Published:Updated:

கேபிள் கலாட்டா! 'பெப்சி' உமா ரிட்டர்ன்ஸ்!

ரிமோட் ரீட்டா

கேபிள் கலாட்டா! 'பெப்சி' உமா ரிட்டர்ன்ஸ்!

ரிமோட் ரீட்டா

Published:Updated:
##~##

விஜய் டி.வி 'சரவணன் - மீனாட்சி’ தொடர்ல சிரிப்பு வில்லியா வந்து அதகளம் பண்றாங்க குயிலி! 'கொடுமைக்கார மாமியாரைச் சந்திக்கலாமா..?’னு ஒரு எஸ்.எம்.எஸ் தட்டிவிட்டேன்.

 ''வாடி என் ரீட்டா செல்லம். இப்போ சென்னை திரைப்படக் கல்லூரி ஆடிட்டோரியத்துல இருக்கேன். சின்னத்திரை அவார்டு கமிட்டி அங்கத்தினரா நானும் இருக்கறதால, சின்னத்திரை விருதுகளுக்கான தேர்வு வேலைகள் நடந்துகிட்டிருக்கு. பிரேக்ல பேசிடுவோம்!''னு பாசம் கலந்த பதில் வர, ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ணினேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பொதுவா சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வரும்போது இங்கேயும் ஹீரோயினாவே நடிக்க விரும்புவாங்க. நான் அப்படி இல்லாம... அம்மா கேரக்டர்களையே பலமா நினைச்சேன். 'அண்ணாமலை’, 'மேகலா’, 'சொர்க்கம்’, 'முந்தானை முடிச்சு’, இப்போ 'சரவணன் - மீனாட்சி’னு தொடர்ந்து சேனல் ரசிகர்களோட தொடர்பிலேயே இருக்கேன். குறிப்பா, இந்த 'சாரதா’ கேரக்டருக்கு கிடைச்சிருக்குற வரவேற்பு உச்சமா இருக்குடி கண்ணு. 'சரவணன் - மீனாட்சி' டீமுக்குதான் நன்றி சொல்லணும். என் மருமகளா வர்ற ஸ்ரீஜா பொண்ணு... அவ என் பொண்ணு மாதிரி. நடிப்புல அவ்ளோ சமர்த்து!''னு ரீலுக்கு ஆப்போஸிட்டா ரியல் லைஃப் பேசினவங்ககிட்ட, குடும்பம் பற்றிக் கேட்டேன்.

கேபிள் கலாட்டா!    'பெப்சி' உமா ரிட்டர்ன்ஸ்!

''பூவிலங்கு படத்துல அறிமுகமாகி, ஆறு வருஷம் தொடர்ந்து சினிமாவில் பிஸியா இருந்தேன். அப்புறம் திருமணம் முடிய, அடுத்து 10 வருஷத்துக்கு விஷ§வல் மீடியா பக்கம் தலை காட்டவே இல்லை. 2000-ம் வருஷத்துல கே.பி சாரோட 'காதல் வாங்கி வந்தேன்’ டெலிஃபிலிம் மூலமா திரும்ப என்ட்ரி. கணவர் ஹரி ஷெட்டி, ஸ்டன்ட் டைரக்டர். ரெண்டு பசங்க. பொண்ணு த்ரிஷா ஷெட்டி, சட்டம் படிச்சுட்டிருக்கா. அடுத்த வருஷம் எங்க வீட்லயும் ஒரு அட்வகேட் இருப்பாங்க. பையன் த்ரிஷூல், கேட்டரிங் படிக்கிறான். ரெண்டு பேருமே மும்பையிலதான். 'ஷூட்’ இல்லாத நாட்கள்ல நான் பறந்துடுவேன்!''னு பெரிய கண்களை உருட்டினாங்க குயிலி!

லவ்லி வில்லி!

சின்னத்திரையில் இதிகாசம்!

ன் டி.வி-யில ஞாயிறுதோறும் காலை 10 மணிக்கு 'மகாபாரதம்’. ஏற்கெனவே பல ரூபங்களில் சின்னத்திரையில் 'மகாபாரதம்' வந்திருந்தாலும், இது நேரடியா தமிழில் 'ஷூட்’ செய்யப்பட்டு வரும் தொடர்.

''பிரமிக்க வைக்கும் செட், கிராஃபிக்ஸ், நேர்த்தியான கதாபாத்திர தேர்வு, வசனம்னு ஆரம்பிச்ச வேகத்துலயே எங்களை ஈர்த்திடுச்சு ரீட்டா!''னு வாசகிகளோட வாழ்த்துக்களை இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாகிட்ட சேர்த்தேன்.

கேபிள் கலாட்டா!    'பெப்சி' உமா ரிட்டர்ன்ஸ்!

''மனசுக்குள்ள ஒரு தீராத, சோர்வாகாத ஆர்வம் இருக்கணும் ரீட்டா. அப்போதான் இந்த மாதிரியான இதிகாசத் தொடர்களை எல்லாம் எடுக்க முடியும். கூடவே, எங்க புரொடக்ஷன் டீம் இந்த மெகா தொடரை எடுக்க காட்டிய ஆர்வமும் முக்கிய காரணம். கடந்த 25 வருஷங்கள்ல 50-க்கும் மேலான திரைப்படங்கள் டைரக்ஷன் செய்தாச்சு. ஆனாலும், இந்தத் தொடரை இயக்குற அனுபவம் ரொம்பவே புதுமை. மகாபாரதத்தை பொறுத்தவரைக்கும் பரவலா எல்லாருக்கும் தெரிந்த கதை. அதை விஷ§வல் டிரீம்ஸ்ல எப்படி புத்துணர்வா கொடுக்கப் போறோம்ங்கிறதுலதான் சவாலே..! பிரபஞ்சன் சாரோட வசனம், தேவா சாரோட மியூசிக், இன்னும் இன்னும் முக்கிய டெக்னீஷியன்களோட பங்களிப்பால... ரெண்டாவது எபிசோட்லயே பிரமாண்ட பாராட்டுகளைக் குவிச்சுருக்கு. பலரும், 'சினிமா பார்க்கற மாதிரியே இருக்கு'னு சொல்றாங்க. அதுவே எங்களோட வெற்றி!''னு சந்தோஷப்படுகிறார் சுரேஷ் கிருஷ்ணா.

இதிகாச இயக்குநர்!

'பெப்சி’ உமா ரிட்டர்ன்ஸ்!

கேபிள் கலாட்டா!    'பெப்சி' உமா ரிட்டர்ன்ஸ்!

ஜெயா டி.வி-யில் 'ஆல்பம்’ புதிய நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு ரீ-என்ட்ரி ஆகியிருக்காங்க 'பெப்சி’ உமா.

''உங்களை ரொம்பவே மிஸ் பண்ணினோம் தெரியுமா...''னு பேச்சை ஆரம்பிச்சேன்.

''உன்னோட அன்புக்கு ரொம்ப தேங்க்ஸ் ரீட்டா!''னு உற்சாகமா பேசத் தொடங்கினாங்க உமா.

''91-ல தூர்தர்ஷன்ல தொடங்கி... சன் டி.வி, கலைஞர் டி.வி-னு பயணப்பட்டேன். சின்னச் சின்ன பர்சனல் வேலைகளால தொடர்ந்து சேனல்ல என்ட்ரி கொடுக்க முடியாம இருந்தேன். இப்போ மீண்டும் ஜெயா டி.வி-யில 'ஆல்பம்’ நிகழ்ச்சி மூலமா உங்களை எல்லாம் பார்க்க வந்தது சந்தோஷமா இருக்கு!''னு சொன்னவங்க, நிகழ்ச்சி பற்றிப் பேசினாங்க.  

''இது, சுவாரசியமான புரோகிராம் ரீட்டா. செலிப்ரிட்டீஸ் தங்களோட சின்ன வயது அனுபவம் தொடங்கி, சமீபத்திய சந்தோஷம் வரைக்கும் தங்களோட 'புகைப்படங்கள்’ வாயிலா பேச வர்ற நிகழ்ச்சி. நடிகர் சிவகுமார் சார், கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்னு பயணத்தை தொடங்கியிருக்கோம். தொடர்ந்து மனசுக்குப் பிடிச்சவங்களோட 'ஆல்பத்தை’ பார்க்கலாம்!''னு புரொமோ பேசினாங்க உமா!

கீப் வாட்சிங் அண்ட் கீப் ஆன் வாட்சிங்!

படம்: ஜெ.வேங்கடராஜ்

வாசகிகள் விமர்சனம்         ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கேபிள் கலாட்டா!    'பெப்சி' உமா ரிட்டர்ன்ஸ்!

150

உறுத்தவில்லையா?

''அது ஒரு சாக்லேட் விளம்பரம். தந்தையோடு நடைபயிற்சி மேற்கொள்ளும் மகள், களைத்துவிட்ட தந்தையுடன் பூங்காவில் அமர்கிறாள். தன் கைப்பையில் இருந்து, குறிப்பிட்ட சாக்லேட்டை எடுத்து தந்தையிடம் நீட்ட... அவர் அதை சாப்பிட்டதும் புத்துணர்ச்சி பெற்று, 'இன்னும் இரண்டு சுற்று ஓடப்போகிறேன்' என்று ஓட ஆரம்பிக்கிறார். உடனே, விசிலடித்து தன் காதலனை வரவழைக்கும் அந்தப் பெண், அவனைக் கொஞ்சுகிறார். எல்லாம் காலக் கொடுமை! வயதான தந்தை, புத்துணர்ச்சி பெற்று சுறுசுறுப்பாக நடைபயிற்சி தொடர்வதற்கு வேறு காட்சிகளே தோன்றவில்லையா? இப்படிப்பட்ட காட்சிகள்... தயாரிப்பாளர்களை உறுத்தவில்லையா?'' என்று கொதிக்கிறார் விருகம்பாக் கத்தைச் சேர்ந்த எம்.எஸ்.பர்வீன் ஹாஜா.

தலையில் கவனம்!

''விஜய் டி.வி-யின் 'கிச்சன் சூப்பர் ஸ்டார்’ நிகழ்ச்சியில் ஸ்டார்கள் ஸ்டைலாக தலைமுடியை விரித்துப் போட்டுக் கொண்டு சமைக்கிறார்களே? இது செஃப் தாமு, செஃப் வெங்கடேஷ் பட் ஆகியோரின் கண்களில் படவில்லையா? ஹோட்டல் கிச்சன்களில் சமைக்கும் போதும், ஏன்... கேட்டரிங் படிக்கும் போதும் தலையில் பெரிய குல்லாய் போட்டுக் கொண்டுதானே சமைக்கிறார்கள்? இது சுகாதாரம் சார்ந்த விஷயம் என்பதால்... செஃப்கள் இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்'' என்று ஆதங்கப்படுகிறார் ஆலந்தூரைச் சேர்ந்த பிரேமலா ஸ்டீபன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism