Published:Updated:

50 ரூபாயிலும் செய்யலாம்... அழகு நகைகள்!

50 ரூபாயிலும் செய்யலாம்... அழகு நகைகள்!

50 ரூபாயிலும் செய்யலாம்... அழகு நகைகள்!

50 ரூபாயிலும் செய்யலாம்... அழகு நகைகள்!

Published:Updated:
##~##

''மதுரை மட்டும்தான் குலுங்குமா..? கோயம்புத்தூரும் குலுங்குமுங்கோ!'' என சொல்லாமல் சொல்லி, அசத்திவிட்டார்கள் கோவை வாசகிகள். ஆம், பிப்ரவரி 10 ஞாயிறு அன்று, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குமரன் திருமண மண்டபத்தில் 'அவள் விகடன்' மற்றும் திருச்சி ஏ.எம்.ஃபேன்ஸி இணைந்து நடத்திய 'நீங்களும் தொழிலதிபர் ஆகலாம்' பயிற்சி முகாமில் கலந்துகொள்வதற்காகக் கூடிய கூட்டத்தைப் பார்த்து அசந்தே போனோம்.

 'காலை 9.30 மணிக்கு பயிற்சி தொடங்கும்' என அறிவிப்பு செய்திருந்தபோதும், 8 மணி முதலே மண்டபத்தில் குவியத் தொடங்கிவிட்டனர் வாசகிகள். 500 வாசகிகள் முன்பதிவு செய்திருந்த நிலையில்... கிட்டத்தட்ட 800-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்துவிட, முன்பதிவு செய்யாத வாசகிகளும் இடம்பிடிக்க போட்டியிட... முன்பதிவு செய் திருந்தும், தாமதமாக வந்த சிலருக்கு இடம் கிடைக்காமல் போனது (அடுத்தடுத்த பயிற்சிகளின்போது முன்பதிவு செய்திருக்கும் வாசகிகள் குறித்த நேரத்துக்கு முன்னதாகவே வந்துவிடுவது நல்லது).

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

50 ரூபாயிலும் செய்யலாம்... அழகு நகைகள்!

பயிற்சிக்கான அனுமதிக் கட்டணமாக ரூபாய் 100 பெறப்பட்டு, ரூபாய் 160 மதிப்பிலான நகை செய்யும் பயிற்சி 'கிட்’ வழங்கப்பட்டது. கூடுதலாக வந்துவிட்ட வாசகிகளில் பலர், ''எங்களுக்கு 'கிட்’  இல்லைனாலும் பரவாயில்லை, உட்கார்ந்து பயிற்சியை பார்த்துட்டுப் போறோம்'’ என ஆர்வம் காட்ட, நுழைவுக் கட்டணம் இல்லாமல் அவர்களும் அனுமதிக்கப்பட்டனர். மொத்தம் 650 வாசகிகள் குழுமியிருக்க, பயிற்சி துவங்கியது.

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு புது வகை நகையை செய்யும் முறையை கற்றுக்கொடுக்கும் ஏ.எம். ஃபேன்ஸி நிறுவனத்தினர்... கோயம்புத்தூரில், 'சிங்கிள் ஸ்டோன் வித் ஸ்பிரிங்’ என்கிற மாடல் நகையைத் தயாரிக்கும் முறையைப் பற்றி பயிற்சியளித்தார்கள். நூல், கயிறு, கம்பி என எதுவும் இல்லாமல்... ஸ்பிரிங்கை பயன்படுத்தி மாலை செய்யும் இந்த டெக்னிக், வாசகிகளிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. இதைத் தயாரிக்க 30 முதல் 50 ரூபாய் முதலீடு இருந்தாலே போதுமானது. 110 முதல் 150 வரை ரூபாய் வரை விற்பனை செய்யலாம். அதேபோல 'த்ரீ கார்னர் ஸ்டோன் மாலை’ என்கிற டிசைன் மாலையை செய்யும் முறையும் கற்றுக்கொடுக்கப்பட்டது.

50 ரூபாயிலும் செய்யலாம்... அழகு நகைகள்!

பயிற்சியின்போது பேசிய ஏ.எம். ஃபேன்ஸி நிறுவன உரிமையாளர் அப்துல் அமீது, ''பெண்களிடம் இயற்கையாகவே கலை உணர்வு அதிகமாக இருக்கிறது. அதை மெருகேற்றி வியாபார ரீதியாக பயன் படுத்தும்போது... பொருளாதார ரீதியாக வெற்றிபெற முடியும். அதைத்தான் இந்த பயிற்சியில் சொல்லித் தருகிறோம். வீட்டை விட்டு வெளியே வேலைக்கு போக முடியாத சூழலில் உள்ள பெண்களும் இந்தத் தொழிலைத் தெரிந்துகொண்டால்... வீட்டில் இருந்தே வருமானம் பார்க்க முடியும். ஃபேன்ஸி நகைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆர்வமும், கற்பனைத் திறனும், சில நூறு ரூபாய் முதலீடும் இருந்தாலே இந்தத் துறையில் சாதிக்கலாம்'' என்று உற்சாகப்படுத்தினார்.

''இந்தப் பயிற்சி எனக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு. இனி, என் குழந்தைகளுக்குத் தேவையான ஃபேன்ஸி நகைகளை நானே தயாரிக்கப் போறேன். அக்கம்பக்கத்துல கேக்குறவங்களுக்கும் செஞ்சு கொடுத்தாலே இது ஒரு வருமான வாய்ப்பா இருக்கும். இப்படி ஒரு பயிற்சியை கொடுத்த அவள் விகடனுக்கு... கோவை வாசகிகள் சார்பா நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன்!'' என ஒட்டுமொத்த வாசகிகளின் பிரதிநிதியாகப் பேசினார் பாப்பநாயக்கம்பாளையம் வாசகி சந்திராதேவி.

''என் வீட்டுக்காரரும் அவள் விகடன் படிப்பாரு. 'அவள்’ல கோயம்புத்தூர்ல பயிற்சி இருக்குனு விளம்பரம் வந்ததிலிருந்து, 'நீ நிச்சயம் இந்த பயிற்சியில கலந்துக்கணும்’னு சொல்லி அவரே என் பெயரை புக் பண்ணி அனுப்பி வெச்சாரு. நம்மால பாசி, மாலை எல்லாம் செய்ய முடியுமானு அரை மனசோடதான் பயிற்சிக்கு வந்தேன். 'உங்களால நிச்சயம் முடியும்’னு இந்தப் பயிற்சி எனக்குள்ள ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கு. இதுக்குக் காரணமான என் கணவருக்கு... அவள் விகடன் மூலமா நன்றியை சொல்லிக்கிறேன்!'' என நெகிழ்ந்தார் கோவை வாசகி ஜோதிமணி.

நிறைவாக... பயிற்சியில் தாங்கள் செய்த நகைகளை கழுத்தில் அணிந்தபடி பெருமையுடன் நடை போட்டனர் நாளைய தொழிலதிபர்கள்!

- ஆர்.குமரேசன், படங்கள்: தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism