவும் பெரிய கடைகள்ல கிடைக்கறதில்லை. நம்ம ஊர் வியாபாரிங்க பெரிய கடை நடத்தியே இந்த லட்சணம்னா, வெளிநாட்டுக்காரங்க கடை போட்டா விளங்குமா? படிப்படியா வெளிநாட்டு உணவுப் பொருட்கள், வாசனைப் பொருட்களை வாங்க வேண்டிய நிலையை கொண்டு வர்றதோட, உள்ளூர் உற்பத்திப் பொருட்களை அழிச்சேபுடுவாங்க. அதனால அந்நிய நேரடி முதலீட்டை நான் கடுமையா எதிர்க்கிறேன்.''

வால்மார்ட் வரவே கூடாது !

ராதா (வங்கி ஊழியர், சென்னை): ''வால்மார்ட் வந்தா, அவன் சொல்லும் விலைக்குதான் நாம பொருட்கள் வாங்க முடியும். அங்க பேரம்ங்கற பேச்சுக்கே இடம் கிடையாது. இப்ப எங்க வீட்டுகிட்ட வரும் காய்கறி வியாபாரிகிட்ட, 'கொஞ்சம் விலையை கம்மி பண்ணி தா’னு சொன்னா, 'நம்ம அம்மாவாச்சே'னு ரெண்டு ரூபா குறைச்சுக் கொடுப்பார். அதுல பாசமும் கலந்து இருக்கும். இதெல்லாம் சர்வாதிகாரமா நம்ம நாட்டுல நுழைய பார்க்கற வால்மார்ட்கிட்ட நடக்குமா? வால்மார்ட் வரவே கூடாது. மீறி வந்தா... அந்த கடையில் எந்தப் பொருளும் வாங்கமாட்டோம்.''

வால்மார்ட் வரவே கூடாது !
வால்மார்ட் வரவே கூடாது !

கல்யாணி (இல்லத்தரசி, மந்தைவெளி): ''பெண்கள்தான் காய்கறி, மளிகைப் பொருட்கள்னு வீட்டுக்குத் தேவையானதையெல்லாம் வாங்குறோம். அந்த வகையில 'வால்மார்ட்’டை உறுதியா எதிர்க்கிறோம். 'அவள் விகடன்’ வணிகர்களுக்காகவும் நம்ம தேசத்துக்காகவும், முக்கியமா பெண்களை மனதில் வைத்து எடுக்கும் இந்த சர்வே... ரொம்பவே முக்கியமானது. வெளிநாட்டுக் கம்பெனிகளின் 'பெப்சி, கோக்’ல நச்சுச்தன்மை இருக்கறது சோதனைகள் மூலம் தெரிஞ்ச பிறகும், நம்நாட்டில் அதையெல்லாம் தடை செய்யுற துணிவு இல்லாத நம்ம அரசாங்கத்துகிட்ட நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. போராடித்தான் சாதிக்கணும்!''

ராஜலெட்சுமி (கல்லூரி மாணவி, திருச்சி): ''ஒரு காலத்துல 'இந்தியனாய் இரு, இந்தியப் பொருட்களையே வாங்கு’னு பிரச்சாரம் செய்து, 'வெள்ளையனே வெளியேறு’னு ஆங்கிலேய ஆட்சியாளர்கள் விரட்டிய கட்சி காங்கிரஸ். இன்னிக்கு அதுவே அந்நியப் பொருட்களை வாங்கச் சொல்லுது. சுதேசி கொள்கைக்கு எதிரா சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிச்சிருக்கு. இதனால உள்நாட்டு வணிகர்கள் சிறுகச் சிறுக தங்களோட வர்த்தகத்தை இழந்துடுவாங்க. இந்தியா மறுபடியும் வெளிநாட்டுக்காரங்ககிட்ட அடிமையாகிடும். இதை அனுமதிக்கவே முடியாது.''

சரண்யா (குடும்பத் தலைவி, திருச்சி): ''வெளிநாட்டு நிறுவனங்களோட பகட்டு விளம்பரங்களுக்கு முன்ன, உள்நாட்டு வியாபாரிங்க தாக்குப்பிடிக்க முடியாம தொழிலையே விட்டுட்டு ஓடிடும் நிலைமைதான் உருவாகும். நல்லதோ கெட்டதோ, லாபமோ நஷ்டமோ எதுவா இருந்தாலும் நம்ம நாட்டு வியாபாரிங்களே பார்த்துக்கட்டும். ஏன் அந்நியரை அனுமதிக்கணும்?''

சத்தியகங்கா (குடும்பத் தலைவி, கோவை): ''ரொம்ப வருஷமா இந்த மளிகைக் கடை எனக்கு பரிச்சயம். இங்கதான் பொருட்களை வாங்கறோம். இடையில பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர்ல பொருட்களை வாங்கினேன். அப்ப என் பட்ஜெட் திடீர்னு அதிகமாச்சு. காரணம், அங்க தேவையான

வால்மார்ட் வரவே கூடாது !

பொருட்களைவிட, அறிமுகமாகாத பல பொருட்களையும் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுச்சு. அதனால என்னோட வாழ்க்கை முறை மாற ஆரம்பிச்சது. ஒரு கட்டத்துல இது எனக்கு புரிய ஆரம்பிச்சதும் திரும்பவும் இங்கதான் பொருட்கள வாங்கறோம். இந்த அண்ணன் (மளிகைக் கடைக்காரர்) எங்க குடும்ப நண்பர் மாதிரிதான். அவசரத் தேவைக்கு எப்ப வேணா பொருட்களை வாங்கிக்கலாம். எப்பவும் எங்களுக்கு இந்தக் கடைதான் பெஸ்ட்!''

காயத்ரி (தனியார் நிறுவன ஊழியர், கோவை) : ''இப்ப நான் 10 தேங்காய் வாங்கி னேன். ஒரு தேங்காய் 10 ரூபாய்னு சொன்னார். 10 தேங்காயை எடுத்துட்டு 70 ரூபாய் கொடுத்தேன். 'கட்டாதும்மா. இன்னும் 20 ரூபாய் கொடும்மா’னு சொன்னார். 'அதெல்லாம் இல்லை'னு கூடுதலா 10 ரூபாயை மட்டும் கொடுத்து தேங்காயை வாங்கிட்டேன். விலையை நாம பேசி வாங்கற உரிமை இங்கதான் கிடைக் கும். காய்கறி மார்க்கெட்டுல, சில்லறை வியாபாரிகள்கிட்டத்தான் காய்கறிகளை வாங்குவேன். அதேமாதிரி மளிகை பொருட்களை நம்ம அண்ணாச்சி கடையிலதான் வாங்குவேன். இதுதான் என்னிக்குமே நமக்கும் நல்லது... நாட்டுக்கும் நல்லது!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism