ரெகுலர்
Published:Updated:

பாட்டி காலம் தொட்டு தொடரும் பியூட்டி !

ம.மோகன் படம்: எம்.உசேன்

##~##

அழகு குறித்த விழிப்பு உணர்வு, இப்போது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு, அதிகபட்சம் முக பவுடர்தான். அந்த 'சிங்கிள் புராடக்ட் யூஸேஜ்’ இன்று பல்கிப் பெருகி, விதம்விதமான புராடக்ட்களாக விரிந்திருக்கின்றன.

சிறுநகரத்து கல்லூரிப் பெண்கள்கூட ஃபவுண்டேஷன், காம்பாக்ட் பவுடர், ஐ லைனர், லிப் க்ளாஸ் என்று கலக்குகிறார்கள். இன்று நம்பர் 1 லாபகரமான தொழிலாகக் கொண்டாடப்படும் பியூட்டி பார்லர்களே, பெண்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு சாட்சி!

எனவே, 'பியூட்டி டிப்ஸ்’ கேட்க எப்போதும் ஆர்வமாக இருக்கும் பெண்களுக்காக... முகம் மற்றும் சருமம் பற்றி, அந்தத் துறை சார்ந்த நிபுணர்கள் இங்கே பேசுகிறார்கள்.

''நம்ம நாட்டு பெண்களோட பியூட்டி அவேர்னஸ், வெளிநாட்டு புராடக்ட்களைப் பார்த்துட்டு வந்த விஷயம் இல்லை. நூற்றுக்கணக்கான வருஷங்களுக்கு முன்பிருந்தே... மஞ்சள், சந் தனம்னு நம்மோட பாட்டி வைத்தியங் கள்லயே அழகுக் குறிப்பு விஷயங்கள் இருக்கு. இப்ப நம்மோட ஹெர்பல் புராடக்ட்கள், வெளிநாடுகள்லயும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கு'' என்று ஆரம்பித்த சென்னை, 'கோகுல் சாண்டல்' நிறுவனத்தின் இயக்குநர் அர்ஜுன் சந்தானம், முகப்பொலிவுக் கான ஸ்டெப்ஸ்களைப் பேசினார்.

பாட்டி காலம் தொட்டு தொடரும் பியூட்டி !

க்ளியர்... க்ளென்சிங்!

''ஃபேஷியல் கேர்ல முதல் ஸ்டெப், கிளென்சிங்... முகத்தில் உள்ள கசடுகளை நீக்கறது. காலை, இரவு ரெண்டு நேரங்களிலுமே முகத்தில் நிறைய ஆயில் இருக்கும். வெளியில் அலைவது, வியர்வை எல்லாம் பகல்பொழுதில் முகத்தைப் பாதிக்கும். நிறைய பேர் வெளியில போய் வந்ததும் சோப்பு போட்டு முகத்தைக் கழுவினால், முகம் ஃப்ரெஷ் ஆக மாறிவிடும்னு நினைக்கிறாங்க. ஆனா, சோப்பு அழுக்கை எடுக்குமே தவிர, முகத்துல இருக்கற நல்ல ஆயில், கெட்ட ஆயில்னு பிரித்து பார்க்குற குணம் அதுக்கு இல்லை. நல்ல ஆயிலையும் சேர்த்து வெளியேற்றி, முகத்தை டிரை ஆக்கிடும். அதுக்காகத்தான் க்ளென்சிங் ஃபேஸ் வாஷ். இது, அழுக்குகளை மட்டும் வெளியேற்றும், சருமத்துக்குத் தேவையான ஈரப்பதத்தை விட்டு வைக்கும். ஸ்க்ரப் உள்ள ஃபேஸ் வாஷ§ம் பயன்படுத்தலாம்.

ரத்த ஓட்டத்துக்கு... டோனிங்!

முகத்துல ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து, அழுக்குகள் உள்ளே போகாதவாறு முகத்துவாரங்களை மூடச்செய்து, முகப்பொலிவை கூட்டும் மந்திரம்தான் டோனிங். ரோஸ் வாட்டர், ஒரு சிறந்த, எளிய டோனர். ரோஸ் வாட்டர்ல நனைத்த பஞ்சை வைத்து கீழிருந்து மேலா முகத்தை அழுத்தித் துடைங்க. கன்னம், நெற்றி, கழுத்துனு எல்லா இடங்கள்லயும் ஜென்டில் பிரஷர் கொடுத்து துடைங்க. தினமும் இப்படி செய்தால், முகப்பொலிவு 'ஆஹா’தான்!

பாட்டி காலம் தொட்டு தொடரும் பியூட்டி !

ஈரப்பதம் தரும் மாய்ஸ்ச்சரைஸிங்!

முகத்துல தேவையான அளவு எண்ணெய்ப் பதத்தை தக்கவைக்க, மாய்ஸ்ச்சரைஸர் அவசியம். பொதுவா நம்ம சருமத்தில் சுரக்கும் சீபம், பருவ நிலை மாற்றத்தாலேயோ, வயதாகும் காரணத்தாலேயோ குறையும்போது, சருமம் வறண்டு போகலாம். மாய்ஸ்ச்சரைஸர் உபயோகிக்கும்போது அந்த ஈரப்பதம் தக்கவைக்கப்படும். சருமமும் மிருதுவாகும்'' என்று முகப்பொலிவுக்கான விஷயங்களை அர்ஜுன் சந்தானம் சொல்ல...

உடல் பொலிவுக்கான விஷயங்கள் பேசினார் சென்னை, நேச்சர்’ஸ் எசன்ஸ் நிறுவனத்தின் ரீஜினல் சேல்ஸ் மேனேஜர் சந்தோஷ்குமார்.

டி.எஃப்.எம். ஜாக்கிரதை!

''பாடி கேர் பற்றி பேசும்போது முதல்ல சோப் பற்றி சொல்லியாகணும். பொதுவா, டி.எஃப்.எம் (ஜிஷீtணீறீ திணீttஹ் விணீttமீக்ஷீ) குறைவா இருக்கற சோப்தான் சருமத்துக்கு நல்லது. குளியலுக்கு அப்புறம், பாடி லோஷன் அப்ளை செய்துக்கலாம். வெயில்ல போகும்போது, சன்ஸ்கிரீன் லோஷன், மாய்ஸ்ச்சரைஸர் நிச்சயமா அப்ளை பண்ணிக்கணும். நக அழகுக்கு, காட்டன் துணியில கொஞ்சம் ஆலிவ் ஆயிலை எடுத்து, நகத்து மேல தினமும் மசாஜ் பண்ணிக்கலாம். நகம் பிங்க் கலர்ல ஒளிரும். பாதங்களுக்கு பெடிக்யூர் அவசியம்'' என்று நுட்பமாக எடுத்து வைத்த சந்தோஷ்குமார்,

''என்னதான் இப்படிப்பட்ட வெளி ஊட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத் தாலும்... சாப்பிடற உணவுகள் ரொம்ப முக்கியம். தண்ணீர், பழங்கள், காய்கறிகள் அதிகம் எடுத்துக்கறது, சருமத்தின் அழகைக் கூட்டும். பொதுவா திருமணத்துக்கு அப்புறம் பெண்கள் அழகு விஷயத்தில் அக்கறையை கைவிட்டுடறாங்க. கிரீம், பவுடர்னு மெனக்கெடலைனாலும், பழங்கள், ஆல்மண்ட், பயறு வகைகள்னு உணவின் மூலமா சருமத்துக்கும் கேசத்துக்கும் ஊட்டம் கொடுக்கலாம்!'' என்று அழகுக்கான அக்கறையை வெளிப்படுத்தினார்!