Published:Updated:

'சி.ஏ.' பெண்ணை சீராட்டும் சொந்த கிராமம்!

'சி.ஏ.' பெண்ணை சீராட்டும் சொந்த கிராமம்!

'சி.ஏ.' பெண்ணை சீராட்டும் சொந்த கிராமம்!

'சி.ஏ.' பெண்ணை சீராட்டும் சொந்த கிராமம்!

Published:Updated:
##~##

வீதி முழுவதும் தோரணங்கள், சுற்றுவட்டார கிராமங்கள் வரை கேட்கும் ஒலிபெருக்கிகளின் உற்சாகம், தெரு முழுக்க திரண்டிருக்கும் மக்கள், ஜோடிக்கப்பட்ட வரவேற்பு வாகனம், பள்ளி மைதானத்தில் பாராட்டு விழாவுக்கான நீண்டபந்தல் என... விழுப்புரம் மாவட்டத்தில்  இருக்கும் பெரியகொள்ளியூர் கிராமமே அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. அத்தனை ஏற்பாடுகளும்... ஊர், மாநிலம் கடந்து அகில இந்திய அளவில் 'சார்ட்டர்ட் அக்கவுன்ட்டன்ட்’ தேர்வில் முதலிடம் பிடித்திருக்கும் அந்தக் கிராமத்தின் மகளான பிரேமாவின் பாராட்டு விழாவுக்குதான்!

 ஊர் எல்லையில் இருந்து, ஜோடிக்கப்பட்ட வரவேற்பு வாகனத்தில் பிரேமா மற்றும் அவருடைய பெற்றோரை அமரவைத்து, தவில், நாதஸ்வரம், டிரம்ஸ் என இசை முழங்க... பலவிதமான வேட்டுக்களும் முழங்க, சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த அரசினர் உயர் நிலைப்பள்ளி மைதானத்துக்கு அழைத்து வந்தனர் மக்கள். திரண்டிருந்த மக்கள் கூட்டத்தால் அது மாநாடாகவே மாறிப்போனது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'சி.ஏ.' பெண்ணை சீராட்டும் சொந்த கிராமம்!

பெரியகொள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்த ராணி, ''பிரேமா மூலமா இன்னிக்கு உலக அளவுல எங்க ஊருக்கு முகவரி கிடைச்சுருக்கு. அதனாலதான், பிரேமாவுக்கு ஊர்ல நடக்கற எல்லா திருவிழாவையும்விட, பிரமாண்ட விழாவா பாராட்டு விழா நடத்த முடிவெடுத்தோம்!'' என்று சொல்லி, தூரத்தில் வாகனத்தில் வந்த பிரேமாவுக்கு இரண்டு கைகளால் திருஷ்டி எடுத்து நெட்டி முறித்தார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசிய, ஊரக தொழில்துறை அமைச்சர் ப.மோகன், ''ஏழை குடும்பத்தில் பிறந்த பிரேமா, நன்றாக படித்து சி.ஏ. தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடிக்க ஊக்கப்படுத்திய அவர் பெற்றோருக்கு என்னுடைய பாராட்டுக்கள். பிரேமாவுக்கு முதல்வர் அம்மா அவர்கள், 10 லட்ச ரூபாயைக் கல்வி வளர்ச்சிக்காக கொடுத்துள்ளார். இந்த மாவட்டத்துக்காரர்கள் என்கிற முறையில் எங்களுடைய நினைவுப் பரிசாக 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில், முதல்வரின் 'பசுமை வீடு’ திட்டத்தின் கீழ் சொந்த ஊரில் வீடு ஒன்றை கட்டித்தர உத்தரவு வழங்கி இருக்கிறேன். அனைத்து மாணவர்களும் விடாமுயற்சியுடன் பிரேமா போன்று பாடுபட்டால்... நிச்சயம் வெற்றி பெறலாம்'' என்று உற்சாகத்தைக் கூட்டினார்.

'சி.ஏ.' பெண்ணை சீராட்டும் சொந்த கிராமம்!

மக்கள் சார்பில் வழங்கப்பட்ட 10 கிராம் தங்க சங்கிலி, நினைவுப் பரிசு ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டு பேசிய பிரேமா, ''பிறந்த மண்ணில் நடக்குற இந்த பாராட்டுவிழா... எனக்கு ரொம்ப நெருக்கமா, நெகிழ்ச்சியா இருக்கு. ஆசிரியர்கள், பெற்றோர்கள், உறவினர்கள்னு எல்லாரும் உறுதுணையா இருந்தாங்க. அதனாலதான் என்னால சாதிக்க முடிஞ்சுது. ஏழையா இருந்தாலும், மிடில் கிளாஸா இருந்தாலும், சாதிக்க வேண்டிய துறையில விருப்பம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை இந்த மூணும் இருந்தா... கடுமையான உழைப்பின் மூலமா... வெற்றி நிச்சயம்!'' என்று தன் அனுபவத்தையே பாடமாகச் சொன்ன பிரேமா,

''இந்த பகுதியில பலர், பெண் பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாம இருக்கறதா சொல்றாங்க. தயவு செய்து பள்ளிக்கூடத்துக்கு அனுப்புங்க.

எல்லாரும் இன்ஜீனியர், டாக்டர் படிப்பைதான் முக்கியமானதா நினைக்கறாங்க. ஆனா... வணிகவியல் சார்ந்த சி.ஏ, சி.எஸ் மாதிரியான படிப்புகளை படிக்கறவங்களுக்கு அதிகமான வேலைவாய்ப்பு இருக்கு.

நம்ம கிராமத்துல இன்னும் நிறைய பாராட்டு விழாக்கள் நடக்கணும். ஸ்டேட், நேஷனல் ரேங்க் வாங்கப்போற தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் பாராட்டுகள்!'' என்ற பிரேமாவின் வார்த்தைகள், அக்கிராமத்துப் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவர் மனதிலும் புது நம்பிக்கையைப் பாய்ச்சியது!

- காசி.வேம்பையன் படங்கள்: தே.சிலம்பரசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism