ரெகுலர்
Published:Updated:

'ஃபேஸ்புக் டு பேங்க் பாஸ் புக்'!

தொகுப்பு: சா.வடிவரசு

##~##

''காதலர் தினத்துக்கு காமெடியன்கிட்ட பேட்டி வாங்கற உங்க புதுமையான ஐடியாவை நான் பாராட்டுறேன். காதலர்களை சந்தோஷப்படுத்துறேனோ இல்லையோ, காதலிக்காதவங்களை நிச்சயம் சிரிக்க வைக்கும் என்னோட இந்த லவ் டிப்ஸ்!''

- கலகலனு ஆரம்பிச்சார் நடிகர் சூரி!  

''வேலன்டைன்ஸ் டேவுக்கு ரோஸ், கிரீட்டிங், ஆட்டின் வெச்ச டாலர் (கவரிங்தான்) வாங்கிக் கொடுக்கறது எல்லாம் வேஸ்ட். அதுக்குப் பதிலா அரிசி, பருப்புனு மளிகை சாமான்களைக் வாங்கி கொடுத்தா... உங்க பேரைச் சொல்லி குடும்பமே சந்தோஷமா பொங்கிச் சாப்பிடுமில்ல (எப்பூடி என் யோசனை!)

பாய்ஸ் எல்லாம் வேலன்டைன்ஸ் டே அன்னிக்கு ஒரு சபதம் எடுங்க. உங்க காதலியை மட்டும் லவ் பண்ணாம... அவங்க அம்மா, அப்பா, தம்பி, தங்கச்சினு குடும்பத்தையே லவ் பண்ண ஆரம்பிங்க. லைஃப் நல்லா இருக்கும். (குறிப்பு: இதுல 'தங்கச்சி’யை மட்டும் அண்டர்லைன் பண்ணி, தனி ரூட் போட்டுடாதீங்க பாய்ஸ்!)

சாதாரணமாவே பைக்ல போறப்போ சுவர்ல ஒட்டின பல்லி மாதிரிதான் போவீங்க. பிப்ரவரி 14 கேட்கணுமா..? தோள்ல ஏறி உட்கார்ந்தாலும் உட்காருவீங்க. ஆனா, ரோட்ல உங்களைத் தவிரவும் பொதுஜனம்ஸ், குறிப்பா குழந்தைகள் எல்லாம் போவாங்கனு கருணை கூர்ந்து மனசுல வெச்சுக்கோங்க.

'ஃபேஸ்புக் டு பேங்க் பாஸ் புக்'!

செல்போனை சித்ரவதை பண்ணுறதுல காதலர்கள்தான் முதல் குற்றவாளிகள். காலையிலயே மொபைலை காதுல வெச்சுட்டு, 'எழுந்துட்டியா’, 'பல்லு வெளக்கிட்டியா’, 'குளிச்சிட்டியா’னு சரித்திர முக்கியம் வாய்ந்த கேள்விகளைக் கேட்கறத முதல்ல நிறுத்தணும். இதெல் லாம் உங்க செல்லம் மட்டுமில்ல, உலகத்துல இருக்குற எல்லாரும் பண்றதுதான்.

லவ் பண்ணினா... லட்சாதிபதிகூட பிச்சாதிபதி ஆயிடுவான்னு சக்கலோவா என்கிற அறிஞர் (?) சொல்லிஇருக்காரு. அதனால, காதலர் தினத்தன்னிக்கு ரெஸ்டாரன்ட், சினிமா தியேட்டர்னு பணத்தை பறக்க விடாம, வீட்டில் இருந்து கிளம்பும்போதே தயிர் சாதம், புளி சாதம்னு கட்டிட்டு போனா... பர்ஸுக்கு நல்லது.

'ஃபேஸ்புக் டு பேங்க் பாஸ் புக்'!

லவ் பண்ணுறதுக்காகவே அரசாங்கம் பார்க், பீச்சுனு அட்டு ஏரியாக்களை அலாட் பண்ணியிருக்கு. கோயில், பஸ் ஸ்டாப், ஆபீஸ்ல எல்லாம் கொஞ்சம் லவ்வ லாக் பண்ணி, சுற்றுப்புறச் சூழலைக் காப்பாத்துங்க.

பொது இடத்துல ரொம்ப தீவிரமா லவ் பண்ணாதீங்க. அப்புறம் இன்டர்நெட்ல உங்க படம் வசூலைக் குவிச்சுடும்... பீ கேர்ஃபுல்!

'பீ மை வேலன்டைன் ஃபார் எவர்’னு லவ்வர்கிட்ட நெஞ்சுருகி சொல்லும்போது, போன வருஷம் காதலர் தினத்தன்னிக்கு யார்கூட இருந்தோம்னு கொஞ்சம் நினைச்சுப் பார்த்து, அந்த ஆத்மா நல்லா இருக்கணும்னு வேண்டிகிட்டா... நீங்க 'ரொம்ப நல்லவங்க’ ஆயிடுவீங்க!

இதுக்கு மேல லவ்வர்ஸை வெறியேத்த விரும்பல. ஃபேஸ்புக்ல அக்கவுன்ட்ல தொடங்கி, பேங்க் அக்கவுன்ட்ல முடிஞ்சுடாம... கணவன் - மனைவியா அடுத்த வருஷம் 'வேலன்டைன்ஸ் டே' கொண்டாடுங்க. காதலர்களுக்கு என் இனிய வேலன்டைன்ஸ் டே வாழ்த்துக்கள்!''