''சிம்பிள் ஹவுஸ் வொய்ஃப், சிம்பிள் அம்மா... இதுதான் என் எல்லைனு இருந்தேன். நம்பவே முடியல... இன்னிக்கு என் கைகளில் தேசிய விருது!''

- கண்கள் மூடி ஒரு நொடி லயிக்கிறார் பூர்ணிமா ராமசாமி. 2012-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில், 'சிறந்த ஆடை வடிவமைப்பு'க்கான விருதை, டைரக்டர் பாலாவின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'பரதேசி’ படத்துக்காகப் பெற்றிருக்கிறார், பூர்ணிமா.

''நான் 'நாயுடு ஹால்’ குடும்பத்துப் பெண். சென்னையில பிஸினஸ் மேனேஜ்மென்ட் படிச்சுட்டு, எங்களோட நாயுடு ஹால் கார்மென்ட்ஸ் வேலைகளை அண்ணனோட சேர்ந்து கவனிச்சுட்டிருந்தேன். சின்ன வயசுல இருந்தே நிறைய ஃப்ரெண்ட்ஸ் உண்டு. நிறைய செலிப்ரிட்டி

குடும்பத்து வாரிசுகளும் அதுல இருப்பாங்க. அப்படித்தான் நடிகர் சூர்யாவோட தங்கை பிருந்தாவும் தோழி. ரெண்ணு பேரும் ஸ்கூல்மேட்ஸ். அவங்க மூலமா டைரக்டர் பாலாவோட மனைவி மலர், எனக்குத் தோழி ஆனாங்க. ரொம்ப அன்பானவங்க. அவங்க அறிமுகப்படுத்த, பாலா அண்ணாவோட அன்பும் கிடைச்சுது!''

- பூர்ணிமாவின் பேச்சில் பக்குவம்.

''கார்மென்ட்ஸ் ஷாப் அனுபவத்தால ஆரம்பத்துல இருந்தே காஸ்ட்யூம் டிசைனிங்ல ஆர்வமா இருப்பேன். என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் திருமணங்களுக்கு எல்லாம் நான்தான் காஸ்ட்யூம் டிசைனர். இந்த ஆர்வத்தைப் பார்த்த மலர், 'சார் எடுக்கற படங்களில் நீங்க காஸ்ட்யூம் டிசைனரா வொர்க் பண்ணலாமே’னு சொன்னாங்க. 'பரதேசி’ வாய்ப்பு உறுதியாச்சு.

- முகத்தில் பரவசம் பரவுகிறது பூர்ணிமாவுக்கு.

''பரதேசி, ஒரு பீரியட் ஃபிலிம். ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. கமிட் ஆனதுல இருந்து ஒவ்வொரு நாளும் பயம். அந்த சமயத்துல எல்லாம் எங்க டீம்ல எல்லாருமே சப்போர்ட்டிவா இருந்தாங்க. புது விஷனோட பீரியட் ஸ்டோரிக்கான ரிசர்ச்ல இறங்கினோம். ப்ரீ இண்டிபென்டன்ட் புக்ஸ், சவுத் இண்டியன் ஹிஸ்டாரிக்கல் புக்ஸ்னு தேடி எடுத்து ஆராய்ந்தோம். அது 1930-க்கு முந்தைய காலகட்டத்துல வாழ்கிற அனுபவமாவே இருந்துச்சு. அக்ஸசரீஸுக்கு காஞ்சிபுரம், சென்னை... ஸ்வெட்டருக்காக ஊட்டினு நிறைய பயணங்களும் இருந்துச்சு. ஒவ்வொரு கேரக்டர்களோட ஆடைக்கும் 10 - 15 வெரைட்டிகளில் டிசைன் செய்து பாலா அண்ணாகிட்ட காட்டுவோம். அதுல இருந்து ஷார்ப்பா செலக்ட் பண்ணுவாங்க'' என்றவர்,

''வறுமை சூழல்ல நகரும் கதையில் கேரக்டர்கள் யாரும் தங்க நகைகள் அணிந்திருக்க மாட்டாங்க. பித்தளை, வெள்ளினு ஏழைகளோட நகைகளை வரலாற்றுப் பக்கங்களில் பார்த்து உருவாக்கினோம். லொக்கேஷன் பார்க்கப் போனப்போ, சிவகங்கையில ஒரு பெரியவர் காதுல வித்தியாசமான ஒரு ரிங் மாட்டியிருந்தார். அதேபோல நாங்க டிசைன் செய்த ரிங் டைப் கம்மலைதான், வில்லன் கேரக்டர்ல வர்ற ஜெர்ரி சார் காதுல மாட்டிவிட்டோம். ஹீரோயின்ஸ்

வேதிகா, தன்ஷிகா ரெண்டு பேரையும் எங்களோட காஸ்ட்யூம்ஸால அந்தக் காலத்துப் பெண்களாவே மாத்தினோம். ஹீரோ அதர்வா காஸ்ட்யூம், பாலா அண்ணாவோட செலக்ஷன். அந்த சணல் கோணியில ஆடைகளை ரெடி செய்தப்போ, கதை நடக்குற காலத்தை அது இயல்பா வெளிப்படுத்தினதை உணர்ந்தோம்'' என்று அனுபவங்களைப் பகிர்ந்த பூர்ணிமா, விருது அறிவிப்பின்போது நம்ப முடியாத ஆச்சர்யத்தோடு இருந்திருக்கிறார்.

''படம் வெளியாகி ரெஸ்பான்ஸ் எதிர்பார்த்து காத்துட்டு இருந்தப்போ, 'உனக்கு நேஷனல் அவார்டு!’னு என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் ஐஸ்வர்யா தனுஷ்கிட்ட இருந்து போன். கிண்டலடிக்கிறானு இருந்தேன். அடுத்ததா... படத்தோட ஹீரோயின் வேதிகா வாழ்த்துச் சொன்னாங்க. என்னால நம்பவே முடியல. மலர்கிட்ட இருந்தும் போன் வரவே... நம்பிக்கையே வந்துச்சு. பாலா அண்ணாவை பார்த்து நன்றி சொன்னேன். 'உனக்கு கிடைக்கும்கிறது நான் எதிர்பார்த்ததுதான்!’னு சொல்லி வாழ்த்தினாங்க. 'அறிமுகமான முதல் படத்துலயே தேசிய விருது'னு பாராட்டுகள் தொடர்ந்துட்டு இருக்கு. இதுக்குக் காரணமா இருந்த காஸ்ட்யூம் ஹெட் செல்வம் அண்ணா, வாய்ப்பு கொடுத்த பாலா அண்ணா, என்னோட தோழி மலர்... இவங்க எல்லோரையும்தான் இந்த நேரம் நினைக்கத் தோணுது!

படத்துல பிஸியா வேலை செய்துட்டு இருந்தப்போ, குடும்பத்துக்கான என் நேரங்கள் குறைஞ்சாலும் அம்மா, கணவர் திருமகன், ஐந்து வயது குட்டிப் பெண் சமன்னா எல்லோரும் எனக்குக் குறையாத அன்பைக் கொடுத்து உற்சாகப்படுத்தினாங்க. அதுக்கு கிடைச்ச முதல் பரிசை, எல்லாரும் சேர்ந்து கொண்டாடிக்கிட்டிருக்கோம். சின்னதா ஒரு வட்டத்துக்குள்ள சிம்பிளா வாழ்ந்துகிட்டிருந்த எனக்கு இந்தப் பரிசு பெரும் பயணத்துக்கான உந்து சக்தியை விதைக்கவும் செய்திருக்கு...''

- கனவுகள் மிதக்கும் கண்களை மலர்த்துகிறார் பூர்ணிமா!

- ம.மோகன் படம்: ஜெ.தான்யராஜு