Published:Updated:

முத்துக்கள் பத்து!

தொகுப்பு: லதானந்த்

முத்துக்கள் பத்து!

தொகுப்பு: லதானந்த்

Published:Updated:
##~##

'கொலம்பஸ்... கொலம்பஸ் விட்டாச்சு லீவு’ என்று பயணம் செல்லும் எதிர்பார்ப்புடன் உள்ளம் துள்ளும் கோடை விடுமுறை தினங்கள் நெருங்கிக் கொண் டிருக்கின்றன. உங்கள் பயணம் பாதுகாப்பானதாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் அமைய உதவிபுரியும் விதத்தில், பயண டிப்ஸ்கள் சில 'முத்துக்கள் பத்து’ என்ற தலைப்பில் இந்த இதழில் ஆங்காங்கே இடம்பெறுகின்றன.  

செக் லிஸ்ட் அவசியம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முத்துக்கள் பத்து!

பயணங்களின்போது எடுத்துச்செல்ல வேண்டிய பொருட்களின் நிரந்தரமான லிஸ்ட் ஒன்றைத் தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள். பணம், பயணச்சீட்டு, அடையாள அட்டை, ஏ.டி.எம் அட்டை, மருந்துகள், செல்போன் (சார்ஜருடன்), கேமரா (சார்ஜர் மற்றும் பேட்டரிகளுடன்), மேக்கப் சாதனங்கள், துண்டு மற்றும் ஆடைகள்... கர்ச்சீப்பைக் கூட விட்டுவிடாமல்... அனைத்தையும் லிஸ்ட் செய்யுங்கள்.

வீடு மற்றும் பீரோ பூட்டுவது, கேஸ் மற்றும் மின்சாதனங்களை அணைப்பது, தண்ணீர்க் குழாய்களை மூடுவது, வெளியூர் போயிருக்கும்போது தபால்கள் மற்றும் கேஸ் சிலிண்டர் வந்தால் வாங்கி வைக்க அக்கம்பக்கத்தில் சொல்வது போன்றவற்றையும் செக்லிஸ்ட்டில் சேர்த்துவிடுங்கள்.

முத்துக்கள் பத்து!

ஒருமுறை லிஸ்ட் தயாரித்து வைத்துக் கொண்டால், அடுத்தடுத்த பயணங்களின்போது அதையே ஃபாலோ செய்யலாம். தேவைப்பட்டால்... அப்டேட்டும் செய்யலாம்.

விவரம், வரைபடம்  சேகரியுங்கள்!

இணையத்தைப் பயன்படுத்தி நீங்கள் பயணம்/ சுற்றுலா செல்லும் இடத்தைப் பற்றிய விவரங்கள் மற்றும் வரைபடங்களைச் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

ரயில் சிநேகம் தவிருங்கள்!

சுற்றுலா தலங்கள்தான் திருடர்களின் முக்கியக் குறி. எப்போதையும்விடக் கூடுதல் விழிப்புடன்

முத்துக்கள் பத்து!

இருங்கள். முன்பின் தெரியாதவர்களிடம் உங்கள் பிரதாபங்களை அள்ளிவிடாதீர்கள். பயணங்களின்போது, ரயில் சிநேகம் மற்றும் புது நட்புகளைத் தவிருங்கள். போனில் பேசும்போது உங்கள் விவரங்களை அருகில் இருப்பவர்கள் தெரிந்துகொள்ளும்படி உரையாடாதீர்கள்.

 முன்கூட்டியே திட்டமிடுங்கள்!

முத்துக்கள் பத்து!

இப்போதெல்லாம் 120 நாட்களுக்கு முன்னதாகவே ரயிலில் முன்பதிவு செய்யும் வசதி இருக்கிறது. பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்யுங்கள். சாதாரண நாட்களிலேயே நாம் விரும்பும் ஊர்களுக்கு, விரும்பும் தேதியில் முன்பதிவுடன் கூடிய பயண வாய்ப்பு கிடைப்பது கஷ்டமானதாகத்தான் இருக்கிறது. அப்படியிருக்க... கோடை விடுமுறை என்றால் சும்மாவா? எனவே '120 நாட்கள்’ என்பதை மறக்காதீர்கள். முடிந்தால் தங்கும் இடங்களையும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

முத்துக்கள் பத்து!

லக்கேஜுடன் ஒட்டி உறவாடுங்கள்!

முத்துக்கள் பத்து!

பஸ், ரயில் போன்றவற்றுக்காகக் காத்திருக்கும் போதும், நன்கு வெளிச்சமான இடத்தில் காத்திருங்கள். கூடுமானவரை, குடும்பத்தோடு காத்திருப்பவர்களாக பார்த்து, அவர்களின் அருகிலேயே நீங்களும் குடும்பத்தோடு நில்லுங்கள். லக்கேஜுகளுடன் உங்கள் உடலின் கை, கால் போன்ற ஏதாவது ஒரு பகுதி தொட்டுக்கொண்டே இருக்கட்டும். அவசர அவசரமாக ஸ்டேஷனுக்குப் போவது எவ்வளவு தவறோ, அதேபோல ரயில் புறப்படுவதற்கு வெகு நேரம் முன்பே ஸ்டேஷனுக்குச் செல்வதும் நல்லதல்ல. கூட்டமான பகுதிகளில் நடக்கும்போது கவனம் உங்கள் பாக்கெட் மற்றும் பர்ஸின்மீது எப்போதும் இருக்கட்டும். அங்கீகாரமற்ற போர்ட்டர்கள், டாக்ஸி டிரைவர்கள் போன்றவர்களை ஒதுக்குங்கள்.

 பூட்டியே வையுங்கள்!

விடுதிகளில் தங்கும்போது உடமைகளைப் பெட்டிகளில் வைத்துப் பூட்டிவிட்டு வெளியே செல்லுங்கள். அறைகளை நீங்கள் பூட்டினாலும் அவற்றுக்கு இன்னொரு சாவி விடுதிக் கண்காணிப்பாளரிடமும் இருக்கும் என்பதை மறவாதீர்கள். வெளியே செல்லும் முன் நீங்கள் செல்லவிருக்கும் பகுதியின் பாதுகாப்பை விடுதி மேலாளரிடம் கேட்டு உறுதி செய்து கொள்ளுங்கள்.

முத்துக்கள் பத்து!

நகல்கள்  இருக்கட்டும்!

பயணங்களின்போது பாஸ்போர்ட், டிக்கெட், டிராவலர்ஸ் செக் போன்றவற்றின் நகல்களையும் நிறைய வைத்துக் கொள்ளுங்கள். கூட வருபவர் ஒவ்வொருவரிடமும் இந்த நகல்கள் இருப்பது அவசரமான சமயத்தில் உதவக்கூடும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism