Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

Published:Updated:
##~##

பாகி

நமக்குள்ளே...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்தானில் மதத் தீவிரவாதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து, பெண் கல்வி முக்கியத்துவம் குறித்து வலியுறுத்திய 15 வயது மாணவி மலாலா சுடப்பட்ட செய்தி, ஒட்டுமொத்த உலகத்தையும் உலுக்கியது. சிகிச்சைக்காக இங்கிலாந்து கொண்டு செல்லப்பட்ட மலாலா, பிரமிக்க வைக்கும் மனஉறுதியோடு மீண்டெழுந்து, இதோ... புத்தகங்களை ஏந்தியபடி மறுபடியும் பள்ளிக்கு புறப்பட்டுவிட்டாள். சொந்த நாட்டில் மறுபடியும் ஆபத்து வருமென்பதால், லண்டனிலேயே தங்கிப் படிக்கப் போகிறாள்.

சிலபல ஆண்டுகளுக்கு முந்தைய நிலையோடு ஒப்பிட்டால்... பெண் கல்விக்கு அப்படியன்றும் தடைகள் இல்லை. உலகத்தோடு ஒட்ட விரும்பாதவர்களின் ஆளுகையில் இருக்கும் சில தேசங்களைத் தவிர!

இந்தியாவைப் பொறுத்தவரை - அதிலும் தென்னிந்தியாவில், 'வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்த’ விந்தை மனிதர்களின் பிடிவாதத்தை பாரதியார் சாடாமலிருந்திருந்தால்... தந்தை பெரியார் எதிர்த்து ஒரு சிங்கம்போல் கர்ஜனை செய்யாமலிருந்திருந்தால்... இங்கேயும்கூட எந்த அளவுக்கு பெண் கல்விக்கான சுதந்திரம் கிடைத்திருக்கும் என்பது சந்தேகமே! 'ஒரு பெண்ணின் சுயமரியாதை உணர்வுக்கே, படிப்பறிவுதான் உரம் போடும்' என்பதை அறிந்து சொன்ன தீர்க்கதரிசி பெரியார்.

நமக்குள்ளே...

இங்கே, நம்மைச்சுற்றி நேரடியாக பெண் கல்வியை எதிர்க்கும் 'தாலிபன்கள்' யாரும் இல்லைதான். ஆனால், கற்கப்போகிற வழியில் 'காதல்’ என்கிற பெயரால் திராவகம் ஏந்தி; கல்விக் கூடங்களில் 'ஆசிரியர்’ எனும் முகமூடி அணிந்து; சமூக வலைதளங்களில் 'ஃப்ரெண்ட்' என ஈர்த்து, பின்னர் விகார முகம் காட்டி மிரட்டி... இப்படி பல ரூபங்களில் வக்கிரர்களை நம் சமுதாயம் வளர்த்துக் கொண்டும்தானே இருக்கிறது!

தோழிகளே... யாருடைய பாதுகாவலையும் நம்பியிராமல்... நமக்கு நாமே தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் வளர்த்துக்கொள்வதுதான் நமக்கான முதல் தேவையாக இருக்கிறது. 'சாதிக்கும் துணிவோடு வெளி உலகை சந்திக்கும் எந்த ஒரு பெண்ணும் தனித்தனி துளி அல்ல. அத்தனைபேரும் ஒன்று சேர்ந்தால் யாரையும் எதிர்த்து நிற்கும் பெருங்கடல்' என்று உள்ளத்தால் உறுதியோடு ஒன்றிணைவோம். நம் வீட்டு பெண் குழந்தைகள் அத்தனை பேருக்கும் அந்த உணர்வைக் கொடுப்போம். கற்கப் புறப்படும் பெண் குழந்தைகளின் மகத்துவத்தை, ஆண் குழந்தைகளுக்கும் அன்றாடம் சொல்லிச் சொல்லி புரிய வைப்போம்.

மலாலாக்கள் நம் தோட்டமெங்கும் மலர்ந்து மணம் வீசட்டும்!

உரிமையுடன்

நமக்குள்ளே...

ஆசிரியர்