Published:Updated:

ரொமான்ஸ் ரகசியங்கள்!

நாளாயினி, சீதை, கண்ணகி மற்றும் நீங்கள்!டாக்டர் ஷாலினி

ரொமான்ஸ் ரகசியங்கள்!

நாளாயினி, சீதை, கண்ணகி மற்றும் நீங்கள்!டாக்டர் ஷாலினி

Published:Updated:

ரொமான்ஸ் - 18

##~##

ரொமான்ஸ் விஷயத்தில், ஸ்மார்ட் பெண்களேகூட செய்துவிடும் 'ஸ்டுபிட் சாய்சஸ்' பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அந்த வரிசையில் நான்காவது தவறு, ஓர் உறவில் விழுந்துவிட்டால், பெண்கள் அதோடு தங்கள் வாழ்க்கை மொத்தமுமே கமிட் ஆகிவிட்டதாக நினைத்துவிடுகிறார்கள். அவன் எத்தனை தவறானவனாக... கொடியவனாக இருந்தாலும், அவனை விட்டால், தன் வாழ்க்கையே தொலைந்துவிடுமோ என்று பயந்து, சகிக்க முடியாத சமரச நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 இந்த நூற்றாண்டிலும், 'திருமணம் சொர்க்கத்தில் முடிவானது, முப்பத்து முக்கோடி தேவர் கள் முன்னிலையில், அக்னி சாட்சியாக ஏற்றுக் கொண்டது... ஏழேழு ஜென்மத்துக்குமான நிரந்தர உறவு' என்பது மாதிரியான பிரசாரங்களை மட்டுமே நம்பி துன்பங்களைச் சகித்துக் கொள்ளும் பெண்கள் இங்கே அதிகம். கணவன் பிசாசாகவே இருந்தாலும்... 'தெரியாத தெய்வத்துக்கு தெரிந்த பிசாசே மேல்' என்று காலம் முழுக்க பிசாசுடன் போராடிக் கொண்டிருப்பார்கள். காரணம், நம் கலாசாரம் அவர்களின் மூளையை ஒருவித நம்பிக்கைக்குள் (Indoctrinate) சிக்க வைத்திருப்பதுதான்.

இந்த மூளைச் சலவையின் மகிமையால் நம் பெண்களுக்கு ஓர் அப்பட்டமான அறிவியல் உண்மை தென்படுவதே இல்லை. அதாகப்பட்டது... திருமணம் என்கிற அமைப்பை நாம் 'ஆயிரம் காலத்து பயிர்' என்று ஏன் சொல்கிறோம்? அது நம்முடைய மரபணு அபிவிருத்திக்கு உண்டான ஒரு சமூக அமைப்பு என்பதினால்தான். மற்றபடி, 'கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்', 'ஈரேழு ஜென்மத்துக்கான உறவு' இத்யாதி... இத்யாதி... எல்லாமே சும்மா பெண்களை அடிமைகளாக்கி வைக்க பயன்படுத்தப்பட்ட தந்திரங்களே (Mind control technique).

ரொமான்ஸ் ரகசியங்கள்!

இது தெரியாமல் நம்மூர் பெண்கள் எல்லோரும் நளாயினி மாதிரியும் சீதை மாதிரியும் பத்தினி தெய்வங்களாக இருக்க முயற்சி செய்கிறார்கள். நளாயினி ஆகட்டும், சீதை ஆகட்டும்... ஏன், நம்மூர் கண்ணகியாக கூட இருக்கட்டுமே... இவர்கள் எல்லோருமே ஆயிரம் காலத்து பயிராகிய திருமணம் என்கிற 'ஜெனடிக் கேம்’-ல் (Genetic game)  தோற்றவர்கள்தானே? இந்தப் பெண்களை, இந்திய பெண்களுக்கு உதாரண ஸ்த்ரீகளாக முன் வைப்பதே தவறு. அப்படியிருக்க, இந்த தந்திரம் புரியாமல் தோத்தாங்குளித்தனமாக ஆட்டக்காய்களை நகர்த்துவது அதைவிட பெரிய முட்டாள்தனம். வெட்டியாக ஆண்களின் ஈகோவுக்கு பலியாகிவிடாமல், யார் எதைச் சொன்னாலும் அதில் உள்ள சூட்சமங்களை புரிந்துகொண்டு பகுத்தறிவோடு முடிவெடுக்க வேண்டுமே தவிர, அப்படியே மந்தை ஆடு மாதிரி பின் தொடர்வது ஆபத்தாகிவிடும்.

ஆண் - பெண் உறவில் பெண்கள் செய்யும் ஐந்தாவது அபத்தமான தவறு என்ன தெரியுமா..? என் குடும்பம் உசத்தியா, உன் குடும்பம் உசத்தியா என்கிற தேவையே இல்லாத தர பரிசோதனையும் அதை சார்ந்த வாக்குவாதமும்தான். இந்த உலகில் உள்ள எல்லா குடும்பங்களிலுமே யாராவது பெரிதாக சாதித்தவர் இருப்பார். எதையுமே சாதிக்காமல் குடி, போதை, வேண்டாத பழக்க வழக்கங்கள் என்று அவமானம் தேடித் தந்தவர்களும் இருப்பார்கள். எல்லா குடும்பத்திலும் மிக பணக்காரராக சிலரும் எதுவுமே இல்லாதவராக சிலரும் இருக்கத்தான் செய்வார்கள். அவ்வளவு ஏன், ஒரே மனிதர் வெவ்வேறு மனிதர்களிடம் வெவ்வேறு முகங்களைக் காட்டுவதும் உண்டு. மகனிடம் மிகவும் உருக்கமாக நடந்துகொள்ளும் அதே தாய், மருமகளிடம் மிகவும் மோசமாக நடந்துகொள்வதும் உண்டு. மனைவியிடம் அலட்சியமாக நடந்துகொள்ளும் ஆசாமி, மருமகளிடம் கனிவாக இருப்பதுண்டு. ஆக எல்லோருக்குமே ஓட்டை உடைசல்கள் இருக்கலாம். அதை பெரிதுபடுத்திக்கொண்டு இருப்பது அபத்தம், சிறுபிள்ளைத்தனம்.

'யார் எப்படியோ, நான் என் வாழ்க்கை எனும் ஆட்டத்தை சாமர்த்தியமாக ஆடி முடித்துக் கொள்கிறேன்' என்று காரியத்தில் மும்முரமாக இருக்க வேண்டுமே தவிர, சில்லறை விஷயங்களில் கவனம் செலுத்தி, அதை ஊதி பெரிதாக்கி, அதற்காக சண்டை போட்டுக்கொண்டு இருப்பது வீண்.

அடுத்த முக்கிய ஆறாவது மிஸ்டேக்... யார் யார் பேச்சையோ கேட்டுக்கொண்டு துணைவரை இம்சிப்பது.

- நெருக்கம் வளரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism