Published:Updated:

ஆறடி இல்லையென்றாலும்...அக்கறை காட்டுங்கள் !

வே. கிருஷ்ணவேணி,படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

ஆறடி இல்லையென்றாலும்...அக்கறை காட்டுங்கள் !

வே. கிருஷ்ணவேணி,படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
##~##

'பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா... இல்லையா..?' என்று வாதம் எழுந்த நக்கீரர் காலத்துக்கு முந்தைய காலத்தில்இருந்தே... நம் பெண் களின் கூந்தல் பராமரிப்பு, படுஅக்கறையான விஷயமே! அதிலும், இந்த அவசர யுகத்தில், கிடைக்கும் கொஞ்ச நஞ்ச இடைவெளியிலும் கூந்தலைப் பராமரிக்க பெண்கள் காட்டும் அக்கறை... ஆச்சர்யமே!

இதைப்பற்றி பேசும் சென்னை 'நேச்சுரல்ஸ்’-ன் சீனியர் ஸ்டைலிஸ்ட் சங்கர், ''ஆறடிப் பின்னலுக்கு ஆசை இருந்தாலும்... இன்றைய பணிச்சூழல், காலத்தோட வேகம் இதெல்லாம், அந்த ஆசைக்கு தடைபோடுது. காலத்துக்கு ஏற்ப கேசப் பராமரிப்பை மாற்றி அமைக்க வேண்டிஇருக்கு. அதுக்காக, 'நமக்குத்தான் ஆறடி இல்லையே’ என்று கூந்தல் பராமரிப்பை, கை விட்டுவிடக் கூடாது. அது, உடல் நலத்துக்கு உபத்திரவத்தைக் கொண்டு வந்து சேர்க்கக்கூடும்'' என்று எதார்த்தத்தைத் தொட்டுக் காட்டிவிட்டு, சில முக்கிய ஹேர் ஸ்டைல்களை, மாடல்களுக்கு நேரடியாகவே செய்து காட்டினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆறடி இல்லையென்றாலும்...அக்கறை காட்டுங்கள் !

''மாடல் திஷாவுக்கு நீளமான ஸ்ட்ரெய்ட் ஹேர். அதை எப்பவுமே தொங்கவிடாம ஒரு மாறுதலுக்கு, கர்ல் செய்து அரேஞ்ச் செய்ற 'அப்டூ’ (uஜீபீஷீ) ஹேர் ஸ்டைல் பண்ணலாம். அடுத்து, ஹேர் எக்ஸ்டென்ஷன். கேசத்தில் நேரடியா கலர் செய்தா சிலருக்கு அலர்ஜி ஆகலாம். அதுக்கு மாற்றுதான் இந்த எக்ஸ்டென்ஷன். தேவைப்படும்போது, கலர் செய்த ஆர்டிஃபீஷியல் ஹேரை, ஒரிஜினல் கேசத்துக்குள் சொருகிக்கலாம். ஃபங்ஷன் முடிஞ்சவொடன, அதை ரிமூவ் பண்ணிக்கலாம். திஷாவுக்கு இங்கே செய்திருக்கறது... ஐந்து பின்னல் கொண்ட ஹேர் எக்ஸ்டென்ஷன். கேசத்தின் அடர்த்தி குறைந்த பெண்களும், தங்களோட கேசத்தின் நிறத்துக்கு ஏற்ப இந்த எக்ஸ்டென்ஷன்களை டெம்பரரியா ஃபிட் செய்துக்கலாம்.

மாடல் பத்மாவுக்கு செய்திருக்குற ஹேர் ஸ்டைலோட பேரு... 'டாங்க்ஸ்' (ஜிஷீஸீரீs). அதாவது, அழகழகான கர்ல்ஸ் உருவாக்கறது. அதேபோல, நார்மலான ஃப்ரீ ஃபுளோயிங் ஹேர் ஸ்டைலும் இந்த மாதிரியான முடி உள்ளவங்களுக்கு சூட் ஆகும். இது வேவியாவும், கர்லாவும் இருக்கறதால... அடுத்தவங்களோட கவனம் உங்ககிட்ட திரும்பும், உங்க தன்னம்பிக்கை கூடும்'' என்று நம்பிக்கை கூட்டினார் சங்கர்.

அடுத்து, கேசத்தை சுத்தப்படுத்தும் சூத்திரங்கள் பற்றிப் பேசுகிறார்... 'வீ கேர் ஹேர் க்ளினிக்' தலைவரும் 'சர்ட்டிஃபைடு ட்ரிக்காலஜிஸ்ட்'டுமான பிரபா ரெட்டி.

''வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் தலைக்கு குளிக்க வேண்டியது அவசியம். வெறும் தண்ணீரில் கேசத்தை அலசினா, அழுக்கும் எண்ணெய்ப் பசையும் அப்படியே தங்கிடும்ங்கற தால அதை ஒரு போதும் செய்யக் கூடாது. சிகைக்காய் அல்லது தரமான ஷாம்பு பயன்படுத்தணும். பல ஷாம்புகளில் கேசத்துக்கு கேடு விளைவிக்கக்கூடிய நுரைக்கூறுகள் பயன்படுத்தப்படுது. அதனாலதான் 'தரமான ஷாம்பு’னு அடிக்கோடிட்டு சொல்றேன். ஷாம்பு துகள்கள் தலையில் தங்காதபடி நிறைய தண்ணீர் ஊற்றி அலசணும். அதேபோல, கண்டிஷனர் அப்ளை செய்யும்போதும் முடியில் மட்டுமே அப்ளை செய்யணுமே தவிர, கேசத்தின் வேர்க்கால்களில் வேண்டாம்.

ஈரமில்லாம உலர்த்திய பின்னரே கேசத்தில் பின்னல் போடணும். ஹேர் டிரையரைத் தவிர்க்கலாம். அதிக வெப்பம், புறஊதாக் கதிர்களின் தாக்கம், தலையின் ஈரத்தன்மை குறைவது போன்ற பிரச்னைகளில் இருந்து காப்பாத்திக்க... எண்ணெய் அல்லது வைட்டலைசர்கள் பயன்படுத்தலாம். முளைகட்டிய பயறு வகைகள், பீன்ஸ், பருப்பு, மீன் போன்ற புரதச் சத்துமிக்க உணவுகள் கேச வளர்ச்சிக்கும் மினுமினுப்புக்கும் கை கொடுக்கும். ஊட்டச்சத்து குறைபாட்டால முடிகொட்டுற பிரச்னை ஏற்படும்போது, டயட்டீஷியன் ஆலோசனையோட டயட்ரி சப்ளிமென்ட்ஸ் எடுத்துக்கறது நல்லது'' என்று டிப்ஸ்களை தந்தார் பிரபா ரெட்டி.

ஆறடி இல்லையென்றாலும்...அக்கறை காட்டுங்கள் !

'முடி உதிர்வதைத் தடுப்பது எப்படி?' என்கிற சப்ஜெக்டை கையில் எடுத்த 'அஸ்வினி ஹேர் ஆயில்' சென்னை ஏரியா சேல்ஸ் மேனேஜர் கோபி ஸ்ரீனிவாசன், ''கர்ப்பகாலம், மகப்பேறு காலம், பொடுகு, ஹார்மோன் வேறுபாடுகள், மனஅழுத்தம், ஊட்டச்சத்து இன்மை, கெமிக்கல் புராடக்ட்களின் பயன்பாடுகள், காற்று மாசுபடுவது, தண்ணீர் மாற்றம்... இதெல்லாம் தலைமுடி உதிர்வதற்கான மிகமுக்கியக் காரணங்கள். இதில் தனக்கு எந்தக் காரணத்தால் முடிகொட்டுகிறது என்பதை அறிந்து, ஒருவர் அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். சூரியஒளி முடி வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் என்பதால், அதிகாலை வெயிலை சுமார் 15 நிமிடங்கள் உள்வாங்குவது நல்லது. பொடுகு இருப்பவர்களுக்கு, அந்த பூஞ்சைத் தொற்று முகத்தில் பருக்கள் தோன்றவும் காரணமாகலாம் கவனம்'' என்று அக்கறையோடு சொன்னார்.

''சரி, கேசப் பராமரிப்பு புராடக்ட்களைத் தேர்வு செய்வதற்கான டிப்ஸ்கள்?''

''இதோ நான் தருகிறேன்'' என்றபடி முன் வந்த 'பஞ்சாரஸ் ஹெர்பல்ஸ்' தமிழ்நாடு மண்டல அதிகாரி பிரகாஷ், ''விளம்பரம் பார்த்தோ, தோழி, தெரிஞ்சவங்க சொன்னாங்க என்பதற்காகவோ ஷாம்பு, தலைக்கு தேய்க்கிற எண்ணெய் போன்றவற்றை வாங்கக் கூடாது. உங்க கேசத்தின் தேவை என்னனு முதல்ல முடிவு பண்ணணும். முடிகொட்டுறது நிற்கணுமா, இளநரை மறையணுமா, பொடுகை ஒழிக்கணுமானு இதில் எது உங்களோட முதல் தேவைனு முடிவு பண்ணி, அதுக்கு முக்கியத்துவம் தர்ற, நம்பிக்கையான பிராண்ட் பொருட்களை வாங்கணும். அதேபோல, ஒரு புராடக்ட் பயன்படுத்திட்டு இருக்கும்போதே மதில் மேல் பூனையா அடுத்த புராடக்ட்டுக்கு தாவக் கூடாது. அப்படி திடீர்னு புராடக்ட் மாற்றும்           போது, எதிர்விளைவுகள் ஏற்படும்'' என்று உருப்படியான உஷார் டிப்ஸ்களை தந்தார் பிரகாஷ்!

அழகு... உங்கள் அக்கறையில்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism