ரெகுலர்
Published:Updated:

குட்டீஸ் குறும்பு !

ஓவியங்கள்: ஹரன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

குட்டீஸ் குறும்பு !

150

 எக்ஸாம் 'போஸ்ட்மார்ட்டம்’ ஆயிடுச்சே!

##~##

எங்கள் வீட்டில் டியூஷன் நடந்து கொண்டு இருந்தது. அவசரமாக ஓடி வந்த குறும்புக்கார ஸ்ரீராம், ''மேடம் ஒரு குட் நியூஸ். நாளைக்கு எப்ப வேணும்னாலும் டியூஷன் வச்சுக்கலாம். ஏன்னா எக்ஸாம் 'போஸ்ட்மார்ட்டம்’ ஆயிடிச்சு!'' என்று சந்தோஷமாக, சத்தமாகச் சொல்ல, நானும் மற்ற பெரிய கிளாஸ் மாணவர்களும் அடக்க முடியாமல் நெடுநேரம் சிரித்தோம். விஷயம் புரியாத அவன், எல்லோரும் தன்னைக் கேலி செய்கிறார்கள் என்று வெட்கப்பட, பிறகு 'போஸ்ட்மார்ட்டம்’ - 'போர்ஸ்ட்போன்’ இரண்டுக்கும் வித்தியாசம் சொல்லி, அவனையும் சிரிக்க வைத்தேன்!

குட்டீஸ் குறும்பு !

- காழி.ஆர்.சீதா, சீர்காழி

'மம்மு கொடுத்துட்டு, அப்புறம் பாடு!’

ஒவ்வொரு வருடமும் ராமநவமிக்கு எங்கள் ஊர் கோயிலில் என் கச்சேரி நடக்கும். அந்த வருட கச்சேரியின்போது என் மாமனார், மாமியார், கணவர் என்று அனைவரும் வேறுவேறு வேலைகளில் இருந்ததால், என் ஐந்து வயதுப் பையன் அபிஷேக்கையும் அழைத்துக் கொண்டு சென்றிருந்தேன். அவனை முன் வரிசையில் உட்கார வைத்துவிட்டு மேடை ஏறினேன். 'இந்தப் பாடல் பாடுங்கள்’, 'அந்தப் பாடல் பாடுங்கள்’ என்று சீட்டுகள் வந்துகொண்டே இருந்ததால் நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. வழக்கமாக சீட்டைப் பிரித்துப் படிக்கும் மிருதங்கக்காரர், ஒரு சீட்டைப் படித்தவுடன் விழுந்து விழுந்து சிரிக்க, எனக்கும் மேடையில் இருந்த மற்றவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. பக்கத்திலிருந்த வயலின்காரார் அதை வாங்கிப் படித்து தானும் சிரித்துவிட்டு, மைக்கில் வாசித்தார்: ''அம்மா... நேக்கு ரொம்ப பசிக்குது. 'மம்மு’ குடுத்துட்டு அப்புறம் வந்து பாடு. அவாள்லாம் உக்காசிண்டு இருப்பா!''

குட்டீஸ் குறும்பு !

- ஒன்றாம் வகுப்பு படிக்கும் என் மகன், எல்லோரும் ஏதேதோ சீட்டு கொடுக்கிறார்கள் என்று, யாரிடமோ பேப்பர், பேனா வாங்கி தானும் ஒரு சீட்டெழுதி அனுப்பியிருக்கிறான்!

அரங்கே சிரிப்பலைதான்!

- ஆர்த்தி சிவகுமார், கிழக்கு தாம்பரம்

இது எல்.பி. ரோடு... அது தார் ரோடு

குட்டீஸ் குறும்பு !

தோழியும் நானும் அடிக்கடி காரில் ஷாப்பிங், சினிமா என வெளியில் செல்வதுண்டு. அப்படி செல்லும்போது சிலசமயம் தோழியின் ஏழு வயது பேரன் கௌதமை அழைத்துச் செல்வோம். அப்போது சாலைகளின் பெயரை அவன் தெரிந்து கொள்வதற்காக. 'இது எல்.பி.ரோடு... க்ரீன்வேஸ் ரோடு... அண்ணா சாலை’ என சொல்லிக் கொடுப்போம். ஒரு தடவை அப்படிச் சென்றபோது, செல்போனில் கேம்ஸ் விளையாடிபடியே வந்தான். திடீரென... ''கவுதம் இங்க பார்... இது என்ன ரோடு...'' என என் தோழி கேட்டாள். அதற்கு அவன் தலையை நிமிர்த்தாமலே ''தார் ரோடு'’ என்றானே பார்க்கலாம். அடக்க முடியாமல் நாங்கள் சிரிக்க... மீண்டும் அவன் ''இது மண் ரோடு இல்லை... தார் ரோடுதானே... நான் சொன்னது சரிதானே'' என்று குறும்புடன் கேட்க... ஒரே ரகளைதான் போங்க!

- ஜெயா மகாதேவன், பாலவாக்கம்