Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

Published:Updated:
##~##

சிட் வீச்சுக்கு உயிரைப் பறிகொடுத்த காரைக்கால் வினோதினி; காதலனின் ஆசிட் வீச்சில் காயம்பட்டு மருத்துவமனையில் கிடக்கும் ஆதம்பாக்கம் வித்யா; தாய்மாமனாலேயே மயக்க மருந்து கொடுக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கோயம்புத்தூர் மாணவி; 'திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சீர்காழி மாணவி மதியழகி...

 - தினம் தினம் செய்தித்தாள்களைப் புரட்டும்போதும்... தொலைக்காட்சி ரிமோட்டை அழுத்தும்போதும்... மனது தூள் தூளாக உடைகிறதுதானே தோழிகளே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'நாட்டையும் நதிகளையும் பெண்களாக... ஏன், பெண்களை தெய்வமாகவே போற்றும் இந்தப் புண்ணிய பூமியில், ஏன் இந்தக் கொடுமைகள்?' என்று நினைக்கும்போது, 'பெண்களாக பிறப்பதே பாவம்' என்கிற அதே பழைய டயலாக் எட்டிப் பார்ப்பதைத் தவிர்க்கவே முடியவில்லை.

நமக்குள்ளே...

ஆனால்... இப்படி பெண்களைப் பயமுறுத்தி, வீட்டுக்குள்ளேயே அடைக்க நினைக்கும் வில்லன்களுக்கு சவால் விடும் வகையில், விதிவிலக்காக தொடர்ந்து சாதனை படைத்துக் கொண்டே இருக்கும் பெண்கள்தான், நமக்கெல்லாம் நம்பிக்கை நட்சத்திரங்கள்.

ஆட்டோ ஓட்டுநரின் மகளான பிரேமா, எத்தனையோ வசதி குறைவுகளுக்கும் நடுவில் தன்னுடைய விடாமுயற்சியால் சி.ஏ (சார்ட்டட் அக்கவுன்ட்) தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து, நாடு முழுக்க பாராட்டுகளைக் குவித்து வருகிறார்! என்றைக்கோ ஊரைவிட்டு மும்பைக்கு பிழைக்கப் போய்விட்ட, அவருடைய குடும்பத்தையே ஊருக்கு அழைத்து வந்து, அமைச்சர்கள், அதிகாரிகள் என்று அரசுப் பிரதிநிதிகள் புடைசூழ, பல்லக்கில் ஏற்றி வைத்து, பிரேமாவின் பூர்விக கிராமம் கொண்டாடி தீர்க்கும் காட்சிகளை பார்க்கும்போது... நம்பிக்கை மேலும் கூடுகிறது.

நமக்குள்ளே...

இவரைப் போலவே... 'திண்டுக்கல்' மதுராந்தகி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் - 1 தேர்வு எழுதி, முதல் முயற்சியிலேயே மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்து, கோட்டாட்சியர் என்கிற உயரிய பொறுப்பை ஏற்றிருப்பது... அந்த நம்பிக்கையை மளமளவென பல மடங்கு உயர்த்துகிறது!

இவர்கள் ஏந்தியிருக்கும் வெற்றிச்சுடர்.. 'இரக்கமற்ற அரக்கர்களே... உங்களின் ஆசிட், பெட்ரோல் எல்லாம் எங்களை ஒடுக்கிவிடாது. இன்னும் இன்னும் துளிர்த்துக் கொண்டே இருப்போம்' என்றே பிரகாசிக்கின்றன!

இந்த நம்பிக்கை நட்சத்திரங்களையே வழிகாட்டும் துருவ நட்சத்திரங்களாகக் காட்டி, நாளைய தலைமுறையின் நெஞ்சினில் நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சுவோம்! வீணர்கள் தாமாகவே சோர்ந்து, வீழ்ந்து போகட்டும்!

உரிமையுடன்

நமக்குள்ளே...


 

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism