Published:Updated:

அவள் சினிமாஸ் - ஆதிபகவன்

அவள் சினிமாஸ் - ஆதிபகவன்

அவள் சினிமாஸ் - ஆதிபகவன்

அவள் சினிமாஸ் - ஆதிபகவன்

Published:Updated:
##~##

ழ்மை நிலையிலிருந்து வளர்ந்து வந்ததால்... பணத்தின் மீது மோகம் ஏற்பட்டு, பணம்தான் எல்லாம் என முடிவு செய்து, தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் போதைப் பொருள் கடத்தல், கொலை போன்றவற்றில் ஈடுபட்டிருப்பவன் ஆதி ('ஜெயம்’ ரவி-1). மும்பை தாதாக்களில் ஒருவனாக அதிரடியாகத் திரிபவன் பகவன் ('ஜெயம்’ ரவி-2), போலீஸின் என்கவுன்ட்டர் லிஸ்ட்டில் இருப்பவன். உருவ ஒற்றுமை என்றாலும், இருவருக்கும் எந்த உறவும் இல்லை.

 பேங்காக் கிளப் ஒன்றில் வேலை செய்யும் கரிஷ்மாவிடம் (நீத்து சந்திரா) காதல் வயப்பட்டு, திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறான் ஆதி. 'என்னுடைய தந்தையை நீ சந்தித்து பேசிய பிறகுதான் திருமணம்' என்று சொல்லி, ஆதியை மும்பைக்கு அழைத்துச் செல்கிறார் கரிஷ்மா. அங்கே சென்ற பிறகுதான் ஆதிக்கு தெரிகிறது... அவள் பகவனைக் காதலிக்கும் விஷயமும்... என்கவுன்ட்டர் லிஸ்ட்டில் இருக்கும் பகவனை காப்பாற்ற தன்னை போட்டுத் தள்ளிவிட்டு, 'இறந்து போனவன் பகவன்' என கதை கட்டத் திட்டமிட்டிருப்பதும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவள் சினிமாஸ் - ஆதிபகவன்

ஆதியும், பகவனும் சந்தித்தார்களா... ஹீரோயின் என்ன ஆனாள்... ஆதி - பகவன் இருவரில் யாருடைய உயிர் பறிபோகிறது?

இதுதான் பரபர க்ளைமேக்ஸ்!

'அட, அமீர் படம்!', 'டிரெயிலர்... பயங்கர வித்தியாசமா இருக்கே!', 'படத்துக்கு அரசியல் ரீதியில எதிர்ப்பு கிளம்புச்சே...' என்று பலவிதமான எதிர்பார்ப்புகளோடு... 'அமீரின் ஆதிபகவன்' படம் வெளியான முதல் நாளே... சென்னை, சிட்டிசென்டர், ஐநாக்ஸ் தியேட்டருக்கு வந்தார்கள் கல்லூரி மாணவிகளான கிரிஸ்டோபெல், ஸ்ருதி, ரம்யா, கல்பனா, ஹம்சவாஹினி, சீமாதேவி! இந்த ஆறுபேரின் 'அதிரி புதிரி' விமர்சனம் இதோ...

கிரிஸ்டோபெல்: ''படத்தில் நடிக்கறதுக்கு அழகு மட்டுமே போதாது... நடிக்கவும் தெரியணும்ங்கிறத நீத்து சந்திராவுக்கு யாராச்சும் முதல்ல எடுத்துச் சொல்லணும். அதேசமயம்... 'ஜெயம்' ரவியை பாராட்டியே தீரணும். எந்த ஒரு லீடிங் ஹீரோவும், இந்த மாதிரி கேரக்டர் ரோல்ஸ்ல நடிக்கறதுக்கு ரொம்பவே தயங்குவாங்க. ஆனா, சவாலோட அதை ஏத்துக்கிட்டு, சபாஷ் வாங்கற அளவுக்கு செய்திருக்காரே! என்ன.... ஸ்டன்ட் ஸீன்களை கொஞ்சம் குறைச்சுருக்கலாம். அதேபோல... கேமரா அண்ட் ஸ்கிரீன் பிளேவுல இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமோனு தோணுது (அமீர் சார், இதையெல்லாம் நாங்களும் சொல்லலாம்தானே?!)''

பஞ்ச்: 'அகில இந்திய ஆதி-பகவன்'னு பேரு வெச்சுருக்கலாம். பின்னே... சகல இந்திய மொழிகளும் படம் முழுக்க சரளமா வந்து குழப்புதே!

ஸ்ருதி: ''படம் முழுக்க விரவிக் கிடக்கும் பேக்கிரவுண்ட் மியூசிக்... செம தூள்! இதுக்காகவே, இ ன்னொரு தடவை பார்க்கலாம். வித்தியாசமான கதையம்சத்தை கையில் எடுத்திருக்கார் அமீர். பகவன் கேரக்டர்ல ஜெயம் ரவி செம அசத்தல்! அதுலயும் பெண்மைத்தன்மை நிறைஞ்ச கேரக்டரை நல்லாவே செய்திருக்கார். ஆனா, 'கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டாரோ?'னும் அப்பப்ப நினைக்கத் தோணுது. சென்டிமென்ட், ஜோக்ஸ்னு எதுவுமே மனசுல நிக்கல.''

பஞ்ச்: ஆதி பகவன்ல... பாதி பகவன் புரியவே இல்லீங்கோ! ('செகண்ட் ஹாஃப்'பைச் சொன்னேன்).

அவள் சினிமாஸ் - ஆதிபகவன்

சீமாதேவி: ''முதல் பாதியில் அழகு பொம்மையாக வந்து போகும் நீத்துவை, இடைவேளைக்குப் பிறகு, பார்க்கவே பிடிக்கவில்லை. பின்னே... சிகரெட், டிரிங்க்ஸ் என்றே திரிந்தால்... எப்படியிருக்கும்? 'ஒருத்தன் கொல்லப்படுறதுக்கு முன்ன, எதுக்காக சாகறோம்ங்கிற உண்மையை தெரிஞ்சுகிட்டு சாகணும். அப்பதான் அவன் ஆத்மா சாந்தியடையும்'கிற உலகமகா தத்துவம்... அடிக்கடி வந்து 'ஐயோ'னு கத்த வைக்குது.''

பஞ்ச்: செம்ம காமெடி பஞ்சம் (ஸ்மார்ட் போன்ல கொஞ்சம் வடிவேலுவோட காமெடி ஸீன்ஸை லோட் பண்ணிட்டு போனா... இடையிடையில அதைப் பார்த்து ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்)!

ரம்யா: ''கதை தலை சுத்த வைக்குதே  அமீர் சார். குறிப்பா, கடைசிக் காட்சியில கரிஷ்மாவையும், பகவனையும் ஆதி கொல்றான். கொஞ்ச நேரத்துல பார்த்தா... பகவனை அந்த இடத்துல காணோம். இப்படி அங்கங்க சொதப்பல்ஸ் இருந்தாலும், படமாக்கின விதத்துல க்ரைம் த்ரில்லரா கலக்கிட்டீங்க. படத்துக்கு 'பேக் போன்'... யுவன் சங்கர் ராஜாவோட மியூஸிக்தான். ஆனா, அதை பேக்கிரவுண்ட்ல மட்டும் விளையாடிட்டு, பாட்டுகள்ல கோட்டை விட்டுட்டாரே!''

பஞ்ச்: கொடி பிடிக்கற அளவுக்கெல்லாம் படத்துல ஒண்ணுமே இல்லையே... பின்னே எதுக்காக பிரளயத்தைக் கிளப்பினாங்க!

ஹம்சவாஹினி: ''நல்ல கதையை கையில் எடுத்திருந்தாலும், 'பருத்திவீரன்’ல காட்டின அக்கறையை இதில் காட்டத் தவறிவிட்டார் அமீர். தங்கை காதலிக்கும் நபர் சரியில்லை என்பதால், 'அவன் தகுந்த ஜோடி இல்லை' எனச் சொல்லி தங்கையின் முன்பாகவே காதலனை ஆதி சுட்டுக்கொல்லும் காட்சி... ரத்தக்களறி! இப்படியெல்லாமா ஒரு அண்ணன் நடந்து கொள்வான்? நீத்துவோட ரோலை கடைசியில் ஆக்ஷனோட காட்டியிருக்கறது... 'பில்லா-2’ படத்து நயன்தாராவை அச்சு அசலா நினைவுபடுத்துது. ''

பஞ்ச்: ஆரம்பத்துல அழுது வடிஞ்சாலும்... கொஞ்ச நேரத்துலயே அசத்தல் ஆரம்பம்!

அவள் சினிமாஸ் - ஆதிபகவன்

கல்பனா: ''ஹீரோ, ஹீரோயின் இருவருக்குமே சரிசமமான இடத்தைக் கொடுத்திருக்கார் அமீர். அந்த வகையில 50% இட ஒதுக்கீட்டைக் கொடுத்ததுக்காக அமீரை பாராட்டித் தள்ளலாம் (நிஜத்துல அடிக்கடி மேடை ஏறி, அரசியல் எல்லாம் பேசிட்டிருக்கறதால, இப்படி ஒரு முடிவெடுத்திருப்பாரோ?!). ஆனா, இந்த க்ளைமேக்ஸ் கம்ப்ளீட் ஆகாம இருக்கறதுதான் யோசிக்க வைக்குது. ஒருவேளை... இது பார்ட் டூ சீஸன்கறதால... இப்படியரு முடிவோ?!

பஞ்ச்: லாஜிக்... லாஜிக்னு ஒண்ணு சொல்வாங்களே அமீர் சார்... அதைப் பத்தி உங்க அபிப்பிராயம்?

- வே. கிருஷ்ணவேணி        படங்கள்: பா.கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism